For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன் சேலையை கிழித்து அதிகாரி முகத்தில் எறிந்த வீரத்தமிழச்சி - மறந்த வரலாறு!

By Anba
|

இன்று 16 வயது குழந்தைகளுக்கு என்ன தெரியும்? இன்டர்நெட், டெக்னாலஜி, விரல்நுனியில் உலக அறிவு,மாடர்ன் வாழ்க்கை, சிலருக்கு தங்கள் பாரம்பரியமும், கலாச்சாரமும் தெரியும். இதெல்லாம் தவறென்றோ, அவர்கள் மீது பழி சுமத்தவோ முடியாது.

காரணம் அவர்கள் இப்படி வளர, உருவாக நாமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறோம். ஆனால், சென்ற நூற்றாண்டில் இந்தியா அடிமைப்பட்டு கிடந்த போது 16 வயது நிரம்பிய ஒரு இளம் பெண் தனது இன்னுயிரை மக்கள் நல போராட்டத்திற்காக தியாகம் செய்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா...

thillaiyadi valliammai

உங்களில் சிலருக்கு அந்த 16 வயது இளம் பெண் தில்லையாடி வள்ளியம்மை பற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு... இந்த வீர தமிழச்சி பற்றி பலரும் அறியாத உண்மைகளை இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தில்லையாடி!

தில்லையாடி!

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறை அடுத்து இருக்கும் தில்லையாடி என்ற ஊரில் வசித்து வந்த முனுசாமி மற்றும் மங்களத்தம்மாள் தம்பதியினரின் மகள் தான் இந்த தில்லையாடி வள்ளியம்மை.

புலம்பெயர்ந்தனர்!

புலம்பெயர்ந்தனர்!

ஆங்கிலேயே ஆட்சியின் போது தமிழகத்தில் நெசவு தொழில் செய்து வந்த தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் குடும்பம் சிறிய வணிக தொழில் செய்வதற்காக தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

பிறப்பு!

பிறப்பு!

புலம்பெயர்ந்து சென்ற இடத்தில் ஜோகன்ஸ்பர்க் நகரில் முனுசாமி - மங்களத்தம்மாள் ஜோடிக்கு மகளாக பிறந்தார் தில்லையாடி வள்ளியம்மை. அங்கே இருந்த காலனி பெண்கள் பள்ளியில் பயின்று வந்தார் வள்ளியம்மை.

உன்னிப்பாக…

உன்னிப்பாக…

Image Source

தனது குழந்தை பருவத்தில் இருந்தே தன்னை சுற்றி நடந்து வரும் சம்பவங்களை, நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்க துவங்கினார் வள்ளியம்மை. ஆங்கிலேய காலனி ஆட்சியில் பல கொடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. வரி சுமை, தேவாலயத்தில் நடக்கும் திருமணங்கள் மட்டும் தான் சட்டப்படி செல்லும் என்று பல கொடுமைகளை மக்கள் மீது திணித்தனர்.

மோகன்தாஸ் கரம்சந் காந்தி!

மோகன்தாஸ் கரம்சந் காந்தி!

அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த மோகன்தாஸ் கரமச்சந் காந்தி ஆங்கிலேய காலனி அரசின் கடுமையான சட்டங்களை எதிர்த்து போராடி வந்தார். காந்தியடிகளின் போராட்டங்களின் பால் ஈர்ப்பு பெற்று தானும் போராட்ட களத்தில் இறங்கினார் வள்ளியம்மை.

போராட்டம்!

போராட்டம்!

போராட்ட களத்தில் தில்லையாடி வள்ளியம்மை துணிச்சலுடன் முன்னின்றனர். இதற்கு சில உதாரணமாக கூறலாம், ஒருமுறை போராட்டத்தின் போது, மக்களை விரட்ட ஆங்கிலேய காலனி அரசின் அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்துவேன் என்று மிரட்டினார்.. அப்போது முன்னே வந்து முதலில் என்னை சுடு பார்க்கலாம் என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றார் வள்ளியம்மை.

சேலை கிழித்து…

சேலை கிழித்து…

Image Source

மற்றொரு முறை போராட்ட தளத்தில் போராடி வந்த போது, ஆங்கிலேயே அதிகாரி ஒருவர், உங்களுக்கென்று சொந்தமாக ஒரு கொடி கூட இல்லை.. வெறும் கூலிகளுக்கு இத்தனை வெறியா.." என்று கூற, ஒருகனமும் தயங்காமல், யோசிக்காமல் தான் உடுத்தி இருந்த சேலையை கிழித்து, அந்த அதிகாரி முகத்தில் எறிந்து, இதோ! இதுதான் எங்கள் கொடி என்று முழங்கினார் வள்ளியம்மை.

சிறை!

சிறை!

ஆங்கிலேய அரசின் கொடுமையான சட்டங்களை எதிர்த்து போராடியதன் காரணமாக கைதானார் தில்லையாடி வள்ளியம்மை. மூன்று மாத சிறைத்தண்டனை, அபராதம் கட்டி வெளிவர வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அது தனது சத்தியாகிரக போராட்டத்திற்கு இழுக்கு என்று மறுப்பு தெரிவித்தார். அரசே அவரை விடுதலை செய்ய முன்வந்த போதிலும், தன் கோரிக்கைகள் நிறைவேறாமல் வெளிவர மாட்டேன் என்று திட்டவட்டமாக இருந்தார் வள்ளியம்மை.

உடல்நல குறைபாடு!

உடல்நல குறைபாடு!

தில்லையாடி வள்ளியம்மை தனது 13 வயதில் இருந்தே போராட்ட களத்தை கண்டவர். 16 வயதில் சிறை சென்றார். தனது இளம் வயது மற்றும் சிறையில் இவர் அனுபவித்த கொடுமைகளை மற்றும் சுகாதாரமின்மை போன்ற காரணத்தால் உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டது. இதனால் மிகவும் வலுவிழந்த நிலைக்கு ஆளானார் வள்ளியம்மை.

நிறைவேற்றினர்!

நிறைவேற்றினர்!

இவரது போராட்ட குணத்திற்கு அடையாளமாக வள்ளியம்மையின் கோரிக்கைகளை நிறைவேற்றியது அரசு. அதன் பிறகே விடுதலையாகி வெளியே வந்தார் தில்லையாடி வள்ளியம்மை. ஆனால், வெளியான பத்தே நாட்களில் தனது பிறந்த நாளான பிப்ரவரி 22ம் நாள் உடல்நலம் மோசமான காரணத்தால் மரணம் அடைந்தார் வள்ளியம்மை.

புனித மகள்!

புனித மகள்!

Image Source

தில்லையாடி வள்ளியம்மையின் மரணத்தை அறிந்த காந்தி மிகவும் வருத்தம் அடைந்தார். மற்றும் வள்ளியம்மை இந்தியாவின் புனித மகள் என்றும் போற்றினார். பிறகு இந்தியா வந்த போது காந்தி தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊருக்கு சென்ற போது, அந்த ஊர் மண்ணை எடுத்து கண்ணில் ஒத்திக் கொண்டார்.

தில்லையாடி வள்ளியம்மையின் போராட்ட குணம் மற்றும் தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் தில்லையாடி ஊரில் அவருக்கான நினைவு மண்டபத்தை உருவாக்கியது தமிழக அரசு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

facts and biography of indian freedom fighter thillaiyadi valliammai

Here we have listed out some interesting and lesser known facts about Indian Freedom fighter Thillaiyadi Valliammai. Let’s Take a look on it.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more