For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை வடிவமைத்த லால் பகதூர் சாஸ்திரி பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்...!

இந்தியாவின் வளர்ச்சிக்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். போர் வெற்றி மட்டுமின்றி இந்தியாவில் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றிற்கு வழிவகுத்ததும் இவர்தான்.

|

அக்டோபர் 2 ஆம் தேதியை நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுகூறும் பொருட்டு காந்தி ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளானது நமது இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு மாமனிதருக்கும் பிறந்த நாள் ஆகும். அவர்தான் இந்தியாவின் இரண்டாவது பிரதம அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார்.

Lal Bahadur Shastri Birthday: Facts About Lal Bahadur Shastri

இந்தியாவின் வளர்ச்சிக்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். 1962 இல் சீனாவுக்கு எதிரான தோல்வியின் பின்னர் நாட்டின் உடைந்த தன்னம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தவர் மற்றும் 1965 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றவர் மேதகு லால் பகதூர் சாஸ்திரி ஆவார். போர் வெற்றி மட்டுமின்றி இந்தியாவில் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றிற்கு வழிவகுத்ததும் இவர்தான். லால் பகதூர் சாஸ்திரி பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தகவல் 1

தகவல் 1

லால் பகதூர் என்பதுதான் இவரின் பெயராகும். இவரின் புலமையின் காரணமாக 1926 இல் காஷி வித்யாபீத் பல்கலைக்கழகம் இவருக்கு சாஸ்திரி என்ற பட்டத்தை அளித்தது. உண்மையில் சாஸ்திரி என்பது பட்டமாகும்.

தகவல் 2

தகவல் 2

சாஸ்திரியின் தாய் அவருக்கு 3 மாதமாக இருக்கும் போது கங்கையில் குளிக்கும்போது அவரை தொலைத்துவிட்டார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததைத் தொடர்ந்து, குழந்தையில்லாத ஒருவர் அவரை மீண்டும் அவருடைய தாயிடம் ஒப்படைத்தார்.

தகவல் 3

தகவல் 3

பள்ளி நாட்களில் சாஸ்திரி அவர்கள் தினமும் தலையின் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு கங்கையை நீந்தி கடந்தே பள்ளிக்கு செல்வார். காரணம் அவரின் குடும்ப வறுமை ஆகும்.

MOST READ:இந்த ராசிக்காரங்க சவாலில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்களாம் தெரியுமா?

தகவல் 4

தகவல் 4

உத்திர பிரதேசத்தில் காவல்துறை மந்திரியாக இவர் இருந்த போது கூட்டத்தை கலைக்க மக்களை லத்தியை கொண்டு அடித்து விரட்டுவதற்குப் பதிலாக தண்ணீரை கொண்டு மக்களை விரட்டிய முதல் அரசியல்வாதி இவர்தான். மக்களின் மேல் இவருக்கு இருந்த அக்கறைக்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 தகவல் 5

தகவல் 5

திருமணத்தின் போது, சாஸ்திரி வரதட்சணையின் ஒரு பகுதியாக ஒரு காதி துணியையும் ஒரு ராட்டை சக்கரத்தையும் எடுத்துக் கொண்டார்.

தகவல் 6

தகவல் 6

ஜவஹர்லால் நேரு ஒருமுறை இவரை பாதி நாகரிகம் அற்றவர் என்று கூறினார். ஏனெனில் லால் பகதூர் சாஸ்திரி எப்போதும் வேஷ்டியும், குர்தாவும் தான் அணிவார்.

தகவல் 7

தகவல் 7

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக லால் பகதூர் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சாஸ்திரியின் மனைவி மாதம் 50 ரூபாய் ஓய்வூதியமாக பெற்றுவந்தார். ஒருமுறை அவர் மனைவி அதிலிருந்து மாதம் 10 ருபாய் சேகரித்து வைத்ததாகக் கூறினார். இதனால் கோபமுற்ற சாஸ்திரி தனது ஓய்வூதியத்தை குறைத்து, சில ஏழைகளுக்கு ரூ .10 கொடுக்குமாறு மக்கள் சங்கத்தின் ஊழியர்களிடம் கூறினார்.

MOST READ:அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? இவங்ககிட்டகொஞ்சம் உஷாராவே இருங்க...!

தகவல் 8

தகவல் 8

சாஸ்திரி 11 ஜனவரி 1966 அன்று அப்போதைய யு.எஸ்.எஸ்.ஆரின் தாஷ்கண்டில் இதய செயலிழப்பு காரணமாக இறந்தார், ஆனால் அவரது மரணம் இப்போதும் மர்மமானதாகவே கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lal Bahadur Shastri Jayanti 2021: Interesting Facts About Second PM of India

Here are some unknown facts about Lal Bahadur Shastri.
Desktop Bottom Promotion