For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா

|

ஆபாசப் படங்கள் நடிப்பதற்கும் எடுப்பதற்கும் தயாரிப்பதற்கும் பலரும் இந்த கால கட்டத்தில் முன்வருகின்றனர். ஏனென்றால் ஒருகாலத்தில் ஆபாச கவர்ச்சிப் படங்கள் வேறாகவும் சாமானிய மக்களுக்கான மற்ற படங்கள் வேறு வேறாகவும் இருந்தது.

tragedic life story of glamour actress shakeela

அந்த சமயத்தில் ஆபாசப் படங்களில் நடிக்க வந்து மக்கள் மனதைக் கவர்ந்தவர்கள் என்றால் விரல்விட்டு எண்ணிவிட முடியும். அப்படிப்பட்ட சூழலிலும் சரி, இன்றைக்கு சாதாரண கமர்ஷியல் படங்களிலேயே ஆபாசங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நம்பர் 1

நம்பர் 1

ஆபாசப் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் யார் நினைவிலும் இருப்பதில்லை. ஹீரோயின்களை மட்டும் எல்லோரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அந்த நடிகைகளுக்கு சில குறிப்பிட்ட ஆண்டுகள் அவர்கள் இளமையாக கவர்ச்சியாக இருக்கும் வரையில் தான் மார்க்கெட் இருக்கும். அதையெல்லாம் தாண்டி, பொதுவாக இந்த பேரைச் சொன்னாலே ஆண்க்ள எல்லோரும் சொக்குப்பொடி போட்டது போல் மயங்குகிறார்கள் என்றால் அது கவர்ச்சி நடிகை ஷகிலாவாகத் தான் இருக்க முடியும்.

MOST READ: இந்த செடிக்கு பேரே இன்சுலின் செடியாம்... இது தெரியாம நாம சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிடறோம்...

பேட்ட - விஸ்வாசம் பற்றி

பேட்ட - விஸ்வாசம் பற்றி

என்னதான் எல்லா ஆண்களுக்கு அவரைப் பிடித்திருந்தாலும் அவர் மனதை கொள்ளை கொண்டவர்கள் யாராவது இருப்பார்கள் அல்லவா?... அதுபோல் அவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகர்கள் இருப்பார்கள். அதுபற்றி ஷகிலாவே நிறைய சொல்லியிருக்கிறார். இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஷினிகாந்தின் பேட்ட திரைப்படமும் அல்டிமேட் ஸ்டார் "தல" அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளிவந்திருக்கும் இந்த நிலையில் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இரண்டில் எந்த படத்தின் முதல் ஷோவுக்குப் போவது என்று.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்கள் பற்றியும் தனியார் தொலைக்காட்சி ஒன்று தொலைபேசி மூலம் தன்னுடைய விருப்பத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஷகிலா. அதுபற்றி பார்ப்போம்.

சினிமா நுழைவு

சினிமா நுழைவு

தன்னுடைய பள்ளிப் பருவத்தில் இருந்தே சினிமாவில் ஆர்வம் அதிகமாக இருந்த ஷகிலா, தன் வீட்டுக்கு அருகில் குடியிருந்த சினிமாவில் வேலை செய்யும் பிரபல மேக்கப் மேன் வீட்டுக்குச் சென்று அவர்களுடைய குடும்பத்துடன் விளையாடுவது, அன்பு பாராட்டுவதுமாக இருந்துள்ளார். தனக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை என்றதும் அந்த மேக்கப் மேனை தன் அப்பாவிடம் சிபாரிசு செய்ய அழைத்துச் சென்று, அதன்பின் சினிமாவில் நுழைந்தார். அந்த சிறு வயதில் இருந்தே அவருக்கு சினிமாவின் மீது தீராத மோகம் இருந்திருக்கிறது.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

மலையாளப் படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டு, கிட்டதட்ட 24 படங்களுக்கு தான் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார். ஷகீலாவை ஏதேனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தால் எடுக்கும் படத்தின் கலர் மாறிவிடும் என சொல்கிறார். தன்னுடைய 15 வயது முதல் சினிமாவில் இருக்கிறேன். எனக்கும் நடிப்பு வரும். ஆனால் ஷகீலா என்றாலே ஆபாசப் பெண் என்கிற கதாபாத்திரம் தவிர வேறு எந்த கதாபாத்திரமும் தருவதில்லை. அது மிகுந்த வேதனை தெரிவித்திருந்தார்.

கமல் ரசிகை

கமல் ரசிகை

எல்லோரும் ஷகிலாவின் ரசிகர்களாக இருந்தாலும் ஷகிலாவோ உலக நாயகன் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய பொழுதுபோக்கே வீட்டில் இருக்கும்போது கமல் படங்களைப் பார்ப்பது தானாம். கமலின் எல்லா படங்களும் எனக்குப் பிடிக்கும். கமல்ஹாசனைச் சந்திக்க வேண்டும் என்றும் அவருடைய கட்சியில் சேர வேண்டும் என்ற ஆசை கூட எனக்கு உண்டு. கமல் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

தான் ஒரு அதிகாரத்துக்கு வந்தால் குழந்தைகள் மீது நடக்கின்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற முயற்சி செய்வேன். அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுப்பேன் என்று குறிப்பிட்டார்.

ஏமாந்த கோழி

ஏமாந்த கோழி

நடிக்க வந்த காலகட்டம் முதல் சில ஆண்டுகள் முன்பு வரை தான் சம்பாதித்த பணத்தை தன்னுடைய அக்காவிடம் தான் கொடுத்து வந்தேன். ஒருகட்டத்தில் அவர் என்னை ஏமாற்றி விட்டார். பிரச்சினை ஏற்பட்ட பின் அவருடன் பேசிக் கொள்வதில்லை.

MOST READ: இந்த மூன்று லக்கி ஜோடிகளுக்கு தான் 2019- ல் திருமண யோகம் அமோகமா இருக்குமாம்...

நிறைய தற்கொலை முயற்சி

நிறைய தற்கொலை முயற்சி

நிறைய முறை நான் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன். நிறைய காதல் தோல்விகள் இருந்துமே ஒருமுறை கூட அதற்காக தற்கொலை செய்ய முயற்சி செய்யவில்லை. என்னுடைய குடும்பத்தில் நடந்த சின்ன சின்ன மனக்கசப்புகளாக முயற்சி செய்தேன். என் குடும்பத்துக்காக தான் நான் இப்படி கவர்ச்சி நடிகையாக தள்ளப்பட்டேன். ஆனால் என்ன அம்மாவே என்னை நம்பமாட்டார். அதற்காக நிறைய முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன்.

ஆணவக் கொலைகள்

ஆணவக் கொலைகள்

இரண்டு மனங்கள் இணைந்து திருமணம் செய்து கொண்ட பின் எதற்கு சாதி. ஆணவக் கொலைகள் என்பது மிகவும் தவறான விஷயம். அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானிக்கும் உரிமை உண்டு.

ஆன்மீக அரசியல் பற்றி

ஆன்மீக அரசியல் பற்றி

மத ரீதியான சீண்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஆன்மீகம் என்றால், நீங்கள் சத்தியவான்கள், நீங்கள் நல்லது மட்டும்தான் செய்யப் போகிறீர்களா? என்று ஆன்மீக அரசியல் பற்றி வினா எழுப்புகிறார்.

பேட்ட படம்

பேட்ட படம்

நான் கமல் ரசிகையானாலும் கூட பேட்ட டிரெயிலர் பார்த்தேன். அவரைப் பற்றி சொல்ல வார்த்தையே இல்லை. ஆசமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தியேட்டரில் நான் பேட்ட படத்தை பார்க்க விரும்புகிறேன். நான் பலமுறை டிரெயிலர் பார்த்தேன். ஒவ்வொன்றும் புதிதாக ஜாலியாக இருப்பது போல தோன்றுகிறது. நிறைய எதிபார்ப்புடன் பார்க்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அஜித் பற்றி

அஜித் பற்றி

அதேபோல அஜித் சார் நாளுக்கு நாள் ஸ்மார்ட் ஆகிக்கொண்டே போகிறார். அவர் பிளாக் ஹேர்டையிலும் சூப்பராக இருக்கிறார். அதேபோல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கும் சூப்பராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

MOST READ: கோதுமையைவிட அரிசிதான் ஆரோக்கியமானது... சொன்னா நம்பமாட்டீங்க... நீங்களே பாருங்க

ஓட்டு போட்டதே இல்ல

ஓட்டு போட்டதே இல்ல

ஷகிலாவுக்கு ரேஷன் கார்டு என்பதே கிடையாதாம். முன்பு வீட்டில் 13 பேர் இருந்தோம். அப்போது இருந்தது இப்போது வீட்டில் நான் தனியாக இருப்பதால் தர மறுக்கிறார்கள் என்று சொன்னதோடு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியிருக்கிறார். அவர் இதுவரைக்கும் ஒருமுறை கூட ஓட்டு போட்டதே இல்லையாம். முதல்முறை எடுத்த வாக்காளர் அட்டை கிடைக்காததால் திரும்ப விண்ணக்கவே இல்லையாம். எவ்வளவு வெள்ளந்தியாக இருக்கிறார் பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

tragedic life story of glamour actress shakeela

here we are talking about the tragedic life story of glamour actress shakeela according to her interview
Story first published: Thursday, January 10, 2019, 14:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more