For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பான்காரன்கிட்ட கத்துக்க வேண்டிய செம மேட்டர் இருக்கு அது என்னன்னு தெரியுமா?

ஜப்பானியர்களிடம் இருந்து நாம் தெரிந்துகொள்ளவும் கற்றுக் கொள்ளவும் வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

By Mahibala
|

பொதுவாக பெரியவர்கள் சொல்கின்ற ஒரு விஷயம் என்னவென்றால் யாரையும் அவ்வளவு எளிதாக நினைத்துவிடக் கூடாது. நம்மைவிட சிறியவர்களோ பெரியவர்களோ அவர்களிடம் இருந்து என்ன நல்ல விஷயங்கள் இருக்கிறதோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.

These Things You Should Learn From Japanese

அப்படிப் பார்க்கும் பொழுது, ஜப்பானியர்களிடம் இருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது பற்றிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மை

நேர்மை

மற்றவர்களைப் போல அல்லாமல் ஜப்பானியர்கள் தான் உலகில் அதிக அளவில் நேர்மையாளர்களாக இருப்பார்களாம். அதேபோல அதேஅளவு நேர்மையை மற்றவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்களாம். பர்சனலாகவே பொய் சொல்வதைத் தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள்.

வேலை

வேலை

அடுத்தவர்களுடைய வேலையில் தலையிடாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

MOST READ:உச்சா போற எடத்துல கடுகடுனு வலிக்குதா? புற்றுநோயா கூட இருக்கலாம்... இத சாப்பிடுங்க சரியாயிடும்

பொது இடங்கள்

பொது இடங்கள்

பொது இடங்களில் செல்லுகின்ற பொழுது அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள். அதனால் பொது இடங்களில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

செல்போன்

செல்போன்

ரயில், பஸ் பயணங்களில் செல்போன் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. சத்தமாகப் பேசினாலும் பிடிக்காது. முடிந்தவரையில் பேசுவதைத் தவிர்த்து அமைதியாகவே பயணங்கள் மேற்கொள்கிறார்கள்.

MOST READ:ஒரு குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கலாம்?

தாய்மொழி

தாய்மொழி

தங்களுடைய தாய்மொழியை அவர்களைவிடவும் அதிகமாக நேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.

MOST READ:முன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா?

பயணங்களின் போது

பயணங்களின் போது

ரயில் பயணங்களில் அல்லது பஸ்ஸில் போகின்ற பொழுது, கூட்டமாக இருந்தாலும் கூட்டமே இல்லாவிட்டாலும் சரி, இறங்குகின்ற பொழுது வரிசையாக நின்று யாரையும் இடித்துக் கொள்ளாமல் ஒருவர் பின் ஒருவராக வரிசையாகத் தான் இறங்குவார்கள்.

சரியான நேரங்கள்

சரியான நேரங்கள்

நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராத ஒரு விஷயம் இதுதான். அலுவலகத்துக்கு மிகச் சரியான நேரத்துக்குச் சென்று விடுவது ஜப்பானியர்களின் பழக்கமாக இருக்கிறது.

MOST READ:ஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது? என்ன செஞ்சா பிரச்னை தீரும்?

வேலை நேரம்

வேலை நேரம்

வேலை நேரத்தில் செல்போனைப் பயன்படுத்தவே மாட்டார்கள். எத கத்துக்கிறோமோ இல்லையோ இத கட்டாயம் கத்துக்கணும்ப்பா. வேலை நேரத்தில் ஓபி அடிக்கும் பழக்கமே ஜப்பானியர்களுக்குக் கிடையாதாம். 12 மணி நேரம் வேலை இருந்தாலும் முறையாகவும் சரியாகவும் வேலை செய்து முடிப்பார்களாம். ரொம்ப சிஷ்டமேட்டிக்காக இருப்பார்கள்.

MOST READ:இது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க... நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்களை பொழுது போக்கிற்காகவே பெரிதும் பயன்படுத்துவார்கள்.

MOST READ:வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...

மற்றவர்களுடைய பொருள்

மற்றவர்களுடைய பொருள்

நம்மகிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்னு அவங்ககிட்ட இருக்கு. அடுத்தவர்களுடைய பொருளுக்கு எப்போதும் ஆசைப்படமாட்டார்கள்.

சரக்கு

சரக்கு

எவ்வளவு தான் சரக்கு அடிச்சாலும் நம்ம ஆளுங்க மாதிரி ரோட்ல படுக்காம பத்திரமா வண்டியேறி வீட்டுக்குப் போய்விடுவார்களாம்.

MOST READ:முடி சரசரனு வேகமா வளரணுமா? இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்...

சுற்றுப்புற சுத்தம்

சுற்றுப்புற சுத்தம்

சுற்றுப்புறச்சூழல் மீது அக்கறையும் கவனமும் கொண்டிருப்பதில் உலக அளவில் ஜப்பானியர்களுக்கு நிகர் ஜப்பானியர்கள் தான். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, உதாராணமாக குப்பைகளையெல்லாம் மட்கும் மட்காத குப்பைகளாகப் பிரித்து தனித்தனி கவரில் போட்டு அப்புறப்படுத்துவது, சாலைகளில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது, பொது இடங்களில் அசுத்தங்களைச் செய்யாமல் இருப்பது, குறிப்பாக, சாலைகளில் பொது இடங்களில் புகைப் பிடித்தலைத் தவிர்ப்பது ஆகியவற்றைக் கடைபிடிக்கிறார்கள்.

உதவி செய்தல்

உதவி செய்தல்

அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் படிக்கட்டுகள் மற்றும் எக்ஸ்லேட்டர்களில் போகின்ற பொழுது, ஓரமாக நிற்ப, அவசரமாகச் செல்கின்றவர்களுக்கு வழிவிடுவது போன்ற நாகரீகங்களைப் பின்பற்றுகிறார்கள்.

மொழி தெரியாத வெளிநாட்டினர் யாராவது உதவி கேட்டால் சிறிதும் சளைக்காமல் அவர்களுக்கு உதவி செய்வார்கள். வழி தெரியவில்லை என்றா்ல அந்த இடத்துக்கு வழிகாட்டி அழைத்துக் கொண்டே செல்வார்கள்.

MOST READ:கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த வேலைகளை செய்யறதுக்கு முன் ஜாக்கிரதையா இருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Things You Should Learn From Japanese

I recently visited Japan out of a childhood obsession that has plagued me forever. From visiting the megapolis of Tokyo to the ancient capital of Nara, there were some things that make Japan unique from the rest of the world.
Desktop Bottom Promotion