Just In
- 10 min ago
பெண்களே! உங்க கணவன் ரொம்ப சந்தோஷமா இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 1 hr ago
இந்த உணவுகளை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா அது கோமாவுக்கே கொண்டு போயிடும்..
- 1 hr ago
இஞ்சி சாப்பிடுவது என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்தும் தெரியுமா?யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக்கூடாது தெரியுமா?
- 2 hrs ago
தினமும் முட்டை சாப்பிடுவதால் உங்க இதயம் ஆரோக்கியமாக இருக்குமா? பாதிக்கப்படுமா? ஆய்வு என்ன சொல்கிறது?
Don't Miss
- Sports
"யாருப்பா நீ விநோதமா பண்ற" விராட் கோலிக்காக ரசிகர் செய்த விஷயம்.. இதை சரியா கவனிச்சீங்களா??
- News
வசமா மாட்டிக்கிச்சு.. "தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட பேருந்து"- இப்படியா பஸ் ஸ்டாண்ட் கட்டுவீங்க?
- Movies
கோபியை வெளியில் துரத்திய ராதிகா... புலம்பலில் கோபி.. அடுத்தடுத்த ட்விஸ்ட்டில் பாக்கியலட்சுமி தொடர்
- Technology
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக் விற்பனை 2022: முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
- Automobiles
12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!
- Finance
இந்தியாவில் இ-காமர்ஸ் வணிகம்: பேச்சுவார்த்தையை தொடங்கியது கூகுள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவின் தளபதி மறைந்த மாவீரர் பிபின் ராவத் பற்றி பலரும் அறியாத உண்மைகள் என்ன தெரியுமா?
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் நேற்று கோவைக்கு வந்தனர். சூலூரிலிருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு எம்ஐ ரக ஹெலிகாப்டரில் அவர்கள் நேற்று சென்றனர். இந்நிலையில், அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் நேற்று(டிசம்பர் 8) நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் அனைவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிபின் ராவத் இறப்பு இந்தியாவிற்கு பெரும் இழப்பு. இந்திய ராணுவத்தில் பிபின் ராவத்தின் பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்திய ராணுவத்தின் வலிமையை உலகிற்கு காட்டியதில் இவரின் பங்கு மிக முக்கியம். பாகிஸ்தான் தாக்குதலுக்கு தக்கபதிலடி கொடுத்து வந்தவர் ராவத். இவர் , இந்திய ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றி, சிறப்பான பணியை மேற்கொண்டார். இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பிபின் ராவத் பிறப்பு
இராணுவத் தளபதி பிபின் ராவத், 1958ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி பிறந்தார். உத்தராகண்ட் மாநிலம் பவுரி கஹ்வால் மாவட்டத்தில் உள்ள சின்ஜ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். ராவத் குடும்பத்தில் பல தலைமுறைகளாக இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வர்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படிப்பில் எம் பில் பட்டமும் பெற்றுள்ளார்.

இராணுவ தளபதி
பின்னர், பிபின் ராவத் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். அவருடைய தந்தை இருந்த அதே பிரிவில் அவர் தன் ராணுவப் பயணத்தைத் தொடங்கினார். ஜெனரல் பிபின் ராவத் 2016 டிசம்பரில் முதல் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
12 வயது சிறுவனின் இதய நோய் தீர உதவுங்கள் ப்ளீஸ்

ராவத்தின் படிப்பு
பிபின் ராவத் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் படித்து பட்டதாரி பட்டம் பெற்றார். அவர் அமெரிக்காவில் உள்ள ஃபோர்ட் லீவன்வொர்த்தில் கட்டளை மற்றும் பொது ஊழியர்களுக்கான பயிற்சியையும் முடித்துள்ளார். மேலும், அவர் மேலாண்மை மற்றும் கணினி படிப்பில் டிப்ளமோ முடித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டில் ராவத் மீரட்டின் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் இருந்து தத்துவத்தில் முனைவர் பட்டமும் (Ph.D.) பெற்றார்.

ராவத் வகித்த பதிவிகள்
ஜெனரல் ராவத் தனது இராணுவ பணியின் போது பிரிகேட் கமாண்டர், தெற்கு கமாண்டர், ராணுவ நடவடிக்கை இயக்குனரகத்தில் ஜெனரல் ஸ்டாஃப் அதிகாரி கிரேடு 2 உட்பட பல்வேறு பதவிகளை வகித்தார். அவரது 38 ஆண்டுகால பணியின் போது, அவர் UYSM, AVSM, YSM, SM, VSM, COAS ஆகியவற்றுடன் அவரது வீரம் மற்றும் தகுதியான சேவைக்காக அங்கீகரிக்கப்பட்டார். அவர் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் உறுப்பினராகவும் இருந்தார், ஐ.நா.வுடன் இருந்த காலத்தில் இரண்டு முறை படைத் தளபதியின் பாராட்டைப் பெற்றார். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியால் அவருக்கு மரியாதைக்குரிய விருது வழங்கப்பட்டது.

ராவத்தின் சிறப்பு பணிகள்
மியான்மரில் 2015 ஆம் ஆண்டு எல்லை தாண்டிய நடவடிக்கை அவரது தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அங்கு இந்திய இராணுவம் NSCN-K கிளர்ச்சியாளர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது. 2016 ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் திட்டமிடலில் ஜெனரல் ராவத்தும் ஈடுபட்டார். தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைத்துவம் குறித்து ஜெனரல் ராவத் பல கட்டுரைகளை எழுதியுள்ளார், அவை பல்வேறு வெளியீடுகளில் வெளிவந்துள்ளன. ராணுவத்தில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்ததற்காக ராவத்துக்கு பதக்கங்கள், பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முப்படைகளின் தளபதி
பிபின் ராவத், இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக முப்படைகளின் தலைமை பதவியில் நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர். இராணுவ தளபதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராவத், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் முதன் முதலில் இந்தியாவில் அந்த பதவி உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு, இந்திய ராணுவத்தில் ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி என முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் இருந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்து
கடந்த இரண்டு ஆண்டுகளாக முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இருந்து வந்தார் பிபின் ராவத். இந்நிலையில், ராவத் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு டெல்லியில் இருந்து அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுடன் விமானப் படை ஹெலிகாப்டரில் நேற்று பயணித்திருந்தார். வெலிங்கடன் பயிற்சி மைய ஹெலிபேடை நெருங்க சுமார் 10 கி.மீ. தூரம் இருந்த நிலையில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே நேற்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிபின் ராவத் உட்பட உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர், முதலமைச்சர் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.