Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
கல்யாணம் நிகழ்வில் மணப்பெண் தோழிக்கு நேர்ந்த சோகம்!
48 மணி நேரம் தொடர்ந்து மணப்பெண் தோழியாக நின்றுக் கொண்டே இருந்ததால், தனது கால்களை இழந்த சீன பெண். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சீனாவில் மணப்பெண் தோழிகள் எனப்படும் Bridesmaids என்பது தங்கள் கௌரவத்தின் வெளிப்பாடாகவே காணப்படுகிறது. திருமண நிகழ்வு துவங்குவதில் இருந்து, முடியும் வரை இந்த மணப்பெண் தோழிகளுக்கு வேலைகள் நிறையவே இருக்கிறது. விருந்தினர்களை வரவேற்ப்பதில் இருந்து மணப்பெண்ணுடன் புகைப்படத்தில் போஸ் கொடுப்பது, அவரை பாதுகாத்து அழைத்து செல்வது என திருமண விழாவின் ஒரு ஈர்ப்பு பொருளாகவே மணப்பெண் தோழிகளை சீனர்கள் கருதுகிறார்கள்.
சீனாவின் பல திருமண விழாக்களில் தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில் மணப்பெண் தோழிகள் காணப்படுகிறார்கள். இதற்காக வாடகைக்கு எல்லாம் மணப்பெண் தோழிகளை அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். சமூகத்தில் தங்களது பகட்டு, ஆடம்பரத்தை வெளிப்படுத்த சமீப காலமாக இது அதிகரித்து வருகிறது.

கொடுமை!
இதில் கொடுமை என்னவெனில், பணம் கொடுத்து அழகிய இளம் பெண்களை இவர்கள் மணப்பெண் தோழிகளாக அழைத்து வருகிறார்கள். இவர்களது அதிக கவனம் கல்லூரி பயிலும் பெண்கள் மீது தான் இருக்கிறது. அவர்களது பண தேவையை இவர்கள் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மன ரீதியாக, உடல் ரீதியாக, சொல் ரீதியாக கொடுமைப் படுத்துகிறார்கள்.

பாலியல் தொழிலாளிகள்!
சில சீன திருமண விழாக்களில் வரும் விருந்தினர்களுக்கு இரையாக மணப்பெண் தோழிகள் அனுப்பிவைக்க படுகிறார்கள். இதற்காக மணப்பெண் தோழியாக திருமண விழாவுக்கு விலை மாதுக்களை அழைத்து வரும் கொடுமைகளும் சீனாவில் அரங்கேறி வருகிறது. ஏனெனில், சில திருமண விழாக்களில் விளையாட்டு என்ற பெயரில் மணப்பெண் தோழிகளை உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள்.

24 வயது இளம்பெண்!
24 வயது மிக்க மின் வென்குயிங் எனும் பெண், இப்படி தான் மணப்பெண் தோழியாக சென்றார். இவர் சீனாவின் சிசுவான் எனும் பகுதியை சேர்ந்தவர். மணப்பெண் தோழியாக தொடர்ந்து 48 மணி நேரம் நின்றுக் கொண்டே வேலை செய்த காரணத்தால் ஏற்பட்ட இன்பெக்ஷன் காரணமாக இவர் இப்போது தனது காலை இழந்துள்ளார்.

இரண்டாம் நாள்!
முதல் நாள் முழுக்க நின்று கொண்டே வேலை செய்து வந்த மின் வென்குயிங், இரண்டாவது நாள் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டார். ஆனால், அதை அவர் வெறும் சோர்வாக மட்டும் கருதி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், திருமண விழா முடிந்து வீடு திரும்பிய பிறகு தான் அவர் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

உடல்நலக் கோளாறு!
வீடு திரும்பிய மின் வென்குயிங்கை கண்ட உறவினர்கள் அவர் உடல்நலம் குன்றி காணப்படுகிறார் என்று கருதியுள்ளனர். அவரும் படுக்கையில் இருந்து எழாமல் படுத்தப்படுக்கையாக இருந்துள்ளார். அருகில் இருந்து மருத்துவரை அணுகிய போது அவர் சளியாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறி சில மருந்துகள் அளித்துள்ளார்.

மறுநாள்...
ஆனால், மின் வென்குயிங்கின் உடல்நலத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை, மேலும் அவர் தொடர்ந்து வாந்தி எடுக்க துவங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை அருகில் இருந்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கே குடல் தொற்று, பல பாகங்கள் இயக்கம் குறைபாடு என்று ஒன்பது வெவ்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதை கூறியுள்ளனர்.
மருத்துவர்கள் கூறுவதை வைத்து நிஜமாகவே தங்கள் மகளுக்கு என்ன ஏற்பட்டுள்ளது என்பதை உறவினர்களால் அறிந்துக் கொள்ள முடியவில்லை.

வேறு மருத்துவமனை...
மின் வென்குயிங்கை அருகில் இருந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் உறவினர்கள். அங்கே தான் அவரது வலது காலில் அபாயமான இன்பெக்ஷன் ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அது மின் வென்குயிங்கின் உயிருக்கே ஆபத்து என்று அறிந்த மருத்துவர்கள், உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்து கணுக்கால் பகுதியை நீக்கினர்.

சிகிச்சை!
ஏப்ரல் முதல் வார இறுதியில் நடந்ததாக அறியப்படுகிறது இந்த செய்து. இது சீனாவின் ஈடி டுடே என்ற செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இப்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து மின் வென்குயிங் சீரான நலத்துடன் இருக்கிறார் என்று தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.
மணப்பெண் தோழியாக சென்ற பெண்ணின் வாழ்க்கை 48 மணிநேரம் ஓயாமல் நின்றுக் கொண்டே வேலை செய்த காரணத்தால் தனது ஒரு காலை இழக்கும் நிலை ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











