Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
12 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Lunar Eclipse 2023: ஒரு ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழும். கிரகணங்கள் ஒரு வானியல் நிகழ்வாக இருந்தாலும், ஜோதிடத்தில் ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது. கிரகணங்களானது மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 05 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணமானது துலாம் ராசியின், சுவாதி நட்சத்திரத்தில் நிகழவுள்ளது.

அதே சமயம் சந்திர கிரகணத்தன்று சதுர்கிரக யோகமும் உருவாகவுள்ளது. இந்த யோகமானது 12 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் உருவாகிறது. 4 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சதுர்கிரக யோகத்தின் போது, சூரியன், குரு, ராகு மற்றும் புதன் ஆகிய 4 கிரகங்களும் மேஷ ராசியில் இருக்கும்.
இதனால் இந்த சந்திர கிரகணமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த கிரகணத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சிறப்பானதாக இருக்கும். இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நற்பலன்களை வாரி வழங்கும். இக்காலத்தில் திடீரென்று நல்ல பண ஆதாயம் கிடைக்கும். காதலிப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். உங்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இக்காலத்தில் திட்டமிட்டு செய்யும் வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் மங்களகரமானதாக இருக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சதுர்கிரக யோகத்தினால், குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
