Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
2024-ல் இந்த இந்த 5 ராசி பெண்களுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2024: 2024 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கப் போகிறோம். 2023 உங்களுக்கு எப்படிப்பட்ட ஆண்டாக இருந்தாலும் வரப்போகிற புதிய ஆண்டில் கிரக நிலைகள் உங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவங்களையும், வாய்ப்புகளையும் கொடுக்கும்.
2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தையும், சில ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகிறார்கள். குறிப்பாக சில ராசிகளில் பிறந்த பெண்கள் வரப்போகிற ஆண்டில் அளவில்லாத அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.

இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் 2024-ல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஒவ்வொரு அடியிலும் மகிழ்ச்சி அவர்களைப் பின்தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேஷம்
மேஷம் ராசி பெண்களுக்கு 2023 அவ்வளவு பிரகாசமான ஆண்டாக இருந்திருக்காது, இந்த ஆண்டு நீங்கள் பெரும்பாலும் பலவீனமாக உணர்ந்திருப்பீர்கள், ஆனால் வரப்போகிற ஆண்டு உங்களின் இந்த நிலையை மாற்றப்போகிறது. வரவிருக்கும் ஆண்டில், உங்கள் எல்லா இலக்குகளையும் நிறைவேற்றவும், பல வெற்றிகளை அனுபவிக்கவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
மற்றவர்கள் உங்கள் முடிவுகளில் தலையிட்டு உங்களின் அதிர்ஷ்டத்தை பாதிக்க அனுமதிக்காதீர்கள். 2024 இல் உங்கள் நம்பிக்கைகளுக்கு உண்மையாக இருங்கள், இது உங்களின் முக்கியமான தருணமாக இருக்கலாம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் உங்களின் திறமைகளின் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கான ஆண்டாகும்.
தனுசு
தனுசு ராசிப் பெண்களே இந்த ஆண்டு உங்களின் சாதனைகள் உங்களுக்கு பெரிய புகழைத் தரப்போகிறது. இந்த ஆண்டு உங்களின் சாதனைகளால் உங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் மேலும் ஆதரவிற்காக காத்திருக்காமல் சிக்கல்களைச் சமாளிக்கத் தயாராக இருப்பதை அனைவருக்கும் காட்டுங்கள். இது உங்களுக்கு கடினமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.
உங்களிடம் மிகப்பெரிய பலம் இருப்பதை நீங்கள் உணரும்போது, எல்லா தடைக்கற்களும் படிக்கற்களாக மாறும். உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. 2024 இல், நீங்கள் வெற்றிபடிக்கட்டில் உச்சத்தை அடைவீர்கள், மேலும் எல்லா அச்சங்களையும் ஒதுக்கித் தள்ள முடியும். இந்த ஆண்டு நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்பதை உலகிற்கு நிரூபிக்கும்.
மகரம்
2024 உங்களுக்கான ஆண்டு. உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள், அது உங்களுக்கு வெற்றிக்கான பாதையை அழைத்துச் செல்லும். உங்கள் ஆசைகளும், இலட்சியங்களும் சிலருக்கு மிக உயர்ந்ததாக தோன்றினாலும், இந்த ஆண்டு நீங்கள் அதனை அடைவதன் மூலம் அவர்களை ஆச்சரியப்பட வைக்கலாம்.
நீங்கள் சிறந்தை அடைய தகுதியானவர். எனவே உங்கள் இலட்சியங்களை வளர்த்து, உழைத்து, அதனை அடைய போராடுங்கள். உங்களிடம் மிகப்பெரிய ஆற்றல் உள்ளது, எனவே உங்கள் வாழ்க்கையை இந்த ஆண்டு அற்புதமாக வாழுங்கள்.
துலாம்
துலாம் ராசி பெண்கள் 2024-ல் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். அவர்கள் உள்ளார்ந்த வசீகரம் மற்றும் கருணையுடன், சாதகமான வாய்ப்புகள் மற்றும் அதிர்ஷ்டமான சந்திப்புகள் நிறைந்த ஒரு வருடத்தை அனுபவிப்பார்கள். இந்த ஆண்டின் கிரக நிலைகள் உங்களுக்கு புதிய தொடக்கங்களுக்கும் வழி வகுக்கும். இந்த இணக்கமான ஆற்றல் தொடர்ச்சியான அதிர்ஷ்டமான நிகழ்வுகள் மற்றும் எதிர்பாராத ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.
இந்த ஆண்டு துலாம் ராசி பெண்கள் பல்வேறு சூழ்நிலைகளை எளிதாகவும் நேர்த்தியாகவும் வழிநடத்துவார்கள். அவர்களின் இராஜதந்திர இயல்பு மோதல்களை சிரமமின்றி தீர்க்கவும் இணக்கமான தொடர்புகளை உருவாக்கவும் அனுமதிக்கிறது. மேலும் அவர்களின் உறவுகளிலும் அன்பு மற்றும் பாசத்தின் எழுச்சியை அனுபவிப்பார்கள்.
மீனம்
மீன ராசி பெண்களே உங்கள் கடின உழைப்புக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை என்றால் விரக்தியடைய வேண்டாம். 2024-ல் உங்கள் அதிர்ஷ்டம் மாறப் போகிறது, இப்போது உங்கள் கடின உழைப்பின் பலனை நீங்கள் நிச்சயமாகப் பெறுவீர்கள்.
உங்கள் மனைவி மற்றும் பிற உறவினர்களுடனான உறவுகள் மேம்படும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும், உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் வேலையில்லாமல் இருந்தால் 2024-ல் வேலை கிடைக்கும். மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
