For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்... யார் அந்த சிறுமி?

புத்தரும் புத்தரை சந்தித்த சிறுமியின் கதையையும் பற்றி தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். அது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். அந்த சிறுமிக்காக தன்னுடைய பிரசங்கத்தையே கொஞ்சம் நேரம் நிறுத்தி வைத்துக

|

புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு சிறுமிக்கு புத்தர் மேல் இருந்த பக்தி பற்றியும் அந்த சிறுமிக்கு புத்தர் அளித்த பதில் மொழியும் குறித்து கூறுவது இந்த பதிவு.

Lord Buddha

மேலும் ஒரு குரு மற்றும் சிஷ்யரின் உறவு குறித்து விளக்கும் ஒரு பதிவாகவும் இது இருக்கும். இவர்கள் இருவரும் சந்திக்கும் விதி எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது என்பதைத் தெரிந்துக் கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புத்தரின் பயணம்

புத்தரின் பயணம்

புத்தபிரான் பல இடங்களுக்கு பயணம் செய்து அவருடைய பிரசங்கங்களை நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் தொலை தூரத்தில் இருக்கும் கிராமம் நோக்கி அவர் பயணிக்க எண்ணினார்.

அந்த கிராமம் மிகத் தொலைவில் இருந்ததால் அந்த இடம் நோக்கி செல்ல மிகவும் சோர்வாக இருந்தது. ஆனாலும் அந்த கிராமத்திற்கு செல்வதைத் தீர்மானமாகக் கொண்டிருந்ததால் புத்தர் அந்த கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.

MOST READ: தொழுநோய் யாருக்கெல்லாம் வரும்... என்ன அறிகுறி? முழுசா தெரிஞ்சிக்க இத படிங்க

புத்தர் சந்தித்த சிறுமி

புத்தர் சந்தித்த சிறுமி

அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் புத்தர் ஒரு சிறுமியைச் சந்தித்தார். அந்தச் சிறுமி ஏதோ ஒரு அவசரத்தில் இருந்தாள். அவள் புத்தரை நிறுத்தி, அவரை வணங்கி தான் திரும்ப வரும்வரைக் காத்திருக்குமாறு கூறினாள். அவள் தன்னுடைய தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்புவதாகக் கூறிச் சென்றாள்.

அவளுடைய தந்தை ஒரு வயலில் வேலை செய்து கொண்டிருப்பதாகக் கூறினாள். "நான் வரும்வரை உங்கள் பிரசங்கத்தைத் தொடங்க வேண்டாம்" என்று கூறிவிட்டு வயல் நோக்கி சென்று விட்டாள் .

பெரிய கூட்டத்தைச் சந்தித்த புத்தர்

பெரிய கூட்டத்தைச் சந்தித்த புத்தர்

புத்தர் தான் அடைய வேண்டிய இடத்தை அடைந்துவிட்டார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஒரு பெரிய கூட்டம் அங்கே குழுமி இருந்தது. புத்தரை அங்கு கண்டவுடன் அவ்வளவு பேரும் எழுந்து நின்று அவரை வணங்கி வரவேற்றனர். அனைவரும் புத்தரின் பிரசங்கத்தைக் கேட்க ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் புத்தர் தன்னுடைய பிரசங்கத்தைத் தொடங்கவில்லை. அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து," ஐயா, பிரசங்கத்தை நீங்கள் எப்போது தொடங்குவீர்கள்?" என்று கேட்டார். உடனே அதற்கு புத்தர்," நான் எதிர்பார்க்கும் நபர் வந்துவிட்டால் உடனே நான் பிரசங்கத்தைத் தொடங்கி விடுவேன்" என்று பதிலுரைத்தார்.

சிறுமிக்காக காத்திருந்த புத்தர்

சிறுமிக்காக காத்திருந்த புத்தர்

புத்தர் வரும் வழியில் சந்தித்த அந்த சிறுமிக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் அந்தச் சிறுமி அங்கு வந்துவிட்டாள். "என்னை மன்னித்து விடுங்கள் ஐயா, நான் வருவதற்கு சிறிது கால தாமதம் ஆகிவிட்டது" என்று கூறினாள். மேலு புத்தரைக் காண்பதற்காக அவள் நீண்ட காலம் காத்திருந்ததாகவும் அவள் கூறினாள்.

முதன்முதலில் புத்தரைப் பற்றி கேள்விப்பட்டபோது அவளுடைய வயது நான்கு என்றும் கூறினாள். புத்தரின் பெயரைக் கேட்டவுடன் அந்தச் சிறுமியின் மனதில் அன்பும் பக்தியும் திரண்டு வந்ததாகவும் கூறினாள் . இப்போது அவளுக்கு வயது பதினாலு. பத்து வருடங்கள் கழித்து புத்தரைக் காணவேண்டும் என்ற அவளுடைய ஆவல் பூர்த்தியானது.

MOST READ: தேனை இப்படி சாப்பிட்டிருக்கீங்களா? சாப்பிடுங்க இத்தனை நோயும் பறந்துடுமாம்...

சிறுமியைக் காணவந்த புத்தர்

சிறுமியைக் காணவந்த புத்தர்

இந்த செய்தியை அந்தச் சிறுமி கூறி புத்தர் அவற்றைக் கேட்டறிந்தார். அவளுடைய காத்திருப்பு வீண் போகவில்லை என்று புத்தர் கூறினார். புத்தர் இவ்வளவு தூரம் பயணம் செய்ய அந்தச் சிறுமிதான் காரணம் என்று கூறினார். இதன் பிறகு அவருடைய பிரசங்கம் தொடங்கியது.

தியானத்தில் ஈடுபடுத்த

தியானத்தில் ஈடுபடுத்த

தியானத்தில் தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்று சிறுமி விரும்பினாள்.

பிரசங்கம் நிறைவு பெற்றவுடன், சிறுமி புத்தரை நோக்கி வந்து, அவளையும் தியானத்தில் ஈடுபடுத்துமாறு வேண்டினாள். புத்தரின் சிஷ்யையாக வேண்டும் என்று அவள் விரும்பினாள். புத்தரும் அவளுடைய விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்.

இந்த வயதான காலத்தில் இவ்வளவு தூரம் கடந்து வந்து பிரசங்கம் செய்வது முடியாத நேரத்திலும் இந்தச் சிறுமிக்காக அவர் வந்ததால், அவளைத் தன்னுடன் கூட்டிச் செல்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று அவர் ஒப்புக் கொண்டார். அந்த கிராமத்தில் இருந்து அவருக்கு சிஷ்யையாக அவள் ஒருத்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டாள்.

ஆனந்தா ஒரு பதிலை எதிர்பார்த்தார்

ஆனந்தா ஒரு பதிலை எதிர்பார்த்தார்

ஆனந்தா என்பவர் புத்தரின் தலைமைச் சீடர் ஆவார். இரவு ஆசிரமத்தில் அனைவரும் உறங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது, ஆனந்தா புத்தரிடம் ஒரு கேள்வி கேட்டார். அடுத்த நாள் புத்தர் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை ,முடிவு செய்வதற்கு அந்த இடத்தில் இருக்கும் எதாவது மந்திர ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்குமா என்பது அவருடைய கேள்வியாக இருந்தது.

MOST READ: ஒயிட் ஒயின் - ரெட் ஒயின் ரெண்டுல எது ஆரோக்கியம்? தெரிஞ்சிக்கங்க...

குருவும் சிஷ்யரும் சந்திப்பது

குருவும் சிஷ்யரும் சந்திப்பது

ஆம் என்று கூறினார் புத்தர். மக்கள் அவரை காண வேண்டும் என்று தீவிரமாக நினைக்கும்போது, அந்த இடத்திற்கு செல்ல அவர் தீர்மானிப்பதாகக் கூறினார். சிஷ்யரின் இருப்பிடம் நோக்கி குருவிற்கு ஒரு ஈர்ப்பு உண்டாவதாக அவர் கூறினார். இந்த ஈர்ப்பு என்பது உடல் அல்லது மனம் சார்ந்தது அல்ல, இதயம் சார்ந்தது. ஆன்மா சார்ந்தது என்று கூறினார். ஆன்மா சந்திக்க வேண்டும் என்று நினைக்கும்போது இந்த சந்திப்பு சாத்தியமாகிறது என்று அவர் கூறினார். அதனால் தான் இந்த குருவும் சிஷ்யரும் இப்போது சந்தித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Story About Lord Buddha And The Little Girl

Lord Buddha used to visit several places and preach his sermons. This post talks about the devotion of a girl towards him and his response to her. This also further explains the relationship between a Guru and his disciple, and how they are destined to meet each other. Read on.
Story first published: Monday, May 6, 2019, 15:35 [IST]
Desktop Bottom Promotion