For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று சர்வதேச குடும்ப தினம் - குடும்ப தினத்தை எவ்வாறு கொண்டாடலாம்?

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச குடும்ப தினம் மே 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச குடும்ப தினத்தை கொண்டாட பல வழிகள் உள்ளன.

|

இந்திய நாட்டில் குடும்பம் என்ற அமைப்பிற்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. நம் இந்திய நாட்டில் எந்த ஒரு சமூகத்தை சேர்ந்தவராயினும் அவர்களுக்கு குடும்பத்தினருடன் உள்ள தொடர்பு மிகவும் ஆழமானது. இன்றும் கூட்டு குடும்ப வாழ்க்கையை பின்பற்றும் மக்கள் ஏராளமானோர் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

International Day of Families: How Can You Celebrate Family Day?

இன்றைய நாட்களில் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச குடும்ப தினம் ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு சர்வதேச குடும்ப தினம் மே 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச குடும்ப தினத்தை கொண்டாட பல வழிகள் உள்ளன. அதில் சிலவற்றைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட இது ஒரு சிறந்த நாளாகும். குடும்ப உறுப்பினர்களுடன் போர்டு விளையாட்டுக்களான கேரம் போர்டு, சதுரங்கம் மற்றும் பாட்டு போட்டி போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தலாம். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இதில் பங்கு கொள்ளச் செய்யலாம்.

வழி #2

வழி #2

உங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசலாம். ஆனால் நடைபெறும் விவாதம் அல்லது கலந்துரையாடல் மிகவும் பாதுகாப்பான வழியில் நடைபெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் ஒருவர் பேசுவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் , இதனால் அவர் தண்டிக்கப்பட மாட்டார் என்பதையும் அவருக்கு உணர்த்துங்கள்.

வழி #3

வழி #3

குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவை முற்றிலும் தருவதற்கு இந்த நாளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பள்ளி படிப்பின் காரணமாக மிகப்பெரிய அழுத்தத்தை உணர்ந்தால், அவர்களுக்கு குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உதவிக்கரம் நீட்டலாம்.

வழி #4

வழி #4

நல்ல ஞாபகங்களை உருவாக்கும் ஒரு தினமாக இந்த நாளை மாற்றலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இந்த சூழ்நிலையை இன்னும் சிறப்பாக மாற்ற எதாவது ஒரு தீம் உருவாக்கலாம் அல்லது உங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

வழி #5

வழி #5

சர்வதேச குடும்ப நாளை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களுடன் சமூகத்தில் இணைந்து வாழும், அக்கம் பக்கத்தினர், உங்கள் தெருவில் உள்ள மற்ற குடும்பத்தினர் ஆகியவருடன் சேர்ந்து கொண்டாடலாம். அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு விருந்து விழா ஏற்பாடு செய்யலாம். இதனால் சமூகத்துடன் ஒரு இணக்கம் உண்டாகும்.

வழி #6

வழி #6

சமூக சேவை குறித்து இன்றைய தினத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கற்பிக்கலாம். இந்நாளில் நீங்கள் சமூக மேம்பாட்டு திட்டங்களில் உங்களை இணைத்துக் கொண்டு, இதர ஏழைக் குடும்பங்களுக்கு உதவ முன் வரலாம்.

வழி #7

வழி #7

ஒருவேளை நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருந்து தள்ளி இருந்தால், இதே சூழ்நிலையில் இருக்கும் உங்கள் நண்பர்களுடன் இந்த நாளை கழிக்கலாம். உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில், உங்கள் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சமூகத்தை உண்டாக்குவது இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். உங்கள் சொந்த குடும்பம் என்பது முழுக்க முழுக்க அன்பு மற்றும் நம்பிக்கையால் ஆனது. ஆகவே இந்த குடும்ப உறவுகளை ஒரு நாளும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.

வழி #8

வழி #8

சமூகத்தின் ஒரு முக்கிய அங்கம் குடும்பம். சமூகத்தின் மற்ற மனிதர்களிடம் எவ்வாறு பழகுவது, எவ்வாறு நடந்து கொள்வது போன்ற அடிப்படை விதிகளை கற்றுக் கொடுக்கும் இடம் குடும்ப அமைப்பு. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்ப அமைப்பை வளர்க்கவும், குடும்பத்தின் உறுப்பினர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை களைவதற்கு தேவையான நேரத்தை ஒவ்வொருவரும் ஒதுக்க வேண்டும். ஒரு குடும்ப அமைப்பு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான மனிதாக இருக்க முடியும். அவர் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Day of Families: How Can You Celebrate Family Day?

There are many ways in which you can celebrate International Day of Families. Read on...
Story first published: Thursday, May 14, 2020, 19:47 [IST]
Desktop Bottom Promotion