Just In
- 50 min ago
தொண்டை புண் அல்லது வலி இருக்கும்போது நீங்க இந்த உணவு & பானங்கள தொடவே கூடாதாம்...!
- 1 hr ago
பெருங்குடல் புற்றுநோய் எதனால் வருகிறது? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?
- 1 hr ago
மோசமாக காதலிக்கும் 6 ராசிகள்... இவங்க காதலை கெடுக்க யாரும் வேணாம் இவங்களே கெடுத்துக்குவாங்க...!
- 3 hrs ago
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
Don't Miss
- Movies
யானைகள் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்.. ராணா டகுபதி, விஷ்ணு விஷாlலின் காடன் டிரைலர்!
- Sports
அது சாதாரண ஒன்றல்ல..உலகக்கோப்பைக்கு சமமானது.டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து நம்பிக்கை அளிக்கும் ரஹானே
- News
அதுமட்டும் நடக்க கூடாது.. "ஸ்டிரிக்ட் ஸ்டாலின்".. தொகுதி பங்கீட்டில் திடீர் கறார்.. இதுதான் காரணம்!
- Automobiles
வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!
- Finance
தங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Republic Day 2021: குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே...!
நமது தேசியக் கொடி வானத்தில் உயர்ந்து பறப்பதை காட்டிலும் அழகான மற்றும் பெருமையான தருணம் வேறு என்ன இருக்கிறது? தேசிய கீதமான 'ஜன கண மனா'வை நாம் கேட்கும் போதெல்லாம் நாட்டுபற்று நம்முள் எழும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாம் இந்திய நாட்டில் பிறந்ததற்கு பெருமை படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நாளில் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதைக் காணலாம். மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் மற்றும் நல்லிணக்கத்துடன் இந்நாளை கொண்டாடுகிறார்கள். குடியரசு தினத்தன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க உங்களுக்கு உதவும் வகையில் எழுச்சியூட்டும் வாழ்த்துக்களை இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம்.

வாழ்த்து 1
உலகிலேயே மிக நீண்ட அரசியலைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர். பி.ஆர். அம்பேத்கரை இந்நன்னாளில் நினைவுக்கூறுவோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
அரசியலமைப்பு சட்டம் பிரிவு-15இன் படி மதம், சாதி, இனம், மொழி, தொழில், பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
அனைவரும் சமம் என்ற ஜனநாயக நாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
ஜனநாயகம் மலர்ந்த இன்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என்று உறுதிமொழி ஏற்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
நாட்டை சீரழிக்கும் மதவெறி, சாதிவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றை வீழ்த்தி நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து முன்னெடுக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
இந்த நாளில், உங்கள் தாய்நாட்டின் மகிழ்ச்சியான தருணங்களை நீங்கள் பாதுகாப்பீர்கள் என்றும் அதை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பீர்கள் என்றும் உறுதியளிக்க வேண்டும். 2021 இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
இந்த தேசத்தை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் மாணவருக்கு கற்பிக்கட்டும். ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகளுக்கு கற்பிக்கட்டும். நம் தேசத்தின் அழகை வளர்க்கட்டும். 72ஆவது குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
இந்த குடியரசு தினத்தன்று நம் நாட்டின் சுதந்திர போராளிகளின் வெற்றியை நினைவு கூர்ந்து மகிழ்கிறோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஷிந்த்!

வாழ்த்து 10
குடியரசு தினத்தின் மகிமை என்றென்றும் நம்முடன் இருக்கட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11
இந்த குடியரசு தினத்தன்று, நம் நாட்டின் பொன்னான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நினைவில் கொள்வோம். இந்த நாளில் நம் தேசத்தைப் பற்றி பெருமைப்படுவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!