Latest Updates
-
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நகரம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும்
வாழ்க்கையில் நீங்க வெற்றி பெற வேண்டுமென்றால்... இதை முதலில் தெரிஞ்சிக்கணுமாம்... அது என்ன தெரியுமா?
சிலர் கடுமையாக உங்களை விமர்சிக்கலாம். எனவே, நீங்கள் விமர்சனம் மற்றும் நிராகரிப்புக்கு தயாராக இருக்க வேண்டும். பின்னடைவுகள் இருந்தாலும் முன்னேறிச் செல்வதற்கான தன்னம்பிக்கையுடன் இருங்கள்.
வெற்றியை யார்தான் விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், வெற்றி கிடைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல, அது மிகவும் சவாலானது. கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் கவனம் இருந்தால் ஒழிய வெற்றியை எளிதில் பெற முடியாது. உண்மையில், உங்கள் இலக்குகளை அடைவதில் இருந்து உங்களைத் தடுக்கும் பல சிக்கல்கள் மற்றும் தடைகள் உள்ளன. வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை நீங்கள் எவ்வளவு அலட்சியப்படுத்த முயற்சித்தாலும் உங்களால் முடியாது.

உங்கள் லட்சியங்களை அடைய நீங்கள் வாழ்க்கையில் கடுமையான உண்மைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். நீங்கள் வெற்றிபெற விரும்பினால் எதிர்கொள்ள வேண்டிய கடுமையான உண்மைகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

தோல்வி தவிர்க்க முடியாதது
வாழ்க்கையில் நாம் வெற்றி தோல்வி இரண்டையும் சந்திக்க வேண்டியிருக்கும். எல்லாருடைய வாழ்விலும் வெற்றி மட்டுமே இருக்காது. சில சமயங்களில் தோல்விகளை சந்தித்துதான் ஆக வேண்டும். ஆனால் வெற்றியைப் பெற, நீங்கள் ஒரு முறை அல்லது இரண்டு முறை தோல்வியடைய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தோல்வி என்பது செயல்பாட்டின் ஒரு பகுதி என்பதை வெற்றிகரமான மக்கள் புரிந்துகொண்டு அதைக் கற்றுக் கொள்ளவும் வளரவும் வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.

கடின உழைப்பை விலைபேச முடியாதது
வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமென்றால், நீங்கள் கடின உழைப்பிலிருந்து விலக முடியாது. உங்களிடம் உள்ள அனைத்து உழைப்பையும் நீங்கள் கொடுக்க வேண்டும். வெற்றிக்கு குறுக்குவழி இல்லை. தூக்கமில்லாத இரவுகள் ஏராளமாக இருக்கும், அங்கு நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும், வாழ்க்கையில் உள்ள அனைத்து வேடிக்கையான விஷயங்களையும் இழக்க நேரிடும். ஆனால் இறுதியில், நீங்கள் நிச்சயமாக உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.

பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறவும்
உங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள்ளையே நீங்கள் இருப்பது வெற்றி அடைவதைத் தடுக்கும். ஏனென்றால் நீங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு விஷயங்களை முயற்சி செய்யத் தயாராக இருக்க மாட்டீர்கள். அதைச் செய்யாவிட்டால், நீங்கள் எதிலுமே வெற்றி பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேற நீங்கள் தயாராக இருக்க வேண்டும் மற்றும் வெற்றியை அடைய ஆபத்துக்களை துணிச்சலாக சமாளிக்க வேண்டும்.

சுய ஒழுக்கம் முக்கியமானது
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் சில சாதாரண மற்றும் மோசமான பழக்கங்களை நீங்கள் கைவிட வேண்டும். அவைகள் உங்களை தற்காலிகமாக மகிழ்ச்சியடையச் செய்தாலும், சுயக்கட்டுப்பாடு, உந்துதல் மற்றும் வெற்றியை அடைவதற்கு அவசியமான உங்கள் நேரத்தையும் முன்னுரிமைகளையும் திறம்பட நிர்வகிக்கும் திறனைப் பெற நீங்கள் அவற்றை விட்டுவிட வேண்டும்.

ஆதரவு இல்லாமை
எல்லோரும் உங்களை ஆதரிக்க மாட்டார்கள். சிலர் உங்களைப் பார்த்து மிகவும் பொறாமைப்படுவார்கள், மேலும் உங்களை ஊக்கப்படுத்துவதன் மூலமோ அல்லது உங்கள் முதுகுக்குப் பின்னால் விஷயங்களைச் செய்வதன் மூலமோ உங்களைப் பின்தள்ள முயற்சிப்பார்கள். சிலர் கடுமையாக உங்களை விமர்சிக்கலாம். எனவே, நீங்கள் விமர்சனம் மற்றும் நிராகரிப்புக்கு தயாராக இருக்க வேண்டும். பின்னடைவுகள் இருந்தாலும் முன்னேறிச் செல்வதற்கான தன்னம்பிக்கையுடன் இருங்கள்.

கடினமான தேர்வுகள்
வாழ்க்கையில் முன்னேறும்போது, சில கடினமான தேர்வுகள் இருக்கும். நீங்கள் ரிஸ்க் எடுக்காவிட்டால், உங்களால் அதிகபட்ச இலக்குகளை அடைய முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றிகரமான மக்கள், நீண்ட கால வெற்றிக்காக குறுகிய கால ஆதாயங்களை தியாகம் செய்வதாக இருந்தாலும், மற்றவர்கள் தவிர்க்கும் கடினமான முடிவுகளை எடுக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
