Latest Updates
-
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன?
2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எப்போது? இது இந்தியாவில் தெரியுமா?
Lunar Eclipse 2023: பொதுவாக கிரகணங்கள் என்பவை ஒரு வானியல் நிகழ்வாகும். ஆனால் இந்த கிரகணங்கள் மங்களகரமானவையாக கருதப்படுவதில்லை. ஒரு ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2 சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திர கிரகணம்.
இதில் 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் ஒரு ஹைப்ரிட் சூரிய கிரகணமாக இருந்தது. இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி நிகழவுள்ளது.

அதே வேளையில் 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 5 ஆம் தேதி நிகழவுள்ளது. இது பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும். இந்த சந்திர கிரகணம் புத்த பௌர்ணமி நாளில் நிகழ்கிறது. இதனால் இந்த சந்திர கிரகணம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இப்போது 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எப்போது, அதன் நேரம் மற்றும் இது உலகின் எந்த பகுதிகளில் தெரியும், இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியுமா என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடைகளைக் காண்போம்.
2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: தேதி மற்றும் நேரம்
2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 05 ம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. அதுவும் இந்த சந்திர கிரகணமானது இரவு 8.44 மணிக்கு தொடங்கி அதிகாலை 01.01 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணம் சுமார் 4 மணிநேரம் 18 நிமிடங்கள் வரை நீடித்திருக்கும். இந்த சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும்.
2023 முதல் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
எப்படி 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லையோ, அதேப் போல் முதல் சந்திர கிரகணத்தையும் இந்தியாவில் காண முடியாது. ஆனால் இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள மக்கள் காணலாம்.
பெனும்பிரல் சந்திர கிரகணம் என்றால் என்ன?
சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழும் ஒரு வானியல் நிகழ்வாகும். இந்நிகழ்வின் போது சூரியனின் ஒளி சந்திரனின் மேற்பரப்பை அடைய விடாமல் பூமி தடுக்கும். பொதுவாக சந்திர கிரகணமானது முழு நிலவு நாளில் நிகழும்.
சந்திர கிரகணத்தில் மூன்று வகைகள் உள்ளன. அவை முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம் மற்றும் பெனும்பிரல் சந்திர கிரகணம். இதில் 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம். இந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி கடக்கும் போது சூரியனின் ஒளியை மறைத்து சந்திரனின் மேற்பரப்பில் நிழலை விழச்செய்யும் போது ஏற்படுகிறது.



Click it and Unblock the Notifications












