For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

16 வருஷமா ஏ.ஆர்.ரகுமானோடு சேர்ந்து தன் பிறந்தநாளை கொண்டாடும் மற்றொரு நபர் யார் தெரியுமா?

By Mahi Bala
|

ஏ.ஆர்.ரகுமான் பற்றி உங்களுக்கு இதுவரையிலும் தெரிந்திராத அதேசமயம் அவருடைய வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் பத்தி நாம தெரிஞ்சிருக்கிறதுக்கு முன்னாடி ஜனவரி 6 ஆம் தேதி தன்னோட 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடின ரகுமானுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம். ஹேப்பி பர்த்டே இசைப்புயல்.

A.R.Rahman

ஏ.ஆர்.ரகுமான் என்ற பெயரைக் கேட்டாலே இன்றைய இளைஞர்களின் மனமும் அவரது இசையைப் போல துள்ளிக் குதிக்காமல் இருக்காது. இசையின் மூலம் உலகத்தையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர். இவர் தன்னுடைய 52 ஆவது பிறந்தநாளை ஜனவரி 6, ஞாயிற்றுக் கிழமை கொண்டாடி முடித்திருக்கிறார். அவருடைய இசைப்பயணம் ரோஜா என்னும் திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. இந்த திரைப்பயணத்தையும் தாண்டி அவருடைய வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெட்ராஸ்க்காரன்

மெட்ராஸ்க்காரன்

இவர் தன்னை மெட்ராஸ்க்காரன் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் பெருமைப்படுபவர். இவர் பிறந்தது மெட்ராஸில் தான். இவருடைய இயற்பெயர் ஏ.எஸ்.திலீப் குமார் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

MOST READ: புதன் கிரகத்தோட கெட்ட பார்வையிலிருந்து தப்பிக்கணுமா? உங்க ஜாதகப்படி என்ன பரிகாரம் செய்யணும்?

மத மாற்றம்

மத மாற்றம்

ஒரு இந்துவாக பிறந்த இவர் தன்னுடைய 23 ஆம் வயதில் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறுகிறார். இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பின்னர் இவருடைய பெயர் அல்லாஹ் ரக்கா ரகுமான் என்று மாற்றம் செய்யப்பட்டது. இவருடைய தந்தையின் பெயர் அருணாச்சலம் சேகர் என்பதாகும். இவரும் தமிழ் மற்றும் மலையாளம் சினிமாக்களில் ஸ்கோர் கண்டக்டராக இருந்தவர்.

ஒரே சமயத்தில் 4 கீபோர்ட்

ஒரே சமயத்தில் 4 கீபோர்ட்

ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் சிறுவர்களுக்காக ஒண்டர் பலூன் என்னும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஒரே சமயத்தில் நான்கு கீபோர்ட்டுகளை வாசித்து, அதன்மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன் தான் இந்த ரகுமான். இது அவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக நடந்த சம்பவம்.

ஆசை

ஆசை

ரகுமானுக்கு இசை மீது ஆர்வம் இருந்தாலும் அவருடைய ஆசையோ தான் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான். அவருடைய தந்தையின் மறைவு அவருடைய கனவை அப்படியே திருப்பிப் போட்டு நமக்கு இப்படியொரு இசைப்புயலை தந்தது.

வெளிநாட்டு தெருக்கள்

வெளிநாட்டு தெருக்கள்

மர்க்ஹாம், ஆண்ட்டரியோ, கனடா போன்ற நாடுகளில் உள்ள சில தெருக்களுக்கு ஏ.ஆர். ரகுமானின் பெயரைச் சூட்டி அவருக்கு சிறப்பு செய்திருக்கிறது. இது அவருக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கின்ற விஷயம்.

லிம்கா சாதனை

லிம்கா சாதனை

2007 ஆம் ஆண்டு இசைக்கு தன்னுடைய பங்களிப்பைத் தந்த இந்தியர் என்ற முறையில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது ரகுமானின் பெயர்.

ஆஸ்கர் பாடல்

ஆஸ்கர் பாடல்

ஜெய் கோ பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனா்ல அந்த பாடலை முதலில் சல்மான் கானுக்காகவே ரகுமான் கம்போஸ் செய்தார். அந்த பாடல் அந்த படத்தில் இடம் பெறாததால் ஹோலிவுட்டுக்காக இன்னும் கொஞசம் மெருகேற்றினார். அவருடைய உழைப்பு வீணாகவில்லை. அது அவருடைய புகழை உலகறியச் செய்தது.

முதல் கீபோர்ட்

முதல் கீபோர்ட்

ரகுமான் பயன்படுத்தாத அட்வான்ஸ்டு கீபோர்டுகளே உலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தன்னுடைய இளம் வயதில் ஆரம்ப காலத்தில் தான் வாசித்த கீபோர்டை இன்னும் தன்னுடைய சென்னை ஸ்டுடியோவில் பார்வைக்காக வைத்திருக்கிறார்.

MOST READ: புஇந்த மூனு ராசிக்காரங்களும் இந்த பரிகாரத்தை செஞ்சே ஆகணுமாம்... இல்லாட்டி நஷ்டம்தான்

விருதுகள்

விருதுகள்

இவர் வாங்கிய ஆஸ்கார் விருது பற்றி நமக்குத் தெரிந்ததே. மேலும் இரண்டு கிராமி விருதுகள், இரண்டு அகாடமி விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது என வாங்கிக் குவித்திருக்கிறார். அதைத்தாண்டி, 6 தேசிய விருதுகள், 14 ஃபிலிம் பேர் அவார்டு, 14 தென்னிந்திய .பிலிம்பேர் அவார்டு ஆகியவற்றை கடந்த 2014 க்கு முன்னதாகவே வாங்கிக் குவித்தவர். அதாவது சர்வதேச விருதுகள் விழாவில் 138 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டு அதில் 117 விருதுகளை தன் வசமாக்கியவர் ரகுமான் ஒருவரே.

ஏர்டெல் தீம் மியூசிக்

ஏர்டெல் தீம் மியூசிக்

ஏர்டெல் தீம் மியூசிக்கை ரசிக்காதவர் யாராவது இருக்க முடியுமா?அதுவும் நம்முடைய இசைப்புயலினக் கைவண்ணம் தான். 200 மில்லியனுக்கும் மேலாக டவுன்லோடு செய்யப்பட்ட விளம்பர மியூசிக் தீம் என்றால் அது ரகுமானின் ஏர்டெல் இசை தான்.

டைம் மேகசின்

டைம் மேகசின்

டைம் மேகசின் கடந்த 2009 ஆம் வோல்ர்டு மோஸ்ட் இன்ஃப்லூயன்ஸ்டு பர்சன் என்னும் லிஸ்டில் ரகுமானின் பெயரைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இது எல்லாவற்றையும் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயம் பற்றி உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்.

ரகுமானுடன் பிறந்த நாள்

ரகுமானுடன் பிறந்த நாள்

கடந்த 16 ஆண்டுகளாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பிற்நத நாளான ஜனவரி 6 ஆம் தேதி அவருடன் சேர்ந்து தன்னுடைய பிறந்த நாளையும் கொண்டாடி வருகிற ஒரு ஸ்பெஷல் ஆள் இருக்கிறார். அது யாருப்பா என்று கேட்கிறீர்களா? அது வேறு யாரும் இல்லை. ரகுமானின் மகன் அமீன் தான். ஆம். அமீனின் பிறந்த நாளும் ரகுமானின் பிறந்த நாளும் ஒரே நாள் தான். இந்த வருடம் ரகுமான் தன்னுடைய 52 ஆவது பிறந்த நாளையும் அமீன் 16 வது நிறைவு பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள்.

தந்தைக்கு வாழ்த்து

தந்தைக்கு வாழ்த்து

Image Courtesy

தன் தந்தையின் பிறந்த நாளுக்காக அமீன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால், அன்புள்ள அப்பா, எங்கள் எல்லோருக்கும் சிறந்த நண்பராகவும் நல்ல ஆசிரியராகவும் சிறந்த முன்னோடியாகவும் நீங்கள் திகழ்கிறீர்கள். உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவரை தன்னுடைய ஓகே கண்மணி படத்தில் ரகுமான் பாட வைத்திருக்கிறார் என்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

டாக்டர் பட்டம்

டாக்டர் பட்டம்

52 வயதான இசையமைப்பாளருக்கு உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களான மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம், பெர்க்கிலி காலேஜ் ஆஃப் மியூசிக், மியாமி பல்கலைக்கழகம் மற்றும் அலிகார்ஹ் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பு செய்திருக்கிறது.

MOST READ: புஉங்க ராசிக்கு இன்னைக்கு என்ன கலர் டிரஸ் போட்டா அதிர்ஷ்டம்னு தெரியுமா? மறக்காம போடுங்க...

ரோஜா முதல் ஆஸ்கர்

ரோஜா முதல் ஆஸ்கர்

தன்னுடைய முதல் திரைப்படமான ரோஜா முதல் ஆஸ்கார் வாங்கிய பின்பும் தலைக்கணம் ஏதும் இன்றி தமிழ் சினிமாவுக்கு தனக்கே உரிய பாணியில் இசை மூலம் அசத்திக் கொண்டிருக்கும் ரகுமானுக்கு மீண்டும் ஒரு முறை ஹேப்பி பர்த்டே சொல்லலாம்... ஹேப்பி பர்த்டே ரகுமான் அண்ட் அமீன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

emotional birthday wish to A.R.Rahman

here we are talking about the intresting things about rahman life and his son's emotional wish
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more