For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூய்மை பணியாளராக இருந்து சப்-கலெக்டரா மாறிய சிங்கப்பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா?

தகுதிவாய்ந்த வேட்பாளர்களில் ஜோத்பூர் மாநகராட்சியில் துப்புரவாளராக பணியாற்றும் ஆஷா காந்த்ராவும் ஒருவர். இரண்டு குழந்தைகளின் தாயான ஆஷா விரைவில் துணை கலெக்டராக நியமிக்கப்படுவார்.

|

இந்த சமுகதாயத்தில் பெண் படித்து வேலைக்கு செல்வதே என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பெண் சமூகம் தற்போதுதான் படிப்பு, வேலை என தன் திறமைகளை வெளி உலகத்திற்கு காட்டி வருகின்றனர். இப்போது இருக்கும் இளைஞர்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுகிறார்கள். எத்தகைய இன்னல்களையும், கஷ்டங்களையும் கடந்து தன் கனவை லட்சியத்தை அடைய முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ஆஷா காந்த்ரா என்ற பெண்ணை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் இரண்டு குழந்தைகளுடன் தனித்து வாழும் ஆஷா தூய்மை பணியாளராக பணி புரிந்து வந்தார். தற்போது, அவர் ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று சப்-கலெக்டராக நியமிக்கப்பட உள்ளார். இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு முன்மாதிரியாக இருக்கும் ஆஷாவை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஷா காந்த்ரா

ஆஷா காந்த்ரா

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ஆஷா கந்த்ரா. இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பே கணவரிடம் இருந்து பிரிந்து, விவாகரத்து பெற்று தனியாக வாழ்த்து வருகிறார். தனது 2 குழந்தைகளையும் காப்பாற்றும் வகையில் துப்புரவு பணியாளர் வேலை செய்து வந்தார். வறுமையிலும் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புடன் தனது ஐஏஎஸ் கனவையும் சுமந்துகொண்டு பணிகளுக்கு இடையே தனது பட்டப்படிப்பையும் தொடர்ந்து வந்தார்.

 கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை

கணவர் இல்லாமல் ஒரு பெண் தனித்து வாழ்வது என்பது இச்சமூகத்தில் மிகவும் சவாலானது. பல்வேறு பிரச்சனைகளையும், அவமானங்களையும் சந்தித்த ஆஷா, தன் கனவை நிறைவேற்ற ஏராளமான தேர்வுகளை எழுதி வந்தவர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் தேர்வை ( RAS) எழுதினார் ஆஷா. இந்த தேர்வு முடிவுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், துப்புரவு பணியையே தொடர்ந்து செய்து வந்தார்.

சப்-கலெக்டர்

சப்-கலெக்டர்

2018 ஆம் ஆண்டின் ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வு அல்லது ஆர்ஏஎஸ் தேர்வின் இறுதி முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு தகுதி பெற்ற பின்னர் மொத்தம் 2,023 பேர் நியமனம் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தகுதிவாய்ந்த வேட்பாளர்களில் ஜோத்பூர் மாநகராட்சியில் துப்புரவாளராக பணியாற்றும் ஆஷா காந்த்ராவும் ஒருவர். இரண்டு குழந்தைகளின் தாயான ஆஷா விரைவில் துணை கலெக்டராக நியமிக்கப்படுவார். இப்போது, இளம் தலைமுறையினர் அனைவருக்கும் ஆஷா முன்மாதிரியாக உள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு ஆஷாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாமல், இளம் பெண்களுக்கும் ஒரு முன் மாதிரியாக தேர்ச்சி பெற்றுள்ளார். சமூக ஊடகங்களிலும் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆஷாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆஷாவின் பேட்டி

ஆஷாவின் பேட்டி

தனது வெற்றி குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆஷா "சமூகத்தில் எதிர்கொண்ட பாகுபாடுதான் இறுதியில் தனது வாழ்க்கையை மாற்றுவதற்கான உத்வேகமாக அமைந்தது. நான் அடைந்த வெற்றி என்னுடைய கடின உழைப்பின் காரணமாக நடந்தது என்று நம்புகிறேன். நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக விரும்பினேன். ஆனால், வயது வரம்பு காரணமாக ஐஏஎஸ் தேர்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு கிடைத்த இந்த புதிய தகுதி (துணை கலெக்டர்) மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதே என் நோக்கம்" என்று கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Asha Kandra, A Sweeper From Jodhpur Is Now A Deputy Collector; Here is her inspiring story in tamil

Asha Kandra, A Sweeper From Jodhpur Is Now A Deputy Collector; Here is her inspiring story in tamil
Story first published: Saturday, July 17, 2021, 17:59 [IST]
Desktop Bottom Promotion