Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
பெண்ணுக்கு பிறப்புறப்பில் மச்சம் இருந்தா பேரதிஷ்டமாம்... அப்போ ஆண்களுக்கு?
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தங்களுடைய அந்தரங்கப் பகுதிகளில் இருக்கிற மச்சங்களுடைய பலன்கள் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய ஒரு தொகுப்பு தான் இது.
மச்சங்களைப் பற்றி நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் மச்சங்களும் கூட நம்முடைய வாழ்க்கையையும் அதிர்ஷ்டத்தையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டவையாக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
இதைப் பற்றிய தெளிவாக விளக்கங்களைப் பற்றித் தான் மச்ச சாஸ்திரம் பேசுகிறது.

அதாவது நம்முடைய உடலில் எந்தெந்த இடத்தில் உள்ள மச்சங்களுக்கு என்னென்ன அர்த்தம் என்று மிக விளக்கமாகப் பேசுகிறது.

மச்ச சாஸ்திரம்
சாஸ்திரங்கள் என்பது என்னவென்றால், வழிமுறைகள் என்று பொருள். எந்த விஷயங்கள் எப்படி நடக்கின்றன. நாம் எப்படி நடக்க வேண்டும் என்ற வழிமுறைகளைப் பற்றி பேசுவது தான் சாஸ்திரம். அதேபோல தான் மச்ச சாஸ்திரமும். நம்முடைய உடலில் எந்த இடத்தில் எப்படிப்பட்ட மச்சம் இருக்கிறது. எந்த அளவில் இருக்கிறது, எந்த நிறத்தில் இருக்கிறது என்பதை வைத்து அதற்குரிய குணாதிசயங்கள் மற்றும் பலன்கள் பற்றி மச்ச சாஸ்திரம் மிக விரிவாகப் பேசுகிறது.

ஆண் - பெண் வேறுபாடு
பொதுவாக மச்சத்திற்கு சில பலன்கள் உண்டு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மச்சத்துக்கும் ஆண் பெண் வேறுபாடு உண்டு. ஒரே இடத்தில் உள்ள மச்சத்திற்கான பலன்கள் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் இருக்கிறது. உதாரணமாக உதட்டுக்கு அருகில் ஒரு மச்சம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அது ஆண்களுக்கு இருந்தால் அதற்கான பலன்கள் வேறாகவும் பெண்களுக்கு இருந்தால் அதற்கான பலன்கள் வேறாகவும் இருக்கும்.

அந்தரங்கப் பகுதி மச்சங்கள்
அந்தரங்கப் பகுதி மச்சங்கள் என்பது மார்புப் பகுதி, பிறப்புறுப்பு மற்றும் தொடைப்பகுதி மச்சங்களைக் குறிப்பிடலாம். அதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன மாதிரியான பலன்கள் வேறுபடுகின்றன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

முதுகு
தங்களால் பார்க்க முடியாத அளவுக்கு முதுகில் பெண்களுக்கு மச்சம் இருந்தால், அந்த பெண்கள் மிகவும் துணிச்சல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கை வாழ்வார்கள்.
இதுவே ஆண்களுக்கு முதுகுப் பகுதியில் மச்சம் இருந்தால், அதிர்ஷ்டசாலிகளாகம் பக்தியில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதேபோல் முதுகில் வலது பக்கம் மச்சம் இருந்தால், பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தொடையில் மச்சம்
பெண்களுக்கு இடது தொடையில் மச்சம் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கஷ்டப்பட்டு, வாழ்க்கையில் உன்னத நிலைக்கு உயர்ந்து செல்வார்கள். அதுவே வலது தொடையில் மச்சம் இருந்தால் அவர்கள் திமிர் பிடித்தவர்களாகவும் அடங்காபிடாரித் தனமாகவும் இருக்கும்.
ஆண்களுக்குத் தொடையில் மச்சம் இருந்தால், வசதியான வாழ்க்கை வாழக்கூடியவர்குளாக இருப்பார்கள். தொடையின் கீழ்ப்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் கொஞ்சம் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.

மார்பில் மச்சம்
பெண்களுடைய இடது மார்பகத்தில் மச்சம் இருந்தால், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவார்கள். சிறந்த வாழ்க்கைத் துணை கிடைக்கும். வலது பக்கம் மார்பகத்தில் மச்சம் இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் ஒரே போராட்டமாகவே இருக்கும்.
ஆண்களுக்கு இடது மார்பில் மச்சம் இருந்தால் பெண்களிடம் மிகவும் பாசமாகப் பழகுவார்கள். நிறைய ஆண் குழந்தைகள் பிறக்கும். இதுவே வலது மார்பில் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருந்தாலும் கூட, மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் குணம் கொண்டிருப்பார்கள்.

தொப்புளில் மச்சம்
ஆண்களுக்கு தொப்புளில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
இதுவே பெண்களுக்கு தொப்புளின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் அமைதியும் இன்பமும் உண்டாகும். அடுத்தவர்களால் எப்போதும் பாராட்டப்படுவார்கள். பொதுவாக ஆண்களைப் போலவே பெண்களும் தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை வாழ்வார்கள். இதுவே தொப்புளுக்குக் கீழ் மச்சம் இருந்தால் செல்வமும் வறுமையும் மாறிமாறி வரும்.

பெண்ணின் பிறப்புறுப்பு
பெண்ணின் பிறப்புறுப்பில் மச்சம் உள்ளவர்கள் பேரதிஷ்டசாலிகளாக இருப்பார்கள். தன்னுடைய வாழ்க்கையைத் துணையை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பார்கள். நினைத்ததை சாதிக்கும் துடிப்பும் பிடிவாதமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆணுறுப்பில் உள்ள மச்சம்
ஆணுறுப்பில் மச்சம் இருக்கும் ஆண்களுக்கு வாழ்க்கை எப்படி அமையும். இவர்கள் என்ன செலவு செய்தாலும் அதற்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். கலை ஞானமும் ரசனையும் அதிகமாகக் கொண்டவர்களாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











