For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலிப்பவர்களை பார்க்க செல்லும் போது எந்த நிற உடையணிந்து செல்வது நல்லது தெரியுமா?

ஒவ்வொரு நிறமும் ஒரு குணத்தின் மற்றும் செயலின் வெளிப்பாடாகும். நீங்கள் அணியும் உடையின் நிறம் கூட உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

|

நமக்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரத்திற்கு நாம் அணியும் உடைகளும் ஒரு முக்கிய காரணமாகும். நாம் அணியும் உடையை பொறுத்தே அந்த இடத்தில் நமக்கான மரியாதை கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை ஆகும். உடை என்னும் போது அதன் நிறம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் எவ்வளவு விலைமதிப்பான உடையாக இருந்தாலும் பொருத்தமில்லாத நிறத்தில் அணிந்தால் அங்கு நாம் கோமாளியாகத்தான் மாறுவோம்.

How the Colors You Wear Affect Your Day

நாம் அணியும் உடையின் நிறம் என்பது நாம் நினைப்பதை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒவ்வொரு நிறமும் ஒரு குணத்தின் மற்றும் செயலின் வெளிப்பாடாகும். நீங்கள் அணியும் உடையின் நிறம் கூட உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் நீங்கள் அணியும் எந்தெந்த நிறம் எதனை வெளிப்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிறமும், அதிர்ஷ்டமும்

நிறமும், அதிர்ஷ்டமும்

வீடு கட்டும்போது ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் பரிந்துரைக்கப்படும். ஏனெனில் நாம் வசிக்கும் அறை நேர்மறை சக்திகளை ஈர்ப்பதாகவும், நமது மனநிலையை பாதிக்காததாகவும் இருக்க வேண்டும். அதற்கு அறையின் நிறம் மிகவும் முக்கியம். இதே நிலை நாம் அணியும் உடையின் நிறத்திற்கும் பொருந்தும். நீங்கள் அணியும் உடையின் நிறம் உங்கள் வாழ்க்கையில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

சிவப்பு

சிவப்பு

மற்றவர்களின் கவனத்தை பெற வேண்டுமா? அதற்கு நீங்கள் அணிய வேண்டியது சிவப்பு நிறத்தைதான். சிவப்பு நிறம் உங்களை வலிமையாக உணரச்செய்வதுடன் மற்றவர்களின் கவனத்தையும் உங்களுக்கு பெற்றுத்தரும். மேலும் இது உங்கள் காதல் உணர்வை அதிகரிக்கும், காதலர்களை பார்க்க செல்லும் போது சிவப்பு நிற உடை அணிந்து செல்லுங்கள். அதேசமயம் சிவப்பு நிறம் நம்முடைய சாப்பிடும் ஆசையை அதிகம் தூண்டும். எனவே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் எச்சரிக்கையுடன் சிவப்பு நிறத்தை அணியுங்கள்.

ஆரஞ்ச்

ஆரஞ்ச்

சிவப்பு நிறத்தை போலவே ஆரஞ்ச் நிறமும் ஆற்றல் மற்றும் கவன ஈர்ப்பின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் தீவிர சிவப்பு போல் அல்லாமல் ஆரஞ்ச் நிறம் மேலும் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் ஆரஞ்ச் நிறம் பொதுவாக அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது, ஒருவேளை உங்களுக்கு ஆரஞ்ச் பொருத்தமான நிறமாக இருந்தால் அதை அடிக்கடி அணியுங்கள். உங்களுக்கு நேர்மறை ஆற்றலை இது அதிகம் வழங்கும்.

மஞ்சள்

மஞ்சள்

உங்களின் நாள் மிகவும் மோசமானதாக இருந்தால் அதனை சரி செய்ய மஞ்சள் நிற ஆடையணிவது சிறந்த தேர்வாக இருக்கும். மஞ்சள் உத்வேகம் மற்றும் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையதாகும். எனவே ஏதவாது முக்கியமான தேர்விற்கோ அல்லது நேர்முக தேர்விற்கோ செல்லும் போது மஞ்சள் நிற ஆடையணிவது சிறந்தது.

MOST READ:உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?

பச்சை

பச்சை

பச்சை நிறம் எப்பொழுதும் அமைதி மற்றும் மென்மையின் அடையாளமாகும். அதுமட்டுமின்றி பசுமையை வெளிப்படுத்தும் நிறமாகும். பச்சை நிற உடையணிவது ஒருவரின் மனஅழுத்தத்தை குறைப்பதாக இருக்கும். எனவே நீங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பலவீனமாக உணர்ந்தால் வெளியே செல்லும்போது பச்சை நிற உடையணிந்து செல்லவும்.

நீலம்

நீலம்

நீல நிறம் அமைதி மற்றும் வலிமையின் அடையாளமாக இருக்கிறது. அதிக மனசோர்வுடன் இருக்கும்போது நீல நிற உடையணிவது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். மேலும் நீல நிற உடையணிவது உங்களின் கற்பனைத்திறனை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே வேலை தொடர்பாக வெளியே செல்லும்போது நீல நிற உடை அணிவது நல்ல பலனை அளிக்கும்.

வெள்ளை

வெள்ளை

வெள்ளை நிற உடையணிவது உங்கள் உடலை எப்பொழுதும் சூடாக வைத்திருக்க உதவும். மேலும் இது தூய்மை, எளிமை மற்றும் அமைதியை குறிப்பதாக இருக்கும். நீங்கள் அணிந்திருக்கும் மற்ற நிறத்தை அழகாக காட்ட வெள்ளை நிறத்தை அணியுங்கள். இது நீங்கள் அணியும் எந்த கலருடனும் பொருத்தமாக இருக்கும்.

கருப்பு

கருப்பு

பொதுவாக கருப்பு என்பது அமங்கலமான நிறமாக கருதப்படுகிறது. அதேசமயம் பலருக்கும் பிடித்த நிறமாகவும் கருப்புதான் இருக்கிறது. ஆனால் உண்மையில் கருப்பு ஆற்றலின் நிறமாகும். நீங்கள் பதவி உயர்வுக்கோ அல்லது நேர்முக தேர்வுக்கோ செல்வதாக இருந்தால் கருப்பு நிற உடையை தாராளமாக அணிந்து செல்லலாம். ஏனெனில் கருப்பு நிறம் பொறுப்பு, அதிகாரம், தேடல் போன்றவற்றின் அடையாளமாக இருக்கிறது. மேலும் கருப்பு நிற உடை உங்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும். மேலும் இது கம்பீரத்தின் அடையாளமாகவும் இருக்கும்.

MOST READ:உங்கள் வாழ்க்கை நரகமாக காரணம் நீங்கள் சாதாரணமென நினைத்து செய்யும் இந்த செயல்கள்தான்...!

பிங்க்

பிங்க்

பிங்க் நிறம் பெண்களுக்கு பிடித்த நிறம் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் இது காதல் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிறமாகவும் இருக்கிறது. சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் போது இந்த நிற உடையை அணிய வேண்டாம் , ஏனெனில் இது அமைதியை ஏற்படுத்தும் நிறமாக இருக்கிறது. காதலர்களுடன் வெளியே செல்லும் போது இந்த நிற உடையை அணியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: dress colour fashion
English summary

How the Colors You Wear Affect Your Day

The colors we decide to enclose ourselves affect us more than we think.
Desktop Bottom Promotion