Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணா... உங்க வேலை மற்றும் தொழிலில் நீங்க டாப்ல இருக்கலாமாம்...!
உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், வெளியுலக அனுபவத்தைப் பெறவும், நிறைய படிக்க வேண்டும், சான்றிதழ்களைப் பெறுவது அல்லது உங்கள் புதிய துறையில் தன்னார்வத் தொண்டு செய்வது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்
செய்யும் தொழிலில் அல்லது பார்க்கும் வேளையில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், புதிதாக ஒன்றை முயற்சிப்பது ஒருபோதும் தவறில்லை. அதற்கு காலம் நேரம் என்று நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த ஆண்டே உங்கள் தொழில் அல்லது வேலையை நீங்கள் விரும்பியபடி, அமைத்துக்கொள்ளலாம். வாழ்க்கையை மாற்றுவது கடினமாகத் தோன்றுவதால், மகிழ்ச்சியற்ற தொழில் வாழ்க்கையிலே இருக்க வேண்டும் என நீங்கள் ஒருபோதும் நினைக்க வேண்டாம். 2023 ஆம் ஆண்டு, மக்கள் தொழில் மாற்றத்திற்குச் செல்வதற்கான தைரியத்தைத் திரட்டிக் கொள்ளும் ஒரு ஆண்டாகும்.

ஆனால் அது நடக்க, ஒரு தொழில்முறைக்கு அவர்கள் செல்ல விரும்பும் நம்பிக்கையுடனும், உறுதியுடன், விடாமுயற்சி மற்றும் அறிவுடன், சில விஷயங்களைச் செய்ய வேண்டும். 2023 இல் தொழில் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி கொடிக்கட்டி பறப்பதற்கு மிகவும் தேவையான சில குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் புதிய துறையில் ஆராய்ச்சி செய்யுங்கள்
நீங்கள் வரவிருக்கும் புதிய துறையைப் பற்றி புரிந்துகொள்வதற்கும், அதைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கும் ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது. தொழில், வேலைத் தேவைகள் மற்றும் உங்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். எப்போதும் ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அது உங்களை ஊக்கத்துடனும், நல்ல திறன்களுடனும் வைத்திருக்க உதவும்.

நெட்வொர்க்
இன்றைய நவீன உலகை பொருத்தவரை நெட்வொர்க் என்பது எல்லா மக்களுக்கும் இன்றையமையாததாக உள்ளது. நெட்வொர்க்கிங் புதிய அறிவைப் பெறுவதற்கும், உங்கள் புதிய வாழ்க்கையை உருவாக்க உதவும் திறன் வாய்ந்த, பயனுள்ள நபர்களைச் சந்திப்பதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். நீங்கள் விரும்பும் துறையில் உள்ள நிபுணர்களுடன் இணைந்திருங்கள் மற்றும் உங்கள் நெட்வொர்க்கை உருவாக்க நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் ரெஸ்யூமை புதுப்பிக்கவும்
உங்கள் பழைய ரெஸ்யூமை எல்லா இடங்களிலும் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். அது உங்கள் ரெஸ்யூம்முக்கும் பொருந்தும். புதுப்பிக்கப்பட்ட தனித்துவமான ரெஸ்யூமை உருவாக்கவும், உங்கள் லிங்க்ட்இன் சுயவிவரத்தைப் புதுப்பிக்க மறக்காதீர்கள். ஏனெனில் இது உங்கள் தொழில்முறை சுயவிவரத்தை மதிப்பிடுவதற்கும், புதிய நல்ல வேலை தேடுவதற்கும் உதவும். உங்கள் மாற்றத்தக்க திறன்கள் மற்றும் அனுபவங்களை வலியுறுத்துங்கள் மற்றும் புதிய துறையில் உங்கள் விண்ணப்பத்தை வடிவமைக்கவும்.

பொருத்தமான அனுபவத்தைப் பெறுங்கள்
உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், வெளியுலக அனுபவத்தைப் பெறவும், நிறைய படிக்க வேண்டும், சான்றிதழ்களைப் பெறுவது அல்லது உங்கள் புதிய துறையில் தன்னார்வத் தொண்டு செய்வது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் புதிய துறையில் நுழைவதற்குத் தேவையான அடிப்படை அறிவைப் பெற படிப்பு எப்போதும் உதவும்.

ஏற்றதாக இருக்க வேண்டும்
புதிய துறையில் நுழையும்போது, எல்லாவற்றிற்கும் ஏற்றதாக உங்கள் மனம் இருக்க வேண்டும். உங்கள் புதிய துறையில் நுழைவு நிலை அல்லது குறைந்த ஊதியம் பெறும் நிலையில் தொடங்குவதற்குத் தயாராக இருங்கள். இது அனுபவத்தைப் பெறவும் காலப்போக்கில் முன்னேறவும் உதவும். ஆரம்ப காலங்களில் கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பணி சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும்.

நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
விடாமுயற்சியுடன் இருங்கள் மற்றும் எப்போதும் உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். நீங்கள் ஒரு தொழில் மாற்றத்தை கருத்தில் கொண்டால், இது உங்களுக்கு தேவையான மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். நெட்வொர்க்கிங், கற்றல் மற்றும் உங்கள் புதிய துறையில் வாய்ப்புகளை தீவிரமாக தேடுங்கள். தோல்விகளை சந்தித்தால் நின்றுவிடாதீர்கள், ஏனென்றால் அது இறுதியில் உங்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும்.



Click it and Unblock the Notifications