Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த 6 இடங்களில் ஒன்றில் மச்சம் உள்ள ஆண்கள் அரசாள பிறந்தவர்களாம்... உங்க உடம்புல இந்த மச்சம் இருக்கா?
Lucky Moles on Male Body: ஜோதிடம் பல நூற்றாண்டுகளாக மக்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அடையாளத்துக்கும் ஒரு அர்த்தமுண்டு, அந்த வகையில் நம் உடலில் உள்ள மச்சங்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. மச்சங்கள் பல கலச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
அதேசமயம் மச்சங்கள் ஆண் மற்றும் பெண் உடலில் இருக்குமிடத்தைப் பொறுத்து அதன் மாறுபடும். அந்த வகையில் ஆண் உடலில் உள்ள சில மச்சங்கள் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது. கிட்டதட்ட அனைவருக்குமே உடலில் மச்சங்கள் இருக்கும், அவை உடலில் எங்கும் தோன்றலாம்.

மச்சங்கள் பொதுவாக பாதிப்பில்லாதவை, ஆனால் சில காலப்போக்கில் மாறக்கூடும், எனவே அவற்றை எப்போதும் தீவிரமாகக் கவனிப்பது முக்கியம். ஆண்களின் உடலில் பல்வறு இடங்களில் இருக்கும் மச்சங்களின் அர்த்தம் என்ன மற்றும் எந்தெந்த இடங்களில் மச்சம் இருப்பது அதிர்ஷ்டம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வலது கன்னத்தில் மச்சம்
ஒரு ஆணின் வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், அது பெரும்பாலும் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் வேலை மற்றும் தொழிலில் பெரிய வெற்றியை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
இடது கன்னத்தில் மச்சம்
இடது கன்னத்தில் உள்ள மச்சம் உணர்ச்சிரீதியாக சமநிலையான ஒரு ஆணின் அடையாளமாக இருக்கலாம். இந்த இடத்தில் மச்சம் உள்ளவர்கள் அக்கறையுள்ளவராகவும், பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள், மேலும் அவர்கள் அமைதியான மற்றும் பகுத்தறிவு மனநிலையுடன் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணலாம்.
தாடையில் மச்சம்
ஆண்களின் தாடையில் மச்சம் இருப்பது பெரும்பாலும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வலுவான மன உறுதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த மச்சம் உள்ள ஆண்கள் வெற்றிகரமானவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுபவராக இருக்கலாம், மேலும் அவர்கள் மனஉறுதியுடன் இருப்பதால் பெரும்பாலும் தங்கள் கனவுகளை அடைவார்கள்.
உள்ளங்கையில் மச்சம்
உள்ளங்கையில் மச்சம் இருப்பது அதிர்ஷ்டமாகும், குறிப்பாக வலது கையில் இருப்பது, செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக நம்பப்படுகிறது. உள்ளங்கையில் மச்சம் உள்ள ஆண்கள் நிதி வெற்றியை அனுபவிக்கலாம் மற்றும் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்யலாம். இது பெரும்பாலும் பணத்தை நன்றாக நிர்வகிக்கும் திறன் கொண்ட ஒரு ஆணுடன் தொடர்புடையது.
விரலில் மச்சம்
விரலில் உள்ள மச்சம் படைப்பாற்றல் மற்றும் அசாத்திய திறமையைக் குறிக்கும். விரல்களில் மச்சம் உள்ள ஆண்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். கலைத் திறமையாக இருந்தாலும் சரி அல்லது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தனித்துவமான வழியாக இருந்தாலும் சரி, விரலில் உள்ள மச்சம் அவர்களின் முயற்சிகளில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறப்படுகிறது.
கழுத்தில் மச்சம்
கழுத்தில் மச்சம் இருப்பது, குறிப்பாக இடது பக்கத்தில் இருப்பது, வசீகரம் மற்றும் கவர்ச்சியின் அடையாளமாக நம்பப்படுகிறது. இந்த மச்சம் உள்ள ஆண்கள் பிரபலமானவர்களாகவும், அனைவருக்கும் பிடித்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள், பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் நேர்மறையான கவனத்தை ஈர்க்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
