For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாப்பி பர்த்டே ஜானகி அம்மா... அவங்க ஒரிஜினல் பேரும் வாழ்க்கையும் பத்தி தெரியுமா?

By Mahibala
|

ஜானகி அம்மாவோட பாட்டு பிடிக்காத ஆளு யாராவது இருக்க முடியுமா? அவங்களுக்குப் பின்னாடி பின்னணிப் பாடகராக வந்த ஆண், பெண் பாடகர்கள் அத்தனை பேருக்குமே மானசீக குரு யார் என்று கேட்டால் எல்லோரும் ஒரே குரலில் சொல்லும் பெயர் ஜானகி அம்மா என்பதாக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Interesting Facts About Singer Janaki Amma

இளையராஜாவின் இசையை பட்டிதொட்டியெங்கும் உள்ளவர்களின் காதுகளில் இனிமையாக விழ வைத்தத்தில் பெரும்பங்கு ஜானகி அம்மாவுக்கு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த ஜானகி அம்மாவுக்கு இன்னைக்கு ஹேப்பி பர்த்டே மக்களே!

இந்த ஹேப்பி பர்த்டேவுல அவங்களோட இசை மற்றும் வாழ்க்கைப் பயணத்தை அவங்களோட சேர்ந்து நம்மளும் திரும்பிப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பும் ஊரும்

பிறப்பும் ஊரும்

ஜானகியின் பாடல்களைக் கேட்டு நாம் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அவர் ஆந்திரா குண்டூரைச் சேர்ந்தவர். அவர் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் குண்டூரில் பிறந்தார். ஆனாலும் அவர் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். இவருடைய தந்தை பெயர் ராமமூர்த்தி, தாயின் பெயர் சத்தியவதி. இவருடைய இயற்பெயர் சிஷ்டலா.

 இசைப்பயிற்சி

இசைப்பயிற்சி

இவர் தன்னுடைய சிறு வயதிலேயே இசைப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்படி பாடத் தொடங்கிய அவர் நாதஸ்வர இசைக்கலைஞரான பைடிசாமி என்பவரிடம் தான் முறையாக இசைப் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

MOST READ: கழிவறையை நாக்கால் நக்கி விடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட பெண்... இதோ அந்த காட்சி

 முதல் பெரிய பரிசு

முதல் பெரிய பரிசு

1956 ஆம் ஆண்டு தன்னுடைய பதினெட்டாவது வயதில் ஆல் இண்டியோ ரேடியோவில் நடத்தப்பட்ட பாட்டுப் போட்டியில் அபாரமாகப் பாடி இரண்டாம் பிடித்து, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் கைகளால் பரிசு பெற்றார்.

சென்னை பிரவேசம்

சென்னை பிரவேசம்

ஜானகி அவர்கள் பாடத் தொடங்கிய பின், குடும்பத்துடன் சென்னைக்குக் குடி பெயர்ந்தார்கள். அதனையடுத்து ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் கோரஸ் பாடும் பாடகியாக வேலைக்குச் சேர்ந்தார்.

MOST READ: இதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க

முதல் பாடல்

முதல் பாடல்

அப்படி பாடிக் கொண்டிருக்கும் போது, அவர் பின்னணிப் பாடகியாக முதல் முதலில் பாடிய பாடல் எது தெரியுமா? ஜலபதிராய் என்னும் இசையமைப்பாளரால் விதியின் விளையாட்டு என்னும் படத்துக்காக பெண் என் ஆசை பாழானது ஏனோ என்னும் பாடல் தான் ஜானகி பாடிய முதல் பாடல்.

அடித்தது லக்

அடித்தது லக்

முதல் பாடல் பாடிய அடுத்த நாளே அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. தெலுங்கில் வெளியான எம்எல்ஏ என்னும் படத்தில் நீயாசா அடியார் என்னும் பாடலை தெலுஞ்கின் மிகப் பிரபல பின்னணிப் பாடகரான கண்டசாலாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டே இருந்தன. மிக வேகமாக 6 மொழிகளில் 100 பாடல்களுக்கும் மேல் ஒரே ரவுண்டில் பாடி முடித்தார்.

MOST READ: பொடுகை போக்க கணவரின் சிறுநீரில் தலையை அலசும் பெண்... வாரத்துல ரெண்டு நாள் இப்படிதானாம்

சிங்கார வேலனே தேவா

சிங்கார வேலனே தேவா

என்னதான் 100 பாடல்களுக்கும் மேல் வேகமாகப் பாடினாலும் கூட, ஜானகி அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால், அது கொஞ்சும் சலங்கை என்னும் படத்தில் அவர் பாடிய சிங்கார வேலனே தேவா என்னும் பாடல் தான்.

புகழின் உச்சி

புகழின் உச்சி

அதன்பின் ஜானகியின் வளர்ச்சியை அளக்க எந்த ஏணியும் எட்டாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு வானளவுக்கு அவருடைய உயரம் உயர்ந்து கொண்டே போனது. அவர் பாடிய செந்துரப் பூவே, ஊரு சனம் தூஞ்கிடுச்சு, மச்சானப் பாத்தீங்களா, தூதுவளை இலையரைச்சு, இஞ்சி இடுப்பழகி, சின்ன சின்ன வண்ணப்பூவே, சின்ன தாயவள், காதல் கடிதம் தீட்டவே, காற்றில் எந்தன் கீதம், புத்தம் புது காலை, இப்படி அடுக்கிக் கொண்டே போய்க் கொண்டு போகலாம்.

 பாடிய பாடல்கள்

பாடிய பாடல்கள்

பதினேழு மொழிகளில் கிட்டதட்ட தொடர்ந்து அறுபது வருடங்களாக 48000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் கட்டிப் போட்டு வைத்தவர் தான் ஜானகி அம்மா அவர்கள். ஆனால் திடீரென ஒருநாள் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்கள் பாருங்கள். தான் இனி சினிமாவிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடப்போவதில்லை என்றும் ஓய்வு எடுக்கப் போவதில்லை என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

MOST READ: பிறவியிலேயே சூப்பரா கவிதை எழுதுற ஆற்றல் இந்த 5 ராசிக்கும் இருக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...

விருதுகள்

விருதுகள்

தமிழக அரசினுடைய கலைமாமணி விருதினைப் பெற்றிருக்கிறார். தொடர்ந்து பதினான்கு முறை கேரள மாநில அரசினுடைய சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

ஏழு முறை தமிழ்நாடு அரசினுடைய சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றவர்

பத்து முறை ஆந்திர மாநில அரசினுடைய சிறந்த பாடகிக்கான விருதினை் பெற்றிருக்கிறார்.

தமிழில் இரண்டு தேசிய விருதுகளும் தெலுங்கில் ஒரு தேசிய விருதும் மலையாளத்தில் ஒரு தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

அவருடைய பிறந்த தினத்தில் ஜானகி அம்மாவின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

MOST READ: 76 வயசுல பிளஸ் 2 படிக்கிற பெண் கேட்குதா? 50 பெண்களுக்கு மேல் சீரழித்த தொழிலதிபர்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Singer Janaki Amma

Sistla Janaki (born 23 April 1938), popularly known as S. Janaki, is an Indian playback singer and occasional music-composer from Andhra Pradesh. She is one of the best-known playback singers in South India and has recorded nearly 48,000 songs [1] in films, albums, TV and Radio including solos, duets and chorus songs in 17 languages including those native to India.
Story first published: Tuesday, April 23, 2019, 17:57 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more