Just In
- 1 hr ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 2 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
- 3 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?.. கண்டிப்பா படிங்க…!
- 3 hrs ago
அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா?
Don't Miss
- Sports
இந்திய சிறுமிக்கு பரிசளித்த வெ.இண்டீஸ் வீரர்.. போட்டிக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- Movies
சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்!
- Automobiles
அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!
- News
கையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய்.. நடுரோட்டில் இளைஞர் ரகளை.. யாருக்காக தெரியுமா?
- Finance
இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..! தமிழகத்தின் நிலை என்ன..?
- Technology
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- Education
ISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கங்குலியுடனான உறவு பற்றி 18 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த நக்மா
தமிழ்நாட்டு கதாபாத்திரங்களுக்குக் கொஞ்சமும் ஒத்துப் போகாத அச்சு அசல் வடஇந்தியர்களின் முகத்தோற்றம். ஆனாலும் 90 களில் கேரள, தமிழக நடிகைகளுக்கு மத்தியில் ஒரு புதிய வரவாகக் களமிறக்கப்பட்டவர் தான் நடிகை நக்மா.
90 களில் இளைஞர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டிருந்தவர் தான் நக்மா. அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் அசை போடலாம்.

பிறப்பு
1974 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு மொத்தம் 3 பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறந்தவுடன் இவருக்கு வைத்த பெயர் நந்திதா மொராஜி. வீட்டில் இவரை செல்லமாக அழைக்கும் பெயராக நர்மதா சாதனா என்ற பெயரும் இருந்தது. அதை சுருக்கியே திரைத்துறைக்கு வந்தபின் நக்மா என்று அழைக்கப்பட்டார். இவருடைய தந்தை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். தாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவர் நம்ம ஜோதிகாவோட அக்கா என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.
MOST READ: வடிவேலுவின் செம கெட்டப்பும் பட்டைய கிளப்பிய டயலாக்கும் (#வடிவேலு காமெடி கலெக்ஷன்ஸ்)

நடித்த மொழிகள்
தன்னுடைய திரைப்பிரவேசத்தை முதலில் பாிலவுட்டில் தான் தொடங்கினார். அதன்பின் தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் அறிமுகம்
தமிழில் இவர் முதன்முதலில் அறிமுகமானது இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று சொல்லப்படுகின்ற பிரபுதேவாவுடன் தான். அந்த முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பாற்றலால் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் வெளிவந்தது 1994 இல். அந்த முதல் படத்துக்காகவே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூப்பர் ஸ்டாருடன்
காதலன் படத்தில் இவருடைய நடிப்பைப் பார்த்து அசந்து போன இயக்குநர்கள் நான், நீ என போட்டி போட்ட தருணத்தில் நக்மாவுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. சூப்பர் ஸ்டாரின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லக்கூடிய, இன்றளவும் எந்த படத்தாலும் அந்த சாதனையையும் உச்சத்தையும் எட்ட முடியாத படமாகிய பாட்சா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அடித்து நொறுக்கியிருப்பார் நக்மா அவர்கள். பிறகு பிரபுதேவாவுடன் லவ் பேர்ட்ஸ் படத்திலும் நடித்தார்
MOST READ: நியூமராலஜியில் 3 ஆம் எண்ணுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?

ரகசிய போலீஸ்
பாட்சா படத்துக்குப் பின் 90 களில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த சரத்குமாருடன் ரகசிய போலீஸ் படத்தில் நடித்தார். இந்த படத்தில் சரத்குமாருடன் நெருக்கமாக நடித்ததால் இருவருக்கும் காதல் என்று கூட கிசுகிசுக்கள் பேசப்பட்டன. 1995 இல் இந்த படம் வெளியானது. இந்த ஆண்டில் மட்டும் 3 படங்கள் நடித்தார்.

கார்த்திக்
நம்ம நவரச நாயகன் கார்த்திக்கும் நக்மாவுக்கும் செம கெமிஸ்ட்ரியை படங்களில் பார்த்திருக்க முடியும். கார்த்திக்கும் ஒரு தமிழ்ப் பையனைப் போல இருக்க மாட்டார். அதனாலே அந்த ஜோடிக்குள் வேறுவிதமாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனது என்றுதான் சொல்ல வேண்டும். மேட்டுக்குடி, பிஸ்தா என இருவரும் அடுத்தடுத்து படங்கள் நடித்தனர்.
MOST READ: மணிக்கட்டில் சுளுக்கிடுச்சா? வலிக்குதா? நீங்களே எப்படி சரிசெய்து கொள்ளலாம்?

தல அஜித்
ரஜினி மட்டுமா தல அஜித் கூடுவும் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார் நக்மா. அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் கூட மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் தீனா படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கும் இணைந்து நடித்திருப்பார்.

மற்ற திரைப்படங்கள்
அதேபோல், ஜானிகராமன், பெரிய தம்பி, அரவிந்தன், வேட்டிய மடிச்சுக்கட்டு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

அரசியல் பிரவேசம்
திரைப்பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்த சமயத்தில் தனக்கு அரசியலில் ஆர்வம் இருந்ததால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வெறுமனே அரசியலில் சேர்ந்தது மட்டுமில்லாமல் படங்களைப் போலவே இதிலும் வேகமாகவே வளர்ச்சியடைந்தார். அதன் விளைவாக கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் மீரட் தொகுதியில் போட்டியும் போட்டார்.
MOST READ: யாரு என்ன செஞ்சாலும் சும்மா கெத்தா ஸ்டைலா இருக்கற ராசிக்காரங்க யாரு தெரியுமா?

கங்குலியுடனான உறவு
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கங்குலியுடன் காதல் இருந்ததாகவும் இவர்களுடைய பழக்கத்தினால் தான் கங்குலி சரியாக விளையாடமல் போனார் என்றும் பல சர்ச்சைகளுக்கு ஆளானார்கள். பிறகு இருவரும் பிரிந்து போனார்கள். ஆனால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கும் கங்குலிக்கும் இருந்த உறவைப் பற்றி சமீபத்தில் மனம் திறந்திருக்கிறார் நக்மா. அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? இதோ கேளுங்க.
கங்குலிக்கும் எனக்கும் இடையேயான நட்பு மிகவும் அழகானது. அவருடைய ஆட்டம் பாதிக்கப்பட்ட சமயத்தில் தான் எங்கள் இருவருக்குமான நட்பும் நெருக்கத்தில் இருந்தது. ஆனால் எங்களுடைய நட்பு தான் கங்குலியின் ஆட்டத்தைப் பாதித்தது என்று பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. அது எங்களுடைய இருவரின் மனதையும் நிறைய பாதித்தது. நிறைய சமயங்களில் இதயத்தையே நொறுக்கினார்கள்.
எங்களுடைய நட்பு மனம் சார்ந்த விஷயமாகத் தான் இருந்தது. ஆனால் மற்றவர்களின் பார்வை அதை புண்படுத்தியது. அதனால் இருவரும் சேர்ந்து பேசி பிரிவமென்று முடிவெடுத்துப் பிரிந்தோம்.