For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக்பாஸ் ஜூலி கதறி கதறி அழுது வெளியிட்ட விடியோ பார்த்தீங்களா? என்ன பிரச்சினை தெரியுமா?

By Mahibala
|

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான ஒரு ஷோ. பத்து சீசன்களைக் கடந்தும் எதிர்பார்ப்பு குறையாமலே இருந்த ஷோ. அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அதை சல்மான் கான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அதன்பின் மற்ற இந்திய மொழிகளிலும் நடத்தத் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழிலும் மலையாளத்திலும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. முதல் சீசனிலேயே தமிழ் பிக்பாஸ் மிக பிரமாண்ட வெற்றி ஷோவாக மாறியது. இதற்கு மிக முக்கியக் காரணம் உலக நாயகன் என்று சொல்லக்கூடிய நம்முடைய கமல்ஹாசன் சின்னத்திரையில் தோன்றி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி என்பதால் கூடுதல் கவனம் இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிக்பாஸ் வாய்ப்பு

பிக்பாஸ் வாய்ப்பு

Image Courtesy

அதேபோல் இதில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களும் மிக முக்கியம். இதில் முழுக்க முழுக்க சினிமாத் துறையில் இருப்பவர்களுக்காக நடத்தப்பட்டாலும், அந்த சமயத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான புரட்சி பீரங்கி ஜல்லிக்கட்டு ஜூலிக்கும் பிக்பாஸ் 1 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுல நடந்த கதை, காமெடியெல்லாம் தான் உங்களுக்கு தெரியுமே?

ஆல்பங்கள்

ஆல்பங்கள்

Image Courtesy

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் செல்போன், வெளியுலகில் நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரியாமல் இருப்பார்கள். அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, எனக்கு நடிப்பில் சாதிக்க வேண்டும். இதற்கு முன் நர்ஸாக இருந்ததாகவும் தனக்கு கேமரா முன் நின்று நடித்த அனுபவமே கிடையாது என்று ஏகத்துக்கும் அள்ளிவிட்டார். கமல்ஹாசனு அதை நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் பார்வையாளர்கள் சும்மா இருப்பார்களா? தேடித் துருவி எடுத்து பிக்பாஸ் வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே ஜூலி இரண்டு ரொமாண்டிக் ஆல்பங்களில் ஓவர் ரொமாண்டிக்காக நடித்ததை எடுத்து சமூக தளங்களில் உலவ விட்டார்கள். அதைப் பார்த்த கமலே ஷாக் ஆகிப்போனார்.

தொலைக்காட்சி தொகுப்பாளர்

தொலைக்காட்சி தொகுப்பாளர்

பிக்பாஸ் முடிந்தபின்பு, கலா மாஸ்டரின் சிபாரிசின் மூலம் அவர் நடுவராகப் பங்குபெற்று நடத்திக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியான ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை அவர் தொகுத்து வழங்கினார். அதில் பங்கேற்கும் குழந்தைகளிடமே அசிங்கப்பட்டு அழுத கதைகள் நிறைய.

விளம்பரப் படங்கள்

விளம்பரப் படங்கள்

நாளைய இயக்குநர் போன்ற நிகழ்ச்சிகளிலும் அதைத் தாண்டி நிறைய குறும்படங்கள் எடுப்பதும், விளம்பரக் கம்பெனி ஆரம்பித்து விளம்பரப் படங்கள் தயாரித்து வருபவர் ராமநாதபுரம் பகுர்தீன். இவர் தன் ஊரு பொண்ணான ஜூலிக்கு தன்னுடைய துணிக்கடை விளம்பரப் படத்தில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

பொதுமக்களின் பெரும் கோபம்

பொதுமக்களின் பெரும் கோபம்

சக்தி, காயத்ரி ஆகிய இரண்டு பேருமே சினிமா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதனால் பிக்பாஸ் முதல் சீசனில் எப்போதுமே பொய்யை மட்டுமே பேசிக்கொண்டு சக்தி, காயத்ரி ஆகியோருக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு சுற்றி வந்தார் ஜூலி. அதுகூட பரவாயில்லை. யாருடைய பிரச்சினைக்கும் போகாமல் மிக உண்மையாக பொய் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்த ஓவியா மற்றவர்களால் ஓரங்கட்டப்பட்ட போது, அவர்களுடன் சேர்ந்து ஓவியாவை கடுப்பேற்றி நிறைய பிரச்சினையில் மாட்டி விட்டுக் கொண்டே இருந்தார்.

வீட்டில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் அதெல்லாம் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவ்வளவு பேரும் கொலை காண்டில் இருந்தார்கள்.

மக்கள் புறக்கணிப்பு

மக்கள் புறக்கணிப்பு

எலிமினேட் ஆகி வெளியேறும் போது அவரை மன்னித்துவிடும்படி கமல்ஹாசனே மக்களிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் வெளியே வந்த பின் வாங்கிய செருப்படிகள் ஏராளம். அதைவிட, சீசன் 1 முடிந்து சீசன் 2 ம் முடிந்த விட்ட நிலையிலும் கூட, அதன்பின் டீவி நிகழ்ச்சி, விளம்பரப் படங்கள், சினிமா என நடித்தாலும் இன்றும் மக்களால் ஜூலியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சினிமா நுழைவு

சினிமா நுழைவு

தனக்கு சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்ற நிலையில் தான் சுற்றிக் கொண்டிருந்தார் ஜூலி. இதனைத் தொடர்ந்து மன்னர் வகையறா படத்தில் கடைசி கிளைமேக்சில் ஒரு சீனில் மட்டும் நடித்திருந்தார். அதையடுத்து அம்மன் தாயி என்னும் பக்தி படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கிறார்.

இதெல்லாம் பரவாயில்லங.க. நீட் தேர்வு என்னும் கொடுமையால் தன்னுடைய டாக்டர் கனவுக்கு மட்டுமல்லாது தன்னுடைய உயிருக்கும் ஒரு முடிவைத் தேடிக் கொண்ட அனிதா எனும் மாணவியை நம் எல்லோருக்கும் தெரியும். அவருடைய வாழ்க்கையை உதய்குமார் என்னும் இயக்குநர் டாக்டர் அனிதா எம்பிபிஎஸ் என்னும் பெயரில் எடுக்கவிருந்தார். இந்நிலையில் அனிதாவின் அப்பா இதுகுறித்து வழக்கு தொடரவே அந்த படமும் நின்று போனது.

காதல்

காதல்

Image Courtesy

தான் செய்யும் எல்லா வேலைகளுக்கும் இப்படி தடைகள் வந்து கொண்டே இருக்க காதலாவது உருப்படியாக செய்யலாம் என்று கிளம்பியிருந்தார். ஆம். மாடல் நடிகராக இருந்த மார்க் ஹம்ரான் என்னும் நடிகருடன் ஜாலியாக வலம் வந்து கொண்டிருந்தார். தன்னுடைய சமூக வலைப்பக்கங்களில் மை பெஸ்ட்டி என்று ஹேஷ்டேக்குடன் ஹம்ரானுடன் தான் எடுத்துக் கொண்ட படங்களைப் பகிர்ந்து வந்தார். லாங் டிரைவ் போவது, சிசிடியில் அரட்டை என்று போய்க் கொண்டிருந்த காதல் திடீரென அந்தமானுக்குத் தாவியது. ஆம்.இருவரும் அந்தமானுக்கு உல்லாச சுற்றுலாக்கள் சென்று வந்ததோடு அங்கு அவருடன் நெருக்கமாக இருந்த படங்களையும் வெளியிட்டிருந்தார்.

அரசியல் பிரவேசம்

அரசியல் பிரவேசம்

Image Courtesy

பிக்பாஸ், சினிமா, டீவி, காதல் இதெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். திடீரென ஜூலி தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் ரஜினி, கமல் கூடவெல்லாம் போகாமல் தானே தலைவியாகப் போவதாக, அவருடைய கட்சிக்கு இணையதளங்களில் அவருக்கு அவரே விளம்பரங்கள் செய்து கொண்டு பல விடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது தெரியுமா?

கதறி அழும் விடியோ

இரண்டு சீசன்களைக் கடந்த பின்னும் சமூக வலைத் தளங்களில் ஜூலி என்ற பெயரைக் கேட்டாலே ஆபாச வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். சமீபத்தில் ஜூலியை மிக மோசமாக, படித்தே பார்க்க முடீயாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளில் திட்டி நிறைய பதிவுகள் போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து மனம் நொந்து போன ஜூலி கதறி அழுது கொணடே நான் உங்களுக்கு அக்கா, தங்கை மாதிரி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்.

நான் செய்த தவறு என்ன, பொய் சொன்னது அவ்வளவு பெரிய தவறா? இங்கே யார் பொய்யே சொல்லாமல் இருக்கிறார்கள் என்று கதறி அழுத படி ஒரு விடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவிற்கும் ஏராளமான எதிர்ப்பு மோசமான கமெண்ட்டுகள் குவிந்திருக்கின்றன. இரண்டு சீசன்கள் பிக்பாஸ் முடிந்தாலும் ஜூலியையும் ஜூலியின் நடவடிக்கைகளையும் மக்கள் மறக்கவும் இல்லை. மன்னிக்கவும் இல்லை. பாவம் ஜூலி என்ன செய்துதான் இந்த மக்களின் நம்பிக்கையைப் பெறப் போகிறாரோ தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Intresting Facts About Bigg Boss Julie

The Jallikattu girl who was got support from the audience while Harathi was insulting her, has lost the fans support since she is twisting things to remain friends with Gayathri. Julie played a dirty game of joining an alliance to eliminate a contestant from the show.
Story first published: Wednesday, March 20, 2019, 16:15 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more