For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

21 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகி பட்டத்தை இந்தியாவிற்கு வென்று தந்த 21 வயது மாடல்.. யார் இவர்?

2021 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இந்த 70 ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து என்னும் மாடல் அழகி வெற்றி பெற்றுள்ளார்.

|

2021 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இந்த 70 ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து என்னும் மாடல் அழகி வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டியில் 80 நாடுகளைச் சேர்ந்த மாடல் அழகிகளை பின்னுக்குத் தள்ளி, முதல் 10 இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து நுழைந்து, இறுதியாக கேள்வி பதில் சுற்றில் சிறப்பான பதிலளித்து நடுவர்களை ஈர்த்து வெற்றி பெற்றுள்ளார்.

Who is Harnaaz Sandhu, Punjabi Actor And Miss India Universe 2021 in Tamil

இதற்கு முன் மிஸ் யுர்னிவர்ஸ் பட்டத்தை 2000 ஆம் ஆண்டு லாரா தத்தா வெற்றி பெற்று பெருமை சேர்த்திருந்தார். அதன் பின் 21 வருடங்கள் கழித்து இப்போது தான் இந்த உலக அழகி பட்டம் இந்தியாவைச் சேர்ந்த மாடல் அழகிக்கு கிடைத்துள்ளது. சரி, உலக அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து யார்? கேள்வி-பதில் சுற்றில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு சந்து அளித்த பதிலும் என்னவென்பதை இப்போது விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2021 மிஸ் யுனிவர்ஸ்

2021 மிஸ் யுனிவர்ஸ்

2021 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ஹர்னாஸ் சந்து பரேகுவின் நாடியா ஃபெரீரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் லலேலா மஸ்வானே ஆகியோரை பின்னுக்கு தள்ளி 2021 மிஸ் யுனிவர்ஸ் என்னும் உலக அழகி பட்டத்தை வென்றார். இவருக்கு உலக அழகி கிரீடத்தை 2020 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் அழகியும், மெக்சிகோவைச் சேர்ந்த ஆன்ட்ரியா மெசாவும் தலையில் சூடினர்.

ஹர்னாஸ் சந்து

ஹர்னாஸ் சந்து

21 வயதான ஹர்னாஸ் சந்து 2000 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி சண்டிகரில் பிறந்தார். இங்கு தான் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதுவும் இவர் ஐடி முடித்துவிட்டு, மாஸ்டர் படிப்பை படித்துக் கொண்டுள்ளார். இவர் மாடலிங் துறையில் 17 வயதில் தொடங்கினார்.

பல அழகி பட்டங்கள்

பல அழகி பட்டங்கள்

ஹர்னாஸ் சந்து மாடலிங் துறையில் நுழைந்த பின் 2017 ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் அழகிப் போட்டியில் பங்கு கொண்டு, மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் 2019 ஆம் ஆண்டு மிஸ் ஃபெமினா இந்தியா பஞ்சாப் போட்டியில் பங்கேற்று, மிஸ் ஃபெமினா இந்தியா பஞ்சாப் பட்டத்தையும் வென்றார். 2021 உலக அழகி பட்டத்தைப் பெறுவதற்கு முன், 2021 மிஸ் திவா பட்டத்தை வென்றுள்ளார்.

நடிகையும் கூட

நடிகையும் கூட

ஹர்னாஸ் சந்து வெறும் மாடல் அழகி மட்டுமல்ல. இவர் யார தியான் பூ பரன், மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். முக்கியமாக 21 வயதானாலும் இவருக்கு திருமணமாகிவிட்டது என்று குறிப்பிடத்தக்கது.

இறுதி கேள்வி பதில் சுற்று

இறுதி கேள்வி பதில் சுற்று

2021 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை ஹர்னாஸ் சந்து வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது, கேள்வி பதில் சுற்றில் அவர் அளித்த பதில் தானாம். அந்த கேள்வி என்னவென்றால், இப்போதிருக்கும் இளம் பெண்களுக்கு சந்திக்கும் பிரஷரை எதிர்கொள்ள எந்த மாதிரியான அறிவுரையை நீங்கள் வழங்குவீர்கள் என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு அவர் அளித்த பதில், "இளம் தலைமுறையினரை எதிர்கொள்ளும் பிரஷர் என்றால், அது அவர்கள் தங்களை நம்பாதது தான். ஒருவருக்கு சுய நம்பிக்கை மிகவும் அவசியம் மற்றும் நீங்கள் தனித்துவமானவர்கள் என்பதை நம்ப வேண்டும். அதோடு உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். உலகில் நடக்கும் விஷயங்களைக் கவனியுங்கள். உங்கள் குரலை வெளிப்படுத்துங்கள். உங்களுக்காக நீங்கள் தான் பேச வேண்டும்.

உங்கள் வாழ்க்கையின் தலைவர் நீங்கள் தான். நான் என்னை முழுமையாக நம்பினேன். அதனால் தான் இன்று நான் இங்கே இருக்கிறேன்" என்று கூறினார். இவரது இந்த பதில் தான் இவருக்கு இப்பட்டம் கிடைக்க முக்கியமான காரணமாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who is Harnaaz Sandhu, Punjabi Actor And Miss India Universe 2021 in Tamil

Who is Harnaaz Sandhu, Punjabi Actor And Miss India Universe 2021 in Tamil? Read on to know more...
Story first published: Monday, December 13, 2021, 14:54 [IST]
Desktop Bottom Promotion