For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

51 ஆவது தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி நடிகர் ரஜினியை கௌரவித்த மத்திய அரசு!

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

|

தாதா சாகேப் பால்கே விருது இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதாகும். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

Rajinikanth To Be Honoured With 51st Dadasaheb Phalke Award

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக அறிவித்தார். அதோடு இந்த விருதானது ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என இந்திய சினிமாவுக்கு காலமற்ற மற்றும் கம்பீரமான பங்களிப்பை அளித்தற்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாதா சாகேப் பால்கே விருது

தாதா சாகேப் பால்கே விருது

தாதா சாகேப் பால்கே விருது இந்திய சினிமாவின் மிகவும் உயரிய விருதாகும். இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

முதல் விருது பெற்றவர் யார்?

முதல் விருது பெற்றவர் யார்?

தாதா சாகேப் பால்கே விருதை முதன்முதலில் பெற்றவர் தேவிகா ராணி. இவர் 1969 ஆம் ஆண்டு நடந்த 17 வது தேசிய திரைப்பட விருது விழாவின் போது பெற்றார்.

உயரிய விருதிற்கு இப்பெயர் வரக் காரணம் என்ன?

உயரிய விருதிற்கு இப்பெயர் வரக் காரணம் என்ன?

தாதா சாகேப் பால்கே என்பது 'இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். இவர் 1913 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான 'ராஜா ஹரிச்சந்திரா'வை உருவாக்கினார். எனவே, தாதா சாகேப் பால்கேவை நினைவுகூறும் வகையில், இந்திய அரசு 1969 இல் தாதாசாகேப் பால்கே விருதை வழங்க தொடங்கியது.

'இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களிப்பு' செய்தவர்களுக்காக இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். தாதாசாகேப் பால்கே விருதை வென்றவர்கள் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களை உள்ளடக்கிய ஒரு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த விருது ஒரு ஸ்வர்ணா கமல் (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ. 10 லட்சத்துடன் வழங்கப்படுகிறது.

இதுவரை தமிழ் சினிமாவில் யாரெல்லாம் பெற்றுள்ளனர்?

இதுவரை தமிழ் சினிமாவில் யாரெல்லாம் பெற்றுள்ளனர்?

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தமிழ் சினிமாவில் வெகுசிலரே பெற்றுள்ளனர். இதுவரை இயக்குநர் கே. பாலசந்தர், சிவாஜி கணேசன் போன்றோர் தான் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ரஜினிகாந்த்தும் தற்போது இடம் பிடித்துள்ளார். திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், பிரதமர் மோடி அவர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பதிலுக்கு, ரஜினிகாந்த் அவர்களும் தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rajinikanth To Be Honoured With 51st Dadasaheb Phalke Award

Union Minister Prakash Javedkar announced that the famous actor Rajnikanth has been honoured with Dadasaheb Phalke award 2020.
Desktop Bottom Promotion