Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Lunar Eclipse 2023: ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்..
Lunar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 05 ஆம் தேதி நிகழவுள்ளது. அதுவும் இந்த கிரகணமானது மே 05 ஆம் தேதி இரவு 08.44 மணிக்கு தொடங்கி, மே 06 ஆம் தேதி 01.01 மணிக்கு முடிவடைகிறது. அதுவும் இந்த சந்திர கிரகணமானது பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும்.
2023 ஆம் ஆண்டின் முதல் சந்தர கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. இதனால் இந்தியாவில் சூதக் காலம் இல்லை. ஜோதிடத்தின் படி, சந்திர கிரகணத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் கெடுபலனையும் பெறலாம். இப்போது ஆண்டின் முதன் சந்திர கிரகணத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! சந்திர கிரகணமானது உங்கள் உறவுகளில் கவனம் செலுத்துவதற்கான நேரத்தைக் கொண்டு வரும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சில பதட்டங்களை அனுபவிக்கக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நிதி நிலையில் மாற்றங்களைக் கொண்டு வரும். அதில் சிலர் எதிர்பாராத வருமானத்தை அல்லது எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். மொத்தத்தில் உஷாராக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சந்திர கிரகண நாளில் உங்கள் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இந்நாளில் மற்றவர்களுடன் பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் செயல்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சுருக்கமாக கூற வேண்டுமானால், கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
சந்திர கிரகணமானது கடக ராசிக்காரர்களின் வீட்டுச் சூழலில் மாற்றங்கள் அல்லது பிரச்சனைகளைக் கொண்டு வரும். இதைத் தவிர்க்க இந்நாளில் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது தொழிலில் மாற்றத்தைக் கொண்டு வரும். பணியிடத்தில் எதிர்பாராத வாய்ப்புகள் அல்லது சவால்களை சந்திக்க நேரிடும். தொழிலில் வெற்றி காண வேலையில் முழு கவனத்தை செலுத்த முயற்சிக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீகத்தில் அதிக ஆர்வத்தை அனுபவிப்பார்கள். தினசரி பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை சந்திப்பார்கள். இந்நாளில் இவர்கள் தங்களின் உள்ளுணர்வை கேட்டு நடந்தால், நற்பலனைப் பெறலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். அதுவும் தனிப்பட்ட மற்றும் தொழில் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மனம் விட்டு பேசுவதால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் தங்களின் உணர்ச்சி மற்றும் மனநிலையில் மாற்றங்களை அனுபவிப்பார்கள். இக்காலத்தில் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
சந்திர கிரகணம் தனுசு ராசிக்காரர்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் சிந்தனை செயல்முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வரும். தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்த இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.
மகரம்
சந்திர கிரகணத்தால் மகர ராசிக்காரர்கள் தங்களின் தனிப்பட்ட உறவுகளில் எதிர்பாராத மாற்றங்களை சந்திப்பார்கள். ஆரோக்கியமற்ற உறவுகளில் இருப்பவர்கள், உறவை முறிக்க நினைக்கலாம். தங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எந்த முடிவையும் எடுப்பீர்கள்.
கும்பம்
சந்திர கிரகணத்தால் கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் சில மாற்றங்களைக் காணலாம். வேலையில் எதிர்பாராத வாய்ப்புக்கள் மற்றும் மாற்றங்களை சந்திக்கக்கூடும். இலக்குகள் மற்றும் லட்சியங்களை அடைய சில நடவடிக்கைகளை எடுக்க இது சிறந்த காலமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் அதிகமாக உணர்ச்சிவசப்படலாம். தேவையில்லாத விஷயங்களை நினைத்து பயப்படலாம் அல்லது தீர்க்க முடியாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதைத் தவிர்க்க மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications