Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
2025 ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்தப் போகும் பேரழிவுகள்... பகீரைக் கிளப்பும் வாழும் நோஸ்ட்ரடாமஸ்...!
எதிர்காலத்தை தெரிந்து கொள்வது என்பது உலகம் தோன்றிய காலம் முதலே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ஒரு விஷயமாகும். பாபா வாங்கா, நோஸ்ட்ரடாமஸ் போன்ற தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தைப் பற்றி கணித்து பல்வேறு குறிப்புகளை உருவாக்கியுள்ளனர். தற்போது உலகம் முழுக்க பலர் எதிர்காலத்தைப் பற்றி கணிப்புகளை கூறிவருகின்றனர்.
அவர்களில் லண்டனில் வசிக்கும் 38 வயதான ஹிப்னோதெரபிஸ்ட் மற்றும் ஆன்மீக ஆலோசகரான நிக்கோலஸ் அவுஜுலா, தன்னுடைய கணிப்புகளால் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஏனெனில் அவருடைய கடந்த கால கணிப்புகளில் சில உண்மையில் நிறைவேறியுள்ளன. இப்போது, அவர் 2025 ஆம் ஆண்டிற்கான ஒரு அதிர்ச்சியளிக்கும் கணிப்பை வெளியிட்டுள்ளார், அது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆபத்தான கணிப்பு
தனது எதிர்காலத்தைப் பற்றிய கணிப்புகளுக்கு பின்னால் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றாலும், தன்னுடைய சக்திவாய்ந்த உள்ளுணர்வு மூலம் இந்த கணிப்புகளைப் பெறுவதாக நிக்கோலஸ் கூறுகிறார். அவரது சமீபத்திய மற்றும் மிகவும் ஆபத்தான கணிப்பு என்னவென்றால், 2025 இல் மூன்றாம் உலகப் போர் வெடிக்கக்கூடும். அதன் விளைவுகளிலிருந்து இங்கிலாந்து தப்பாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு அவர் கணிப்பின் ஒரு பகுதியை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் சமீபத்தில் மாஸ்கோவில் நடந்த கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு கிரெம்ளின் உக்ரைன் மீது குற்றம் சாட்டியது, ஆனால் ரஷ்ய ஊடகங்கள் பிரிட்டன் மீது பழியை சுமத்தத் தொடங்கின. தாக்குதலுக்கு பிரிட்டிஷ் உளவுத்துறை வெடிபொருட்களை வழங்கியதாக அவர்கள் குற்றம் சாட்டினர், மேலும் அதற்காக பழிவாங்க அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்வுகளின் விளைவுகள் நிக்கோலஸின் எச்சரிக்கை வெகு தொலைவில் இல்லை என்று பலரை நம்ப வைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டு "உலகில் இரக்கம் இல்லாத ஆண்டாகும், இந்த ஆண்டில் மதம் மற்றும் தேசியவாதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் மனித தீமை மற்றும் வன்முறையின் கொடூரமான செயல்களைக் காண்போம்" என்று நிக்கோலஸ் கூறியதாக செய்தி வெளிவந்துள்ளது.
மூன்றாம் உலகப் போர் வரக்கூடும்
2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகம் பயங்கரமான வன்முறையைக் காணக்கூடும் என்று நிக்கோலஸ் எச்சரித்துள்ளார், இது மனித இனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். தற்போது உலகின் பல நாடுகளில் போர் பதட்டம் அதிகரித்து வருவதால், அவரது கணிப்புகள் உலகம் முழுவதும் உள்ள மக்களை கவலையடையச் செய்யத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்தது, இதன் விளைவாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதிர்ச்சியளிக்கும் விதமாக, சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் மறைமுகமாக பாகிஸ்தானை அதிகரித்தன. இதற்கிடையில், முடிவிற்கு வரும் என்று எதிர்பார்த்த ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இஸ்ரேல்-காஸா இடையேயான போரும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போர் பதட்டங்களால், உலகப் போர் குறித்த நிக்கோலஸின் எச்சரிக்கையை புறக்கணிப்பது மிகவும் கடினம்.
இயற்கை அழிவுகள் பற்றிய கணிப்புகள்
2025 ஆம் ஆண்டு, உலகின் பல்வேறு பகுதிகளைத் தாக்கக்கூடிய பெரிய இயற்கை பேரழிவுகள் பற்றியும் நிக்கோலஸ் எச்சரித்துள்ளார். புதிய நோய்களின் பரவவலைப் பற்றியும் அவர் கணித்துள்ளார். புதிய COVID-19 மாறுபாடுகள் சமீபத்தில் பரவத் தொடங்கியிருப்பது அவரின் கணிப்புகள் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
மேலும் காலநிலை மாற்றத்தின் வளர்ந்து வரும் தாக்கம் குறித்து நிக்கோலஸ் கவலை தெரிவித்துள்ளார். அதன் விளைவுகள் வரும் ஆண்டில் இன்னும் வெளிப்படையாகவும் தீவிரமாகவும் மாறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா பற்றிய கணிப்புகள்
அமெரிக்காவில், சட்டப் போராட்டங்கள் மற்றும் பத்திரிகைகளின் எதிர்ப்புகள் ம இருந்தபோதிலும் ஜனாதிபதி டிரம்ப் வெற்றிகரமான ஆண்டை அனுபவிப்பார் என்று அவர் கூறியுள்ளார். மருத்துவ முன்னேற்றங்களைப் பொறுத்தவரை, ஆய்வகங்களில் மனித உடலுறுப்புகளை உருவாக்கும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று அவர் கணித்துள்ளார்.
நிக்கோலஸ் கணிப்புகள் ஏன் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது?
நிக்கோலஸ் அவுஜுலாவின் கடந்த கால கணிப்புகள் பல பலித்துள்ளதால் உலகம் முழுவதும் அவரின் கணிப்புகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, டொனால்ட் டிரம்ப் 2024 இல் அரசியல்ரீதியாக மீண்டு வருவார் என்று அவர் கணித்திருந்தார், அது பலித்தது. இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவின் (AI) அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்தும் அவர் பேசினார். COVID-19 தொற்றுநோய் வெடிப்பு, பாரிஸில் உள்ள Notre-Dame Cathedral in Paris-ல் ஏற்பட்ட பெரும் தீ விபத்து மற்றும் Black Lives Matter இயக்கத்தின் எழுச்சி போன்ற முக்கிய உலகளாவிய நிகழ்வுகளையும் அவர் துல்லியமாக கணித்தார்.



Click it and Unblock the Notifications
