Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
பிறவியிலேயே குபேரரின் ஆசியைப் பெற்ற ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? உங்க ராசியும் இதுல இருக்கா?
Lord Kubera Favourite Zodiac Signs: இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு அடுத்தப்படியாக செல்வத்தின் கடவுளாக கருதப்படுபவர் தான் குபேரன். லட்சுமி தேவியுடன் குபேரனையும் வணங்கி வந்தால், அந்த வீட்டில் செல்வத்திற்கும், உணவுக்கும் பஞ்சம் ஏதும் இருக்காது.
எப்போதும் குன்றாத செல்வத்தைக் கொண்ட குபேரனை தினமும் வழிபட்டு வந்தால், அவரின் அருளால் வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்திருக்கும். அதோடு வீட்டில் உள்ள கஷ்டங்களும், தொல்லைகளும் நீங்கும்.

வேத ஜோதிடத்தின் படி, செல்வத்தின் கடவுளான குபேர பகவானின் அருள் சில ராசிக்காரர்களுக்கு பிறவியில் இருந்தே இருப்பதாக கூறப்படுகிறது. குபேரனின் அருளைக் கொண்டிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பண பிரச்சனைகளையே சந்திக்கமாட்டார்கள்.
ஒருவேளை பணப் பிரச்சனை வந்தாலும், உடனே சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு குபேர பகவானின் அருள் உள்ளது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் என்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு குபேரரின் சிறப்பான அருள் எப்போதும் இருக்கும். குபேரரின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். எந்த ஒரு வேலையை கையில் எடுத்தாலும், அதை வெற்றிகரமாக முடிக்க கடினமாக உழைப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பண பிரச்சனையே வராது. அப்படியே வந்தாலும், அதை எளிதில் சமாளிப்பார்கள். எந்த வேலையில் முதலீடு செய்தாலும் வெற்றி கிடைப்பதோடு, பன்மடங்கு லாபமும் கிடைக்கும்.
விருச்சிகம்
குபேரரின் அருளைப் பெற்ற மற்றொரு ராசிக்காரர்கள் தான் விருச்சிக ராசிக்காரர்கள். இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதனால் இந்த ராசிக்காரர்கள் தைரியமாகவும், துணிச்சலாகவும் இருப்பார்கள். அத்துடன் குபேரரின் அருளையும் கொண்டிருப்பதால், இவர்களிடம் பண பற்றாக்குறையே ஏற்படாது. அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள். பணியிடத்தில் நல்ல பதவியில் இருப்பார்கள். சமூகத்தில் கௌரவமான நிலையில் இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களும் குபேரரின் அருளைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் ஆவர். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். அழகு, ஆடம்பரம், செல்வம் ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார். அத்துடன் குபேரரின் அருளையும் பெற்றிருப்பதல், இவர்கள் கையில் பணம் அதிகம் புரளும். அனைத்து காரியங்களிலும் குபேரனின் அருளால் வெற்றி காண்பார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். முக்கியமாக திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications