For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டாலே, அது ரஜினிகாந்த் தான். இப்படிப்பட்ட ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

|

உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டாலே, அது ரஜினிகாந்த் தான். அந்த அளவில் உலகளவில் பிரபலமான ஓர் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்றவர். தனது ஸ்டைலாலேயே உலக மக்களை ஈர்த்தவர். இவர் ஒரு நல்ல நடிகர் மட்டுமின்றி, நல்ல மனிதரும் கூட. அனைவரிடமும் அன்பாக பழகும் குணமுடைய இவர், அனைவரையும் சமமாக நடத்தக்கூடியவர். இப்படிப்பட்ட ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Happy Birthday Rajinikanth: Facts Thalaivars Fans Should Know

நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகராக இருந்தால், அவரைப் பற்றி ஒரு ரசிகர் தெரிந்திருக்க வேண்டிய சில உண்மைகள் குறித்து இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திரை வாழ்க்கை தொடக்கம்

திரை வாழ்க்கை தொடக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு கே பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்து, தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் தான் ஹீரோ. ரஜினிகாந்த் பாலச்சந்தரை ஒரு கதாபாத்திரத்திற்காக அணுகினார். இதனால் ரஜினிகாந்த் கடைசி நிமிடத்தில் படத்தில் சேர்க்கப்பட்டார். அதுவும் இப்படத்தில் கதாநாயகியின் முன்னாள் கணவராக நடித்த அவர் உடனடியாக கவனிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் என்ற பெயர் வந்த விதம்

ரஜினிகாந்த் என்ற பெயர் வந்த விதம்

ரஜினிகாந்த்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இவருக்கு ரஜினிகாந்த் என்ற பெயரை சூட்டியவர் கே பாலசந்தர். ஆனால் பாலசந்தரிடம் வேறு இரண்டு பெயர்களும் இருந்தன. அவை சந்திரகாந்த் மற்றும் ஸ்ரீகாந்த். பாலசந்தரின் மேஜர் சந்திரகாந்த் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கேரக்டராக இருந்தார்.

ஆரம்ப கால தொழில்

ஆரம்ப கால தொழில்

ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் நுழைவதற்கு முன்பு கூலி, கார்பெண்டர், பஸ் கண்டக்டர் என வேலை செய்து வந்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரங்காச்சாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லதா ரஜினிகாந்த் இவரை விட 8 வயது இளையவர். லதா தனது கல்லூரி இதழுக்காக ரஜினியை இன்டர்வியூ எடுக்க வந்த போது இருவரும் சந்தித்தனர். பின் இருவரும் காதலித்து 1981 இல் திருமணம் செய்து கொண்டனர்.

பிளாக்பஸ்டர் திரைப்படம்

பிளாக்பஸ்டர் திரைப்படம்

2007 ஆம் ஆண்டு இயக்குனர் பி. வாசு தயாரித்து ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் தான் தமிழில் நீண்ட நாட்கள் திரையரங்கில் ஓடிய திரைப்படம். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, இத்திரைப்படமானது துருக்கி மற்றும் ஜெர்மனிலும் டப்பிங் செய்யப்பட்டது.

எதிர்மறை பாத்திரங்கள்

எதிர்மறை பாத்திரங்கள்

ரஜினிகாந்த் தனது திரைவாழ்க்கையை ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்கள் அவருக்கு எதிர்மறை கதாப்பாத்திரங்களான துஷ்பிரயோகம் செய்யும் கணவன், கற்பழிப்பவன், பெண்ணியம் செய்பவன், ஆபாசப் படங்கள் செய்பவன், விபச்சாரம் செய்பவன் போன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் 1977 இல் புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் தான் முதன்முதலில் ஒரு நேர்மறையான கதாபாத்திரம் கிடைத்தது.

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய இரண்டாவது நடிகர்

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய இரண்டாவது நடிகர்

ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான சிவாஜிக்காக, 2007 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் சம்பளமாக ரூ. 26 கோடி பெற்றார். இது ஜாக்கிசானுக்குப் பிறகு ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகராக அவரை மாற்றியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Birthday Rajinikanth: Facts Thalaivar's Fans Should Know

Happy Birthday Rajinikanth: Here are some facts about thalaivar every fans should know.
Desktop Bottom Promotion