For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

77 ஆண்டுகள் கழிந்து கிடைத்த காதல் கடிதம், 99 வயது மூதாட்டியின் காதல் கதை!

|
99 Years Old Granny Receives Love Letter From Fiance Who is Missing From Last 77 Years

உலகப்போர் காரணத்தால், எண்ணிலடங்கா மரணங்கள், உறவுகள், வீடு, உடைமைகள் இழந்து உயிர் பிழைக்க அகதிகளாய் நாடுவிட்டு நாடு பயணித்து பெருந்துயர் அடைந்தவர்கள் ஏராளம்.

எத்தனையோ வீரர்கள் தங்கள் தாய் நாட்டினை காக்க தங்கள் உயிரை இழந்துள்ளனர். இரு நாடுகளின் பகை காரணத்தால் ஏதுமறியாது தங்கள் உயிரிழந்த, உறவிழந்தவர்கள் எண்ணிக்கை இதை காட்டிலும் பன்மடங்கு அதிகம்.

பெரும் வரலாற்றுப் பக்கங்கள், படிப்பினை, பகை, துரோகம், அணு ஆயுதத்தின் தாக்கம் என நினைத்துப் பார்க்கும் போதெல்லாம், வரலாற்றுப் பக்கங்களை புரட்டும் போதெல்லாம் அச்சம் தொற்றிக் கொள்ளும் படியான நிகழ்வுகளை உலகப்போர் அழியாத் தடங்களாக விட்டு சென்றுள்ளது.

அப்படி உலகப் போர் காரணத்தால் தான் இழந்த சொந்தத்தின் கையால் எழுதப்பட்ட காதல் கடிதத்தை 77 ஆண்டுகள் கழித்து பெற்றுள்ளார் 99 வயது மூதாட்டி ஒருவர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வருங்கால வாழ்க்கை துணை...

வருங்கால வாழ்க்கை துணை...

அது இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த காலக்கட்டம். அப்போது தான் காணாமல் போயிருந்தார் இந்த 99 வயது மூத்தாட்டியின், அன்றைய வருங்கால வாழ்க்கை துணை. அவர் கைப்பட தன் வருங்கால மனைவிக்கு எழுதிய ஒரு காதல் கடிதம் 77 ஆண்டுகள் கழித்து கிடைத்ததைப் பார்த்து ஆனந்த கண்ணீர் மல்க உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறார் 99 வயது மூதாட்டி.

அட்லாண்டிக் கடல்!

அட்லாண்டிக் கடல்!

இந்த அற்புதமான காதல் கடிதம் அட்லாண்டிக் கடலில் 1941ல் மூழ்கிய கார்கோ கப்பலில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். மீட்டெடுத்த அந்த வரலாற்று சிறப்புமிக்க காதல் கடிதம் இப்போது 99 வயதில் வாழ்ந்து வரும் பில்லிஸ் பாண்டிங் எனும் மூதாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பில் வாக்கர்!

பில் வாக்கர்!

கடைசியாக இவர்கள் தகவல் மாறிக் கொண்டது இரண்டாம் உலகப் போரின் போது தான். அப்போது பில்லிஸ் பாண்டிங், தனது வருங்கால துணையான பில் வாக்கருக்கு, நமது திருமண நிச்சயத்திற்கு நான் ஒப்புக் கொள்கிறேன் என்ற தகவலை அனுப்பி இருக்கிறார்.

மனமாற்றம்!

மனமாற்றம்!

ஆனால், அந்த கடிதத்திற்கு பில்வாக்கரிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை. எனவே, இந்த 99 வயது மூதாட்டி அன்று, பில் மனம் மாறிவிட்டார் போல, அவருக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்று கருதி, சில காலம் வரை காத்திருந்து பிறகு தானும் மனமாற்றம் செய்துக் கொண்டார்.

ஆனந்த கண்ணீர்!

ஆனந்த கண்ணீர்!

உண்மையில் இரண்டாம் உலகப்போரின் போது நடந்தது வேறு ஒன்று. பில்லிஸ் பாண்டிங்கிடம் இருந்து கடிதம் பெற்றப்பட்டவுடனே, பில் வாக்கர் ஆனந்த கண்ணீர் மல்க, பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார். தன் திருமண பிரபோசலை பில்லிஸ் ஏற்றுக் கொண்டதை அறிந்து சந்தோஷத்தின் உச்சம் தொட்டுள்ளார்.

அருகில்...

அருகில்...

நான் இந்த கடிதத்தை திறந்து படிக்கும் போது, நீ என்னருகில் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று தான் பில்லிஸ் பாண்டிங்கிற்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பில் வாக்கர். இப்போது நான் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை நீ மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும்.. என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்திருக்கிறார் பில் வாக்கர்.

பிழைத்திருப்பாரா?

பிழைத்திருப்பாரா?

இன்று வரையிலும் பில்லிஸ் பாண்டிங்கிற்கு பில் வாக்கர் இரண்டாம் உலகப்போரின் போது உயிர் பிழைத்தாரா? இறந்துவிட்டாரா என்பது குறித்து எந்த தகவலும் தெரியாது. ஆனால், அவர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதினேன். ஏனென்றால், அவர் உயிருடன் இருந்திருந்தால் என்னிடம் வந்து சேர்ந்திருப்பார். அவரிடம் விலாசம் முதல் என்னை குறித்த அனைத்து தகவல்களும் இருந்தன என்று கூறி இருக்கிறார் பில்லிஸ் பாண்டிங்.

திருமணம்!

திருமணம்!

பில் வாக்கரிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை என்ற காரணத்தாலும், பில் வாக்கர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று அறிந்திருந்ததாலும் பில்லிஸ் வேறொரு நபரை பின்னர் திருமணம் செய்துக் கொண்டார். பில்லிஸ் பாண்டிங்கிருக்கு நான்கு பிள்ளைகள்.

காதல்!

காதல்!

ஒருவேளை தன் வாழ்க்கை பில் வாக்கருடன் இணைந்திருந்தால், அது முற்றிலும் வேறு விதமாக அமைந்திருக்கும். அந்த வாழ்க்கை வித்தியாசமானதாக இருந்திருக்கும் என்று கூறி இருக்கிறார் பில்லிஸ். பில் வாக்கர் என்னை மிகவும் நேசித்தார். நாங்கள் திருமணம் செய்திருக்க வேண்டும். நான் அவரை மிகவும் மிஸ் செய்தேன் என்று மேலும் தெரிவித்திருந்தார் பில்லிஸ்.

ஆராய்ச்சியாளர்கள்!

ஆராய்ச்சியாளர்கள்!

கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சில்வர் குறித்த ஆய்வொன்றின் போது தான், நூற்றுக்கணக்கான அனுப்பப்படாத கடிதங்களை சேகரித்துள்ளனர் அவற்றை எல்லாம் முடிந்த வரை அதற்கு உரிமையானவர்களிடம் சேர்த்தது, போக மீத கடிதங்கள் மியூசியத்தில் வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

காப்பாளர்!

காப்பாளர்!

கடல் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்ட போது கிடைத்த இந்த கடிதங்களை கண்ட மியூசியத்தின் காப்பாளர் ஷவுன் கிங்ஸ்லே கூறுகையில், கப்பல் விபத்து ஏற்படும் போது கடிதங்கள் எழுதப்படுவது வழக்கம். தங்கள் உறவினர்கள், நேசத்திற்கு உரியவர்களுக்கு தங்கள் கடைசி வார்த்தைகளை எழுத அவர்கள் முற்படுவார்கள். ஆனால், இந்த ஆய்வின் போது கிடைத்திருக்கும் இந்த நூற்றுக்கணக்கான கடிதங்கள் தான் இதுவரை கிடைத்ததில் மிகவும் அதிகமானவை.

கடினம்!

கடினம்!

இவற்றை பாதுகாப்பது மிகவும் கடினம். அங்கே வெளிச்சம் இருக்காது, ஆக்சிஜன் இருக்காது, முற்றிலும் இருட்டாக இருக்கும். தன்கள் இறந்து விடுவோம் என்ற நிலை ஏற்படும் போது, தங்கள் கடிதங்களை நீர் புகாத வண்ணம் ஒரு டின்னில் அடைத்து அதை சீல் செய்து வைத்துவிடுவார்கள்.

பிரிட்டிஷ் இந்தியா!

பிரிட்டிஷ் இந்தியா!

சாதாரணமாக பார்க்கும் போது, அந்த கடிதங்களை பார்த்து படிப்பது மிகவும் கடினம். சோதனை கூடத்தில் வைத்து பார்க்கும் போது தான் அவற்றை தெளிவாக படிக்க இயலும். 1940களில் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து மட்டுமே 700க்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதப்பட்டன என்றும் இவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடைசி மூச்சு வரை...

கடைசி மூச்சு வரை...

எதுவாக இருந்தாலும், தான் விரும்பிய நபர் தனக்கு எழுதிய கடைசி கடிதத்தை, அதுவும் காதல் கடிதத்தை ஒருவர் 77 ஆண்டுகள் கழித்து பெறுவது என்பது மிகவும் அற்புதமான நிகழ்வு. அதுவும், கடலடியில் இத்தனை ஆண்டுகள் புதைந்திருந்து கிடப்பது அரிதிலும், அரிது. ஆனால், இப்போது பில்லிஸ் அறிந்திருப்பார்... தன்னை நேசித்த... தான் நேசித்த பில் வாக்கர் கடைசி மூச்சு வரையிலும் தன் மீதான காதலில் இருந்து துளியும் மனம் மாறவில்லை என்பதை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

99 Years Old Granny Receives Love Letter From Fiance Who is Missing From Last 77 Years

99 YO Granny Received Love Letter From Her Fiance, Who was missed in world war 2. And The letter was written 77 years ago.., Incredible Love Story.
Story first published: Wednesday, January 2, 2019, 15:45 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more