For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்ஸிகோவின் ஆண்ட்ரியா மீசா பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள்!

மிஸ் மெக்ஸிகோ ஆண்ட்ரியா மீசா மிஸ் யுனிவர்ஸ் 2021 ஆக முடிசூட்டப்பட்டார். இவருக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆன தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி 69 ஆவது மிஸ் யுனிவர்ஸாக கிரீடத்தை சூட்டினார்.

|

2021 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவின் செமினோல் ஹார்ட் ராக் ஹோட்டல் மற்றும் கேசினோ ஹாலிவுட்டில் நடைபெற்றது. இதில் மிஸ் மெக்ஸிகோ ஆண்ட்ரியா மீசா மிஸ் யுனிவர்ஸ் 2021 ஆக முடிசூட்டப்பட்டார். இவருக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆன தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி 69 ஆவது மிஸ் யுனிவர்ஸாக கிரீடத்தை சூட்டினார்.

Miss Universe 2021 Winner: Miss Mexico Andrea Meza Crowned As The Winner

26 வயதான மிஸ் மெக்ஸிகோ 73 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகளுடன் போட்டியிட்டு பட்டத்தை வென்றுள்ளார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் இறுதி போட்டியின் போட்டியின் போது மீசா மின்னும் சிவப்பு நிற கவுன் அணிந்து அழகாக ஜொலித்தார். இந்த அழகு போட்டியில் மிஸ் இந்தியா அட்லைன் காஸ்டெலினோ மூன்றாவது ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார்.

ஒட்டுமொத்த உலகமும் புதிய மிஸ் யுனிவர்ஸை வாழ்த்தும் போது, நாங்கள் அவரைப் பற்றிய சில விஷயங்களை சொல்லவிருக்கிறோம். அதைப் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு

பிறப்பு

ஆண்ட்ரியா மீசா 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி சிவாவா நகரில் அல்மா கார்மோனா மற்றும் சாண்டியாகோ மேசா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் தான் மூத்தவர். மீசா ஒரு மெக்சிகன்-சீன வம்சாவளியாவார்.

படிப்பு மற்றும் வேலை

படிப்பு மற்றும் வேலை

மீசா சிவாவாவின் தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பைப் படித்தார். இவர் தனது பட்டத்தில் 2017 ஆம் ஆண்டில் முடித்தார். அதன் பின் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றத் தொடங்கினார். இவர் பணிபுரியும் போதே, ஒரு மாடலாகவும் பணியாற்றினார்.

மாடல் தொழில்

மாடல் தொழில்

மாடலாக பணியாற்றும் போது, 2016 மிஸ் மெக்ஸிகோ அழகுப் போட்டியில் இருந்து கலந்து கொள்ளத் தொடங்கினார். அந்த போட்டியில் மிஸ் மெக்ஸிகோ 2016 க்ரீடத்தை வென்றார். அதன் பின் மிஸ் வேர்ல்ட் 2017 போட்டியில் பங்கேற்க சென்றார். அப்போது மிஸ் வேர்ல்ட் 2017 போட்டியில் முதல் ரன்னர்-அப் ஆனார். பின்னர் மீசா மெக்ஸிகானா யுனிவர்சல் சிவாவா 2020 என முடிசூட்டப்பட்டார். இந்த போட்டியின் போது, விளையாட்டு சவால்கள் உட்பட பல சவால்களை மீசா சந்தித்து, அதை வெற்றிகரமாகவும் வென்றார்.

மிஸ் யுனிவர்ஸ் 2020

மிஸ் யுனிவர்ஸ் 2020

மீசா மெக்ஸிகானா யுனிவர்சல் 2020 க்குப் பிறகு, மிஸ் யுனிவர்ஸ் 2020 போட்டியில் மெக்சிகோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்றார். ஆனால் இந்த போட்டி கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது மற்றும் இப்போட்டி மே 2021 க்கு மாற்றப்பட்டது.

மிஸ் யுனிவர்ஸ் 2021

மிஸ் யுனிவர்ஸ் 2021

2021 மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் இறுதிப் போட்டி மே 16 அன்று புளோரிடாவில் நடைபெற்றது. இதில் மீசா 2021 மிஸ் யுனிவர்ஸ் ஆன பிறகு, இவர் இதுவரை மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை பெற்ற மூன்றாவது மெக்சிகன் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Miss Universe 2021 Winner Andrea Meza

Miss Mexico Andrea Meza was crowned Miss Universe 2021 on Sunday in Seminole Hard Rock Hotel and Casino Hollywood, Florida.
Desktop Bottom Promotion