Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஏப்ரல் மாசம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Lucky Zodiac Signs In April 2023 In Tamil: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைக் கொண்டு பலன்கள் மாறுபடும். அதுவும் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றவுள்ளன.
பலருக்கும் ஒரு புதிய மாதம் பிறக்கும் போது, அந்த மாதம் எப்படி இருக்கும், வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படுமா, தொழில் ரீதியாக சிறப்பாக இருக்குமா என்பன போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும்.

இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள ஜோதிடம் பெரிதும் உதவி புரியும். ஜோதிடத்தைக் கொண்டு, ஒரு மாதத்தில் கிரகங்களின் நிலைகளைக் கொண்டு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் 2023 ஏப்ரல் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாக வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலைகள் ஏப்ரல் மாதத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக இம்மாதத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
வியாபாரம் செய்யும் மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஏப்ரல் மாத கிரக நிலைகளால் அட்டகாசமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுலையில் இருந்த வேலைகள் முடிக்கப்படும் மற்றும் சிக்கிய பணம் இந்த மாதத்தில் கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களுக்கு பின் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் இம்மாதத்தில் நண்பர்களின் உதவியால் பெரிய லாபத்தைக் காண்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். எந்த துறையில் வேலை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். இதுவரை தடைபட்டு வந்த வேலைகள் இந்த ஏப்ரல் மாதத்தில் தடையின்றி வெற்றிகரமாக முடிக்கப்படும். நீதிமன்ற வழக்குகளில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், இதிலிருந்து தப்பிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



