For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்

உன்னாவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கடுமையான பாலியல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவல நிலை பற்றி தான் இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

|

அந்த ஒரு விபத்து.. அதுதான் உன்னாவ் பலாத்கார வழக்கை இன்று உச்சநீதிமன்றம் தலையிட்டு, விசாரணைக்கு கெடு கொடுக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால் குற்றம் செய்தவருக்கு தண்டனை கிடைக்குதோ இல்லையோ அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை என்னவோ கவலை நிலை தான். ஒரு கும்பலே சேர்ந்து ஒரு சிறுமியை பலாத்காரம் செய்தால் என்ன நடக்கும்.

Unnao Rape Survivor Battles Enterococcus faecalis Infection - Know More About This Condition

அந்த பெண்ணின் மனநிலை மட்டுமல்ல தற்போது உடல் நிலையும் வேதனைப்பட்டு வருவது தான் உண்மை. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தீவிர நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார், விபத்தில் சிக்கிய போது அவர் அருகில் இருந்த கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த பரிசோதனை

இரத்த பரிசோதனை

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த பரிசோதனை செய்தனர். அதில் அவர் தீவிர இரத்த தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கு பிறகு அவரின் நிலை மோசமாகி இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளது.

MOST READ: புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா?

பரிசோதனை முடிவு

பரிசோதனை முடிவு

என்டோரோகோகஸ் என்ற பாக்டீரியாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன. இது நமது உடலில் வாழும் ஒரு வகை பாக்டீரியாக்கள் ஆகும். இதில் 18 வெவ்வேறு இனங்கள் உள்ளன. ஆனால் அவற்றுள் மிக முக்கியமான இனம் தான் இந்த எண்டோரோகோகஸ்.

எண்டோரோகோகஸ் என்றால் என்ன?

எண்டோரோகோகஸ் என்றால் என்ன?

இவை சாதாரணமாக நமது குடலில் காணப்படும். இவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவை நமது வாய் மற்றும் பெண்களின் வெஜினா பகுதிகளிலும் காணப்படும். இந்த பாக்டீரியா மற்ற உடல் பகுதிகளுக்கு பரவும் போது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தீவிர நோய்த் தொற்று ஏற்படும். இந்த பாக்டீரியா இரத்தத்தின் வழியாக, காயங்கள் மற்றும் சிறுநீரின் வழியாக பரவக் கூடும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கருத்துப்படி, ஈ. ஃபெகாலிஸ் சுமார் 80 சதவீத மனிதர்களை பாதிக்கிறதாக எச்சரிக்கை ரிப்போர்ட் விடுத்துள்ளது. இது வெப்பமான, உப்பான அல்லது அமில சூழலில் வாழக்கூடிய ஒரு வகை பாக்டீரியா ஆகும்.

காரணங்கள்

காரணங்கள்

பெரும்பாலும் மருத்துவ மனையில் இருப்பவர்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிப்படைகின்றனர் என்று சுகினோ கான்டினூம் கேர் சென்டரின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்யா கிருஷ்ணன் கூறுகிறார். "மோசமான சுகாதாரம், நோயெதிப்பு சக்தி குறைவு போன்றவை இந்த நோய்த் தொற்றை அதிகமாக்கும்". என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும்சிறுநீர் வடிகுழாய் வழியாக சிறுநீரக உறுப்பில் இருக்கும் இந்த பாக்டீரியா மற்ற உடல் பகுதிகளுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

நோய்த் தொற்றின் அறிகுறிகள்

நோய்த் தொற்றின் அறிகுறிகள்

காய்ச்சல்

பற்களில் வீக்கம், இரத்தக் கசிவு, சிவந்து போதல்

சோர்வு

குளிர்தல்

தலைவலி

சிறுநீர் கழிக்கும் போது வலித்தல் மற்றும் எரிச்சல் ஏற்படுதல்

அடிவயிற்றில் வலி

வாந்தி மற்றும் குமட்டல்

வயிற்று போக்கு

முச்சுத் திணறல்

பிடிப்பான கழுத்து

மூச்சு விடும் போது மார்பில் வலி

MOST READ: தாடி வளர்க்கணுமா? எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்?... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...

நோய்க் காரணிகள்

நோய்க் காரணிகள்

நோயெதிப்பு சக்தி குறைந்து போதல், அறுவை சிகிச்சை மூலம் பரவுதல்

சில சமயங்களில் டயலைஸிஸ் செய்யும் போது

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யும் போது

ரூட் கேனல் செய்யும் போது எச். ஐ.வி மற்றும் எய்ட்ஸ் இவற்றால்

பரவுகிறது.

இரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

விளைவுகள்

விளைவுகள்

இது உயிருக்கு பல ஆபத்தான நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடும்.

பாக்டீரேமியா - இரத்தத்தில் பாக்டீரியாக்கள் இருப்பது.

சிறுநீரக பாதை நோய்த் தொற்று

அடிவயிற்று மற்றும் இடுப்பு பகுதியில் தொற்று

எண்டோகார்ட்டிஸ் - இதயத்தின் உள் சுவரில் தொற்று ஏற்படுதல்

பீரியோடோன்டிடிஸ்- ஒரு வகை ஈறு தொற்று நோய்.

காயங்களில் தொற்று

காயங்களில் தொற்று

செப்டிசீமியா, அல்லது இரத்தத்தில் நச்சு கலக்கும் தன்மை

மூளைக்காய்ச்சல் - மூளை மற்றும் முதுகெலும்பு பகுதியைச் சுற்றி வீக்கம்.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

இந்த பாக்டீரியா ஆன்டி பயாடிக் மருந்துகளையே எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இவை மருந்துகளை வேலை செய்யக் கூட அனுமதிக்காது. பயோஃபில்ம் உருவாக்கம், போதிய ஊட்டச்சத்து தேவைகள், பென்சிலின்-பிணைப்பு புரதம் (பிபிபிக்கள்) மற்றும் சுற்றுச்சூழல் ஃபோலிக் அமில உருவாக்கம் போன்ற பல்வேறு சிகிச்சைகளை இது எதிர்க்கிறது.

MOST READ: நைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா? இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...

தடுக்கும் வழிகள்

தடுக்கும் வழிகள்

பாத்ரூம் போய்ட்டு வந்தால் கைகளை வெந்நீரிலோ அல்லது சோப்பு போட்டோ நன்றாக கழுவ வேண்டும். உணவை சமைப்பதற்கு முன் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.

சோப்பிற்கு பதிலாக ஆல்கஹால் சுத்திகரிப்பானை பயன்படுத்திக் கொள்ளலாம்

உங்களுடைய ஸ்பூன், டூத்பிரஷ், துண்டு போன்றவற்றை வேறொருவருக்கு பயன்படுத்த கொடுக்காதீர்கள்.

மருத்துவமனை சென்றால் தெர்மோமீட்டர்கள், கத்ரீட்டர் , ஐ.வி.க்கள், இரத்த அழுத்த கருவிகள் மற்றும் பிற சாதனங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மருத்துவ மனையில் பணிபுரியும் நபர் என்றால் தயவு செய்து சுத்தமான க்ளவ்ஸ்யை(கையுறையை) பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: வாழ்க்கை life
English summary

Unnao Rape Survivor Battles Enterococcus faecalis Infection - Know More About This Condition

The condition of the Unnao rape survivor remains to be critical as she battles a severe blood infection. She met with a truck-car collision after which she was admitted in King George's Medical University (KGMU), Lucknow, and later shifted to the AIIMS in Delhi.
Desktop Bottom Promotion