Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
மே மாதம் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது... உங்க ராசியும் இதுல இருக்கா?
Lucky Zodiac Signs In May 2023: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து, ஒருவருக்கு நடக்கவிருக்கும் நன்மை, தீமைகள் உள்ளன. ஒவ்வொருவருமே ஒரு புதிய மாதத்தில் நுழையும் போது, அந்த மாதம் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் மே மாதத்தில் நுழைந்துள்ளோம். இந்த மே மாதத்தில் கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்கள் அட்டகாசமான பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் இம்மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். மே மாதத்தில் இவ்வளவு நற்பலன்களைப் பெறவுள்ள அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதமானது மிகவும் நம்பிக்கையான மாதமாக இருக்கும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும். அனைத்து வேலைகளையும் சிறப்பாக முடிக்க முடியும். தொழிலில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் மே 15 ஆம் தேதிக்கு பின் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மே மாதத்தில் ஒவ்வொரு விஷயமும் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். அலுவலகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. நல்ல பண ஆதாயம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவு, அமைதியாகவும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மே மாதத்தில் பல சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் சில பிரச்சனைகளை அலுவலகத்தில் சந்தித்தாலும், அந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இம்மாதம் நற்பலன்களைத் தரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மே மாதத்தில் பல அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சனி மற்றும் செவ்வாயின் நிலையால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல மாற்றத்தைக் காணலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்குவதோடு, நல்ல லாபத்தையும் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மே மாதம் நல்ல பலனை அளிக்கும் மாதமாக இருக்கும். முக்கியமாக தொழிலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெற வாய்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மே மாதத்தில் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications