Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
இந்திய நடிகர், நடிகைகளின் சீக்ரெட் க்ரஷ் ,லவ்!
காதலிக்காத ஆட்களை கூட தேடி பிடித்துவிடலாம். ஆனால், க்ரஷ் இல்லாத ஆள் இருக்கவே முடியாது. குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது நமக்கு பிடித்தமான, நம் மனதுக்குள் இப்படியான நபர் வாழ்க்கை துணையாக வந்தால் எப்படி இருக்கும் என்று உருவகம் செய்த அப்படியான நபரை நேரில் கண்டால்... மனம் கொஞ்சம் துள்ள தான் செய்யும்.
இந்த துள்ளலை தவறு என்று கூற முடியாது. மனிதனாக பிறந்த எல்லாருக்கும் இந்த ஆசை துள்ளல் ஏற்படும். இந்த ஆசை வெளிப்படவில்லை என்றால் தான்... ஏதோ ஹார்மோன் உடலில் மக்கராகி இருக்கிறது என்று அர்த்தம்.

பொதுவாக நடிகர், நடிகை ஒன்றாக அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடித்தாலே அவர்களுக்குள் ஏதோ இருக்கிறது என்று கிசுகிசு வெளிவர ஆரம்பித்துவிடும். இதனாலேயே தங்கள் உறவு குறித்த விஷயங்களை முடிந்தவரை பெரும்பாலான பிரபலங்கள் இரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள்.
ஆயினும் சிலர் நேரம் கிடைக்கும் போது அல்லது சுவாரஸ்யமான பேட்டியின் பொது தங்களுக்கு ஏற்பட்ட அந்த க்ரஷ் மற்றும் காதல் பற்றி கூறிவிடுவார்கள். அப்படி இந்திய நடிகர், நடிகைகள்.. தங்கள் துறையை சேர்ந்த சகா பிரபலங்கள் மீது கொண்ட க்ரஷ் / காதல் குறித்து கூறிய தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

டைகர் ஷெராஃப்
பாகி 2 திரைப்படம் மூலமாக ஆக்ஷன் ஹீரோ என்பதை தாண்டி, ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஸ்டாராகவும் உருவெடுத்துள்ளார் டைகர் ஷெராஃப். ஒருமுறை காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தனக்கு நடிகை ஷ்ரதா கபூர் மீது சீக்ரெட் க்ரஷ் இருந்ததாக டைகர் கூறி இருந்தார்.

ஆலியா பட்
மிக இளம் வயதிலேயே தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ஆலியா பட். ஒரு பக்கம் காதல் விவராகங்களில் அடிபட்டாலும் தனக்கான மார்க்கெட் உருவாக்கிக் கொள்ள ஆலியா தவறவில்லை. நடிகர் ஷாஹித் கபூர் மீது சிறுவயதில் இருந்தே தனக்கு க்ரஷ் இருந்ததாகவும், அது நீண்ட காலம் நீடித்திருந்தது என்றும் ஆலியா கூறி இருந்தார்.

வருண் தவான்
பாலிவுட்டின் தற்போதைய ஹாட்ஸ்டார் மற்றும் பல இளம் பெண்களின் கனவு கண்ணனாக இருப்பவர் வருண் தவான். இவருக்கு டைகர் ஷெராஃபின் முன்னாள் காதலியான திஷா பதானி மீதி பெரும் காதல் இருக்கிறது என்று கூறி இருந்தார். இப்போதும் தனக்கு திஷா என்றால் அலாதி பிரியம் என்று கூறுகிறார் வருண்.

அர்ஜுன் கபூர்!
அர்ஜுன் கபூர் சல்மானின் தங்கையுடன் தன முதல் காதல் கணக்கை துவக்கியவர். இவர் தன்னுடன் வயதில் மூத்தவராக இருந்தாலும், கி & கா என்ற படத்தில் கரீனாவுடன் ஜோடி சேர்ந்து அசத்தலாக ரொமான்ஸ் செய்திருந்தார். ஒருமுறை பேட்டியில் கரீனா மீது தனக்கு க்ரஷ் இருந்தது, அவருடன் பணியாற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறியிருந்தார்.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர் ஒரு திறந்த புத்தகம். பல காதல் செய்து, தோல்வியில் முடிந்த போதிலும் அவரது காதல் பயணத்திற்கு ஒரு முற்று வரவில்லை. தற்சமயம் ஆலியா உடன் டேட்டிங் செய்து வரும் இவர், தனது பதின் வயதிலேயே தன் தோழியுடன் செக்ஸ் வாழ்க்கையாய் வைத்துக் கொண்டதாக கூறி இருந்தார். ஒருமுறை ரன்பீர் தனது இதயத்தை உடைத்த முதல் பெண் என்று மாதுரி தீக்ஷீதை கூறி இருந்தார்.

ஆயுஷ்மான் குரானா
டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனது திறமையால் வெற்றிக்கொடி நாட்டியவர் ஆயுஷ்மான். இவரது சமீபத்திய வெளியீடான அந்தாதுன் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தான் பள்ளி படித்து ப்ரீத்தி ஜிந்தா மீது க்ரஷ் இருந்ததாக ஆயுஷ்மான் கூறி இருந்தார்.

சோனம் கபூர்!
நடிப்பு என்பதை தாண்டி, சமூக சேவை, எழுதுவது என்று பன்முக தன்மை கொண்டவர் சோனம் கபூர். அணில் கபூரின் மகளான இவருக்கு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மீது சிறு வயதில் க்ரஷ் இருந்ததாகவும். தான் முதன் முதலில் காதலித்த ஆண் ஹ்ரித்திக் ரோஷன் தான் என்றும் கூறி இருந்தார்.

கஜோல் அகர்வால்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முதன்மை நாயகியாக வளம் வரும் கஜோல் இதுவரை மலையாளம் படத்தில் நேரடியாக நடித்ததில்லை. ஆனால், இவர் நடித்திருக்கும் பாரிஸ், பாரிஸ் திரைப்படம் மலையாளத்திலும் வெளியாகவிருக்கிறது. இதற்காக பிரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற போது, கேரளா தனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்று கூறிய கஜோல். மலையாள திரையுலக சூப்பர்ஸ்டார் மோகன்லால் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருந்தார்.

பிரபு தேவா!
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பேட்டியின் போது இந்தியன் மைக்கல் ஜேக்சன் பிரபு தேவா. தனக்கு கஜோல் அகர்வால் மீது குறுகிய கால க்ரஷ் இருந்ததாக செய்திகளில் தகவல் வெளியாகின.



Click it and Unblock the Notifications











