For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதார்த்த சினிமாவின் நாயகன் இயக்குநர் மகேந்திரன் பற்றிய சுவாரஸ்ய நினைவுகள்

|

இயக்குநர் மகேந்திரன் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குநர். மரபைப் பிடித்துக் கொண்டு ஒரே நேர்க்கோட்டில் பயணித்துக் கொண்டிருந்த சினிமாவில்

பாலச்சந்தருக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பாராத பல புதுமைகளைப் புகுத்தி அதை மக்களை ஏற்கும்படி பக்குவமாக படம் எடுத்தவர் தான் மகேந்திரன்.

Interesting Facts About Director Mahendran

ஒரே மாதிரியான ரஜினியின் நடிப்பை மாற்றி தற்போது இருக்கும் ஸ்டைலான ரஜினியை நமக்குக் காட்டியவர் அவர் தான். இன்னும் நிறைய சாதனைகள் புரிந்திருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தமிழ் சினிமாவின் மீட்பர்

தமிழ் சினிமாவின் மீட்பர்

இவர் ஒரு உன்னதக் கலைஞன் என்றே சொல்லலாம். 70 களுக்குப் பிறகு தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக பொலிவையும் வீரியத்தையும் இழந்து கொண்டிருந்த சமயங்களில் தமிழ் சினிமாவின் தன்னுடைய எதார்த்தமான கதைகளின் மூலம் மீட்டெடுத்து தமிழ் சினிமாவுக்கு உயிர் கொடுத்த உண்மைத் தமிழ்க் கலைஞன் இவர். இன்று உதிரிப்பூக்களாய் இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார்.

இந்த நேரத்தில் அவருக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலி என்பது தமிழ் சினிமாவில் அவர் நட்டுவிட்டுச் சென்ற மைல் கற்களை திரும்பச் சென்று நினைவுப்படுத்திப் பார்ப்பதாகத் தான் இருக்கும். அதுதான் ஒரு உன்னத கலைஞனுக்கான உண்மையான மரியாதையாகவும் அஞ்சலியாகவும் இருக்க முடியும்.

பிறப்பும் படிப்பும்

பிறப்பும் படிப்பும்

இவர் பிறந்தது 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள். இவருடைய தந்தையின் பெயர் ஜோசப் செல்லையா. தாயின் பெயர் மனோன்மணி. அவருடைய தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். இவருக்கு இவருடைய பெற்றோர்கள் வைத்த பெயர் அலெக்சாண்டர்.

இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர். தன் சொந்த ஊரிலேயே பள்ளிப் படிப்பை முடித்த இவர் பியூசியை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் அதன்பின் பொருளாதாரத்தில் இளநிலை பட்டப்படிப்பை அழகப்பா பல்கலைக் கழகக் கல்லூரியிலும் படித்தார்.

எம்ஜிஆர் முன் துணிச்சல் பேச்சு

எம்ஜிஆர் முன் துணிச்சல் பேச்சு

தன்னுடைய கல்லூரிக் காலங்களிலேயே மேடை நாடகங்களில் மிகவும் ஆர்வ கொண்டிருந்தார் மகேந்திரன். அப்படி ஒருமுறை இவருடைய கல்லூரி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழா மேடையில் கல்ச்சுரல் செக்ரட்டரி என்பதால் மகேந்திரன் பேச அழைக்கப்பட்டார். அப்போது தமிழ் சினிமா வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிற நிலை பற்றியும் பழைய சினிமா முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அவர் பேசிய பேச்சில் எம்ஜிர் சொக்கிப் போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜிஆரை பேச அழைத்தபோது அவர் மகேந்திரனை பாராட்டி மட்டும் வெகுநேரம் பேசியிருக்கிறார்.

பத்திரிக்கையாளர்

பத்திரிக்கையாளர்

கல்லூரிப் படிப்பை முடித்து சென்னைக்கு சென்ற இவருக்கு சட்டம் பயில ஆசை. 7 மாதம் வரை சட்டக் கல்லூரிக்குச் சென்ற இவர் பொருளாதார வசதியின்மை காரணமாக சொந்த ஊருக்கு வந்த அவர் நண்பர் காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பன் என்பவர் மூலம் இனமுழக்கம் என்னும் பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராகப் பணிபுரிந்தார். துக்ளக் பத்திரிக்கையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.

சினிமா நுழைவு

சினிமா நுழைவு

மீண்டும் அவருக்கு எம்ஜிஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தனக்கு பொன்னியின் செல்வனை சினிமாவுக்கான கதையாக மாற்றும் ஆர்வம் இருப்பதை எம்ஜிஆரிடம் கூறினார் மகேந்திரன். அவருடைய வீட்டிலேயே தங்கி திரைக்கதை எழுதினார். அதற்கான பணிகள் தாமதமாகவே எம்ஜிஆர் மகேந்திரனை நாடகத்துக்கான கதைகளை எழுதும்படி சொன்னார். அப்போது அவர் எழுதிய கதைகள் அநாதைகள் என்பது. இந்த கதையைத் தழுவி திரைப்படம் எடுக்க எம்ஜிஆர் விரும்பினார். அந்த படத்தின் பெயர் தான் வாழ்வே வா... நடிகையர் திலகம் சாவித்ரியுடன் அவர் இணைந்து நடித்தது.

அதன்பின் எம்ஜிஆர் தான் நடிக்க ஆரம்பித்த காஞ்சித் தலைவன் எனும் படத்தின் இயக்குநரிடம் மகேந்திரனை உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்தார்.

திரைக்கதை, வசனம்

திரைக்கதை, வசனம்

சொந்தமாக திரைக்கதை எழுதத் தொடங்கிய மகேந்திரன் அவர்கள் முதலில் எழுதிய நாம் மூவர் (1966) என்னும் படத்துக்குத் தான். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே பேனரின் கீழ் சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை போன்ற படங்களுக்கும் திரைக்கதை எழுதினார். அதன்பிறகு சிவாஜி கணேசன் படத்துக்கு திரைக்கதை எழுதும் வாய்ப்பைப் பெற்றார். அந்த படம் தான் சிவாஜி நடித்த நிறைகுடம் (1969).

விருதுகள்

விருதுகள்

சிறந்த கலைஞர்கள் பெரிதாக விருதுகளைத் தேடிப் போவதில்லை. மக்களுடைய அங்கீகாரம் தான் அவர்களுக்கான விருதுகள். அந்த வகையில் மகேந்திரனுக்கு நிறைய விருதுகள் எல்லாம் கிடைக்கவில்லை. 1979 ஆம் வருடம் சிறந்த திரைப்படத்துக்கான விருதை முள்ளும் மலரும் திரைப்படத்துக்காக பெற்றார். அதன்பிள் 2017 ஆம் ஆண்டு IIFA வின் விருது விழாவில் சிறந்த வில்லனுக்கான விருதை விஜய் நடித்த தெறி படத்துக்கான பெற்றார்.

மகேந்திரன் பெயர் மாற்றம்

மகேந்திரன் பெயர் மாற்றம்

அலெக்சாண்டர் என்னும் இயற்பெயர் கொண்ட இவருக்கு மகேந்திரன் என்ற பெயர் மீது ஈர்ப்பு வந்தது. திரைப்படக் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவரின் அதீத விளையாட்டுத் திறமையால் வியந்து அந்த பேரை ரசித்திருக்கிறார். அதன்பின் பல்லவ மன்னன் மகேந்திரப் பல்லவனின் ஈடுபாட்டினால் தன்னுடைய பெயரை மகேந்திரன் என்று மாற்றிக் கொணடார். தன்னுடைய புத்தகங்களில் அந்த பெயரை எழுதி வைத்துக் கொண்டு ரசித்திருக்கிறார்.

தங்கப் பதக்கம்

தங்கப் பதக்கம்

துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் தங்கப் பதக்கம் என்னும் நாடகத்துக்கு திரைக்கதை எழுதினார். அதை நடிகர் செந்தாமரை நாடகமாக பல ஊர்களில் திரையிட்ட போது, 46 ஆவது முறை திரையிடலின் போது அதைப் பார்க்க வந்திருநத சிவாஜி தன்னுடைய மூடிவிட்ட நாடக சபையை மீண்டும் திறந்து இந்த நாடகத்தை நான் போடுகிறேன் என்று சொல்லி நடித்தார். அதன்பிறகு அது படமாக மாற்றப்பட்டது.

முள்ளும் மலரும்

முள்ளும் மலரும்

இப்படி பத்திரிக்கையாளர், திரைக்கதை, வசனம் என்று இருந்த இவர் முதன்முதலாக இயக்குநர் அவதாரமெடுத்தது இன்றளவும் நம் மனதில் நீங்காமல் இருக்கிற முள்ளும் மலரும் தான். இதுவரைக்கும் பார்த்த ரஜினியில் இருந்து அவருக்குள் இருக்கும் ஸ்டைலான புது ரஜினிகாந்தை நமக்கும் ஏன் ரஜினிக்குமே காட்டிய அற்புதமான இயக்குநர்.

உதிரிப்பூக்கள்

உதிரிப்பூக்கள்

இப்படி எதார்த்தமான படங்களை இவரைப் போல இன்றுவரை வேறு யாராலும் எடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு எதார்த்தமான படமாக அமைந்தது தான் உதிரிப்பூக்கள். மிகையை நம்பாத வாழ்க்கை எதார்த்தத்தை நம்பி படம் எடுத்தார். 80 களில் இந்த படத்தின் தாக்கத்தால் பல பேர் தங்களுடைய பிள்ளைகளுக்கு விஜயன் என்று பெயர் வைத்தார்கள்.

பூட்டாத பூட்டுக்கள்

பூட்டாத பூட்டுக்கள்

கலையில் கூட ஒழுக்கம் இருக்க வேண்டும். ஐட்டம் டான்ஸ்கள் இருக்கக் கூடாது. அவை மனித வாழ்க்கையின் எதார்த்தம் இல்லை என்று நினைப்பவர். இந்த படத்தில் வாழ்க்கையின் சில அருவருப்பான நடைமுறையில் ஒளிவு மறைவாக இருக்கின்ற சில விஷயங்களை எடுத்து வைத்து அதை ஹிந்தி பட நடிகர்களை வைத்து இயக்கினார். இந்த படத்தை தமிழ் நடிகர்களை வைத்து நடிக்கச் செய்தால் அது ஆபாசமானதாக மாறிவிடும் என்பதற்காகவும் மக்களிடம் கலாச்சாரம் சீர்கேட்டை பதித்துவிடக் கூடாது என்று நினைக்கக்கூடியவர்.

நடித்த படங்கள்

நடித்த படங்கள்

கிட்டதட்ட 45 படங்களுக்கும் மேலாக வேலை செய்திருக்கிறார். வழக்கமான இறைச்சல் மிகுந்த படங்களை ஒருபோதும் எடுக்கக் கூடாது என்று நினைப்பவர். 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக நடிகராக காமராசு என்னும் படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின் மிகப்பெரிய சிறந்த நடிப்பாக விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதையடுத்து கட்டமராயுடு (தெலுங்கு), நிமிர், மிஸ்டர்.சந்திரமௌலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் போன்ற படங்களில் நடித்தார்.

மறைவு

மறைவு

சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பாக சிறுநீரகக் கோளாறின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் அவருடைய மகனான இயக்குநர் ஜான் தன் தந்தைக்கான வேண்டிக் கொள்ளும்படி ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலமாகக் கேட்டுக் கொண்டு பதிவிட்டடிருந்தார். இந்நிலையில் அதிகாலை திடீரென சிகிச்சை பலனின்றி அந்த தீரா தாகம் கொண்ட கலைஞன் தன் வேட்கையைத் தணித்துக் கொண்டு காற்றோடு கலந்துவிட்டார்.

தமிழ்ச் சமூகத்துக்கும் தமிழ் திலையுலகத்துக்கும் அவர் செய்த பணிகளை நினைத்துப் பார்ப்பது தான் நாம் ஒரு சிறந்த கலைஞனுக்குக் கொடுக்கும் முறையான இதய அஞ்சலியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Director Mahendran

J. Mahendran (25 July 1939 — 2 April 2019), was an Indian filmmaker, screenwriter and actor in the Tamil film industry. Mahendran is regarded as one of the greatest film makers of Tamil cinema and has influenced several filmmakers of the generations followed.
Story first published: Tuesday, April 2, 2019, 16:28 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more