Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
இந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா?
பெண்கள்தான் மற்றவர்களை கவர்வார்கள் என்னும் நியதியை பொய்யாக்கும் சில ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்கள் மற்றவர்களை தங்கள் தோற்றத்தின் மூலம்தான் கவர வேண்டுமென்ற அவசியமில்லை.
பொதுவாக பெண்கள்தான் இயற்கையாகவே அனைவரையும் கவரும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அழகான ஒரு பெண்ணைக் கண்டால் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையானது. ஆனால் இந்த இரண்டு ஈர்ப்புக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கும்.

பெண்கள்தான் மற்றவர்களை கவர்வார்கள் என்னும் நியதியை பொய்யாக்கும் சில ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்கள் மற்றவர்களை தங்கள் தோற்றத்தின் மூலம்தான் கவர வேண்டுமென்ற அவசியமில்லை. தங்களின் திறமை, பேச்சு, பொதுஅறிவு, நகைச்சுவை திறன் சமயோசித புத்தி, நிர்வாகத் திறன் என எதன்மூலம் வேண்டுமென்றாலும் கவரலாம். ஆண்கள் மற்றவர்களை கவர்பவர்களாக இருப்பார்களா? இல்லையா? என்பதை அவர்களின் விரல்களை வைத்தே அறிந்துகொள்ளலாம் என்று சாமுத்திரிகா சாஸ்திரம் கூறுகிறது.

ஆண்களின் விரல்கள்
பெண்களே உங்களின் ஆண் நண்பர்களின் வலது கையையும் அவர்களின் விரல்களின் நீளத்தையும் கவனியுங்கள். ஏனெனில் ஆண்களின் விரல்கள் அவர்களின் எண்ண ஓட்டங்களையும், குணங்களையும் பற்றி பலவற்றைக் கூறக்கூடும். குறிப்பாக அவர்களின் ஆள்காட்டி விரலின் நீளத்தை அதிகமாக கவனிக்க வேண்டும்.

ஆள்காட்டி விரல்
ஆண்களின் வலது கையில் ஆள்காட்டி விரலின் நீளத்தையும், மோதிர விரலின் நீளத்தையும் கவனியுங்கள். இரண்டும் ஒரே நீளத்தில் இருக்கிறதா? இரண்டில் எந்த விரல் நீளமாக இருக்கிறது என்பதை கவனியுங்கள். ஏனெனில் ஆள்காட்டி விரல் ஆண்களின் பல ஆளுமைகளை பற்றி வெளிப்படையாகக் கூற இயலும். இந்த ஆளுமைகளில் அவர்களின் பாலியல் வாழக்கையும் அடங்கும்.

காதல் வாழ்க்கை
ஆண்களின் விரலின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களின் மோதிர விரலும், ஆள்காட்டி விரலும் ஒரே நீளத்தில் இருந்தால் அவர்கள் காதலில் நேர்மையானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆண்களை கண்ணை மூடிக்கொண்டு காதலிக்கலாம். அதேபோல ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருப்பவர்கள் காதலில் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட காதலில் ஒரே நேரத்தில் ஈடுபடுவார்கள்.

விரல்களின் ஆய்வு
இந்த ஆய்வு கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் படி ஆண்களின் பாலியல் வாழ்க்கைக்கான தொடர்பு அவர்களின் கருவிலேயே தொடங்குகிறது. ஒரு மனிதனின் உயிரியல் நிகழ்வுக்கும் அவரது பாலியல் நடத்தைக்கும் உண்மையில் ஒரு தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு காட்டியது.

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்
குழந்தைகள் கருவில் இருக்கும் போது ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு ஏற்படும், அதனைப் பொறுத்துதான் அவர்களின் பாலியல் செயல்பாடு நிர்ணயிக்கப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருக்கும் ஆண் குழந்தைகளின் ஆள்காட்டி விரலின் நீளம் அதிகமாக இருக்கும்.

ஆணுறுப்பின் அளவு
ஆண்களின் ஆள்காட்டி விரல் அவர்களின் ஆணுறுப்பின் அளவை தோராயமாகக் கூற இயலும். அதன்படி மோதிர விரலை விட ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக இருக்கும் ஆண்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் நீளமான ஆணுறுப்பைக் கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. சிறிய ஆள்காட்டி விரல், நீளமான ஆண்குறிக்கும், டெஸ்டோஸ்டிரோன் அளவிற்கும் இடையேயான தொடர்பை விளக்குகிறது.

கவர்ச்சியான தோற்றம்
பொதுவாக மோதிர விரலை விட ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்கள் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. கருவில் இருக்கும் போது அதிகளவு டெஸ்டோஸ்டிரோனை பெற்றதன் அறிகுறி இது. இவர்கள் பாலியல் வாழ்க்கையில் மிகவும் சிறப்பாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications