For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

9 வயதில் திருமணம்... 14 வயதில் குழந்தையின் மரணம்.. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷி...

ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இந்தியாவின் ஆரம்பகால பெண் மருத்துவர்களில் ஒருவரான மற்றும் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக கருதப்படும் ஆனந்தி கோபால் ஜோஷி அவர்களைப

|

ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இந்தியாவின் ஆரம்பகால பெண் மருத்துவர்களில் ஒருவரான மற்றும் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக கருதப்படும் ஆனந்தி கோபால் ஜோஷி அவர்களைப் பற்றி பார்ப்போம்.

'ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி' மற்றும் 'ஆனந்திபாய் ஜோஷி' என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் ஆனந்தி கோபால் ஜோஷி 1865 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாணில் பிறந்தார். அவர் பிறக்கும் போது, தற்போதைய மகாராஷ்டிரா அன்று 'பாம்பே பிரசிடென்சி' என்று அழைக்கப்பட்டது. ஆனந்தி ஜோஷியின் பெற்றோர் வைத்த பெயர் 'யமுனா'. திருமணத்திற்கு பின் அவரது கணவர் கோபால்ராவ் ஜோஷி அவருக்கு 'ஆனந்தி' என்று பெயரிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆனந்தி ஜோஷியின் குடும்பம்

ஆனந்தி ஜோஷியின் குடும்பம்

ஆனந்தி ஜோஷி ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். ஆனால் ஆங்கிலேயரின் அதிகப்படியான வரி காரணமாக, அவரது குடும்பம் ஒரு சிக்கலான நிதி பிரச்சனையை சந்தித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவர். எனவே ஆனந்தி ஜோஷிக்கு 9 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர் ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை இழந்த 30 வயதுடைய கோபால்ராவ் ஜோஷியை திருமணம் செய்து கொண்டார். கோபால் ஜோஷி அதே ஊரில் அஞ்சல் எழுத்தாளராக இருந்தவர்.

கோபால் ஜோஷி ஒரு குழந்தையை திருமணம் செய்து கொண்டாலும், இவர் பெண்கள் கல்விக்கு வலுவான ஆதரவாளராக இருந்தார். இது அக்காலத்தில் அசாதாரணமானது என்று கருதப்பட்டதால், அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளராகக் கருதப்பட்டார்.

Image Courtesy

முதல் குழந்தை

முதல் குழந்தை

ஆனந்தி கோபால் ஜோஷி முதன்முதலாக தாயான போது, அவருக்கு வயது 14. ஆனால் இவருக்கு ஆண் குழந்தை பிறந்த பத்து நாட்களிலேயே போதுமான மருத்துவ பராமரிப்பு மற்றும் வசதிகள் இல்லாததால் இறந்தது. 14 வயதில் இதுப்போன்ற பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் எதிர்கொண்ட ஆனந்தி ஜோஷி, இந்தியாவில் சுகாதாரத்திற்காக ஏதாவது செய்ய முடிவு செய்தார். அதனால் தனது கணவரிடம் தான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற தனது விருப்பதைக் கூறினார். அவருடைய கணவரும் அதை ஆதரித்தார் மற்றும் மருத்துவம் படிக்க ஆனந்திக்கு முழு ஆதரவளித்தார்.

Image Courtesy

அமெரிக்காவில் மருத்துவ படிப்பு

அமெரிக்காவில் மருத்துவ படிப்பு

ஆனந்தியின் மருத்துவ படிப்பிற்காக அவருடைய கணவர் அமெரிக்க மிஷனரிக்கு ஆனந்தி ஜோஷி அமெரிக்காவில் கல்வியைத் தொடர முடியுமா என்று கேட்டு ஒரு கடிதம் எழுதினார். அமெரிக்காவில் அவருடைய படிப்பிற்காக கோபால் ஜோஷியும் தனக்கு அங்கு ஒரு பொருத்தமான வேலையைப் பற்றி விசாரித்தார். ஆனால் 1883 ஆம் ஆண்டில், கோபால் ராவ் ஜோஷி செராம்பூர் என்ற இன்றைய மேற்கு வங்காளத்தில் மாற்றப்பட்ட போது, ஆனந்தியை மட்டும் அமெரிக்காவிற்கு செல்லுமாறு சொல்லி சமாதானப்படுத்தினார். இந்தியாவில் உள்ள மற்ற பெண்களுக்கும், உயர் கல்வி தொடர ஒரு முன்மாதிரியாக இருக்குமாறும் ஆனந்தி ஜோஷியிடம் கூறினார்.

பென்சில்வேனியா மகளிர் மருத்துவ கல்லூரி

பென்சில்வேனியா மகளிர் மருத்துவ கல்லூரி

ஆனந்தி கோபால் ஜோஷி பென்சில்வேனியாவின் மகளிர் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பித்து அனுமதி பெற்றார். அவர் கல்கத்தாவில் இருந்து நியூயார்க்கிற்கு கப்பல் மூலம் பயணம் செய்தார். தனது 19 வயதில் மருத்துவ பயிற்சியைத் தொடங்கினார். அமெரிக்காவில் இருந்த போது, ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத அவரது உடல்நிலை அதிகப்படியான குளிர் மற்றும் புதிய உணவு காரணமாக மேலும் மோசமடைந்தது. அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். காசநோயால் அவதிப்பட்டும் அவர் மருத்துவத்தில் எம்.டி-யை முடித்தார். அவரது பயணம் மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்தது, அவருக்கு இந்திய பத்திரிகைகளில் அதிக விளம்பரம் கிடைத்தது மற்றும் அவரது பட்டப்படிப்பில், அப்போதைய இங்கிலாந்து ராணி, இந்திய பேரரசி, விக்டோரியா ராணி அவருக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண்மணி

மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண்மணி

அமெரிக்காவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். ஆனந்தி ஜோஷி வரவுள்ள தலைமுறை பெண்கள் தங்கள் உயர் கல்வியைத் தொடரவும் ஊக்கப்படுத்தினார். படிப்பை முடித்துவிட்டு, 1886 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவுக்குத் திரும்பியபோது, அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது, அன்றைய சுதேச மாநிலமான கோஹலாப்பூரில் (இன்றைய மகாராஷ்டிராவில்) ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் மருத்துவராகப் பொறுப்பேற்றார்.

உயிரைப் பறித்த காசநோய்

உயிரைப் பறித்த காசநோய்

பிப்ரவரி 26, 1887 அன்று, தனது 22 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஆனந்தி கோபால் ஜோஷி டிபி அல்லது காசநோயால் இறந்தார். இதனால் பெண்களுக்காக ஒரு மருத்துவ கல்லூரியைத் திறக்க வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் போனது. இவரது மரணம் இந்தியா முழுவதும் தலைப்புச் செய்தியாக இருந்தது மற்றும் முழு தேசமும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. மரியாதைக்குரிய அவரது அஸ்தி நியூயார்க்கில் உள்ள பௌகீப்ஸியில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

National Doctor's Day Special: The Inspiring Story Of India's First Female Doctor Anandi Gopal Joshi in Tamil

Anandi Gopal Joshi is the first woman of Indian origin to graduate with a degree in medicine in the US. She became an inspiration to generations of women to pursue their further education.
Desktop Bottom Promotion