Just In
- 10 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 12 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 13 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 17 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலகமே அறிந்த அசோகரின் ஒன்பது புத்திசாலிகள் கொண்ட இரகசிய சமூகத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில் இப்பொழுதும் அதிகமாக பேசப்படும் தலைப்புகளில் ஒன்று சீக்ரட் சொசைட்டி என்று அழைக்கப்படும் இரகசிய சமூகங்கள். இல்லுமினாட்டி என்று பெயர் கொண்டு அழைக்கப்படும் இவர்கள் ஒரு குழுவாக இருந்து உலகின் பல சக்திவாய்ந்த பதிவுகளில் அமர்ந்து கொண்டு அவர்களின் கொள்கைகளையும், இலட்சியங்களையும் நிறைவேற்றுவார்கள்.
டான் ப்ரவுன் எழுதிய தி டாவின்சி கோட் புத்தகத்தை படித்தவர்களுக்கு இதனை பற்றி நிறையவே தெரிந்திருக்கும். ஆனால் இல்லுமினாட்டிகள் இருப்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அந்த அமைப்பு இருக்கிறது என்று நம்புபவர்கள் பலரும் இருக்கிறார்கள். இல்லுமினாட்டி இருக்கிறர்களா என்று உறுதியாக கூறமுடியாது ஆனால் நமது இந்திய மன்னர் ஒருவர் இரகசிய சமூகம் ஒன்றை நடத்தி வந்தார் என்று கண்டிப்பாக உறுதியாக கூறமுடியும். இந்த பதிவில் அந்த இரகசிய அமைப்பு பற்றி முழுமையாக பார்க்கலாம்.

அசோகரின் ஒன்பது இரகசிய ஆட்கள்
இந்தியாவிற்கென்று தனிப்பட்ட ரகசியங்களும், மர்மங்களும் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று பல நூற்றாண்டுகளாக மர்மம் நீடிக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அசோகர் நிறுவிய ஒன்பது இரகசிய ஆட்கள் என்னும் இரகசிய சமூகம் பற்றியதாகும். ஒன்பது பேர் அடங்கிய இந்த இரகசிய குழுவானது அரசியலை கையாளவும், புதிய சமூக நடைமுறைகளை தொடங்கும் வேலையையும் செய்தனர். தங்களின் தனிப்பட்ட இலக்குகளை நிறைவேற்றி கொள்வதற்காக அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

சந்தேகம்
இந்த செய்தியை பலரும் முதல் முறையாக கேள்விப்படலாம். உலக இரகசிய சமூகம் இருப்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது இந்தியாவில் இரகசிய சமூகம் இருந்ததா? அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரா? இது கட்டுக்கதையா அல்லது உண்மையில் நடந்ததா? என்னும் பல சந்தேகங்கள் உங்களுக்குள் எழலாம். அதற்கான பதில்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

ஒன்பது இரகசிய ஆட்களின் கதை
உண்மையில் ஒன்பது இரகசிய ஆட்களை கொண்ட இரகசிய சமூகமானது பேரரசர் அசோகரால் கி.மு 226 க்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது. பேரரசர் அசோகர் சந்திர குப்த மௌரியரின் பேரன் ஆவார், இவரும் மன்னரான பிறகு இவர் மொத்த இந்திய துணைக்கண்டத்தையும் ஒருங்கிணைத்து தன் குடைக்கு கீழ் கொண்டுவந்தார். மிகப்பெரிய பேரரசை நிறுவியதால் தன் மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டிய கடமை அவருக்கு இருந்தது.
MOST READ: இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி...!

கலிங்க போர்
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை அசோகர் ஆண்டாலும் கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் கலிங்கம் அவரின் ஆளுமையை ஏற்க மறுத்தது. இந்த மறுப்பு ஒரு மாபெரும் போருக்கு வழிவகுத்தது. நடைபெற்ற இந்த மாபெரும் போரில் அசோகரின் படை 1,00,000 க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்றார்கள், மேலும் 1,50,000 க்கும் அதிகமான கிராமவாசிகள் தங்கள் இடங்களை விட்டு சென்றனர்.

அசோகரின் மாற்றம்
அசோகர் போரை வென்றிருந்தாலும், தனது வெற்றி மீது கொண்ட வெறியால் ஏற்பட்ட பேரழிவை கண்டு அவர் அதிர்ச்சியுற்றார். அவரின் வெற்றிக்கு அவர் கொடுத்த விலை மிகவும் பெரியது என்பதை அவர் உணர்ந்தார். இந்த சம்பவம் அவர் மனதில் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியது, இனி போரில் ஈடுபடவே கூடாது என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டார்

அசோகரும், புத்தமதமும்
கலிங்க போருக்கு பின் அசோகர் புத்த மதத்திற்கு மாறியது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதன்பின் அவர் அமைதியை இந்தியா முழுவதும் மட்டுமின்றி இந்தோனேஷியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் பரப்ப தொடங்கினார். அவரின் முயற்சியால் புத்த மதம் திபெத், மங்கோலியா, நேபாள் மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் வளர தொடங்கியது.

மக்களின் அரசர் அசோகர்
அசோக சக்கரவர்த்தி சைவ உணவை விரும்புபவராக இருந்தார், பிற உயிர்களை வதைக்கும் எந்த உணவையும் அவர் சாப்பிடாமல் இருந்தார். ஆனால் இதனை மக்களை அனைவருக்கும் கட்டாயப்படுத்த முடியாது என்று அவர் நன்கு அறிந்தார். எனவே மக்கள் அவர்கள் விரும்புவதை உண்ணும் சுதந்திரம் வழங்கப்பட்டது, அதேசமயம் எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரமும் வழங்கப்பட்டது. ஆனால் மது அருந்துவது அவரின் ஆட்சியில் தடைசெய்யப்பட்டு இருந்தது.
MOST READ: விலைமகளிடம் இருந்து விவேகானந்தர் பயத்தை விரட்டும் வழியை எப்படி கற்றுக்கொண்டார் தெரியுமா?

இரகசிய சமூகத்தின் தேவை
அனைத்து மனிதர்களின் நலனையும் தனது குறிக்கோளாக கொண்ட அசோகர் அதனை நிறைவேற்ற தன் நம்பிக்கைக்கு உரியவர்களை வன்முறை, போர், துரோகம் போன்ற செயல்களில் ஈடுபடாமல் தன் நோக்கத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டார். அனைத்து தகல்வல்களையும் சேகரிப்பது, பாதுகாப்பது அதனை கற்றுக்கொள்வது போன்றவை ஒருத்தரால் மட்டுமே செய்யக்கூடிய காரியம் அல்ல. இந்த அனைத்து கடமைகளையும் செய்ய தனக்கு சிலர் தேவை என்பதை அசோகர் உணர்ந்திருந்தார்.

ஒன்பது புத்திசாலிகள்
தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக தனது இராஜ்ஜியத்தில் இருந்த ஒன்பது அதிபுத்திசாலிகளை தேர்ந்தெடுத்து வரவழைத்தார். அவர்களை கொண்டு தனது இலட்சியத்தை அடையலாம் என்று அவர் எண்ணினார். இந்த ஒன்பது புத்திசாலிகள் இணைந்த அமைப்பானது ஒன்பது இரகசிய ஆட்கள் என்னும் இரகசிய கூட்டமைப்பாக மாறியது.

இரகசிய அமைப்பின் இலக்குகள்
இந்த இரகசிய கூட்டமைப்பு சாதாரண கல்வியில் இருந்து மூளையை ஆராய்ச்சி செய்யும் முறை வரை அனைத்து கல்வி முறைகளையும் உருவாக்கியது. இவர்கள் உருவாக்கிய ஆரய்ச்சிகளும், வழிமுறைகளும் வெளிஉலகிற்கு தெரிந்தால் அவை அழிவிற்கு பயன்படுத்தபட வாய்ப்புள்ளது என்பதற்காக இந்த ஒன்பது நபர்கள் பற்றிய தகவல்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டது . ஆராய்ச்சிகளுக்கும்,புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

அவர்கள் எப்படி செய்தார்கள்
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த இலக்குகளை முடிக்க அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அவர்கள் அந்த புத்தகங்களில் மாற்றங்களையும், அவர்களின் புதிய கற்றல்களையும் அதில் சேர்க்கலாம். அந்த ஒன்பது நபர்களில் யாராவது இலக்கை முடிக்க முடியாமல் போனாலோ, அந்த குழுவை விட்டு விலக விரும்பினாலோ அந்த பொறுப்பு தேர்ந்தெடுக்கப்படும் புதிய நபரிடம் ஒப்படைக்கப்படும். அவர்களை பற்றிய இரகசியங்கள் இரகசியங்களாகவே இருக்கும். அவர்களும் தன்னை பற்றி வெளியே கூறக்கூடாது.
MOST READ: பெண்களின் இந்த செயல்கள் அவர்கள் குடும்பத்தில் நிரந்தர வறுமையை ஏற்படுத்துமாம் தெரியுமா?

எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள்?
ஒன்பது ரகசிய ஆட்களின் கூட்டமைப்பு 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. அவர்களுடைய புத்தகங்களின் அளவுகளும் அதிகரித்து கொண்டே சென்றது. 1923 ஆம் ஆண்டு டால்பட் மண்டி என்னும் ஆங்கில எழுத்தாளர் தி நைன் அன்நோவ்ன் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். இதில் அவர்களின் ஒன்பது புத்தகங்கள் பற்றிய பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இருந்தது. இந்த புத்தகம் மக்களிடையே பெரிய அங்கீகாரத்தை பெற்றது.