For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுல என்ன தப்பு இருக்கு... இந்திய பெண்களின் போல்ட் ஸ்டேட்மென்ட்!

அனுஷ்கா கேல்கர் எனும் பெண் தங்கள் உடல் சார்ந்து இந்திய பெண்கள் எப்படியான உணர்வுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புகைப்படங்களாக எடுத்து தனது சமூக தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

|

இந்தியா என்று மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் பெண்கள் தங்கள் சொந்த உடல் சருமம் சார்ந்த அவமானம் கொண்டிருக்கிறார்கள். வெள்ளையாக இருந்தால் தான் அழகு, கச்சிதமான உடல் வடிவம் கொண்டிருக்க வேண்டும், தோலில் சுருக்கங்கள், கருமை, கரும்புள்ளி, உடல் பருமன் ஏறி, குறைந்தால் ஏற்படும் குறிகள் இவை எல்லாம் இருந்தால் அசிங்கம் என்பது நமது சமூகத்தில் பெண்கள் மீது மெல்ல, மெல்ல ஸ்லோ பாய்சன் போல உட்செலுத்தப் பட்டுள்ளது. இதன் காரணத்தால் பல பெண்கள் தங்கள் உடலை தாங்களே ரசிக்க, விரும்ப மறுக்கிறார்கள், மறக்கிறார்கள்.

இதுல என்ன இருக்கு? என்று கேட்கிறீர்களா... நம்மை நாமே வெறுக்கும் போது, நம்முள் மன அழுத்தம், சுய மரியாதை இன்மை, சுய மதிப்பிழத்தல் போன்றவை ஏற்படும். இதனால், தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கிறது.

இதற்கு எல்லாம் ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்று இந்திய தலைநகரில் இருந்து ஒரு பெண் கிளம்பியிருக்கிறார். இவரது முயற்சியால் பல பெண்கள் தங்கள் உடலுடன், தங்களையும் சேர்த்து நேசிக்க துவங்கியிருக்கிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுஷ்கா கேல்கர்!

அனுஷ்கா கேல்கர்!

புது தில்லியை சேர்ந்தவர் அனுஷ்கா கேல்கர். இவர் 21 வயது நிரம்பிய ஒரு மாணவி. இவர் தனது இன்ஸ்டாகிராம் முகப்பில் BrownGirlGazin என்ற பெயரில் இந்திய பெண்கள் மற்றும் அவர்கள் உடல் சார்ந்த விருப்பம் குறித்த புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வருகிறார்.

கடந்த இரண்டு மாதங்களாக அனுஷ்கா கேல்கர் உடல் சார்ந்த இந்திய பெண்களின் விருப்பம் குறித்து டாக்குமெண்டரி எடுத்து வருகிறார்.

Image Source: Anushka Kelkar

அவமானம்!

அவமானம்!

இந்தியாவின் நகர்புறத்தில் வாழ்ந்து வரும் பெண்கள் பலர் மத்தியில் இந்த உணர்வு காணப்படுகிறது. இந்தியாவில் பெண்கள் தொடர்ந்து பல காலமாக தங்கள் உடல் சார்ந்த அச்சம் மற்றும் அவமானம் கொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் வெளிப்படுத்திக் கொல்வதில்லை என்றாலும். இதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவமான உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று அனுஷ்கா கேல்கர் கூறியுள்ளார்.

Image Source: Anushka Kelkar

ரெசிடென்ஷியல் காலேஜ்!

ரெசிடென்ஷியல் காலேஜ்!

நான் ரெசிடென்ஷியல் காலேஜில் இருந்த போது. நான் எனக்கான தளத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட பெண்களுடன் வசித்து வந்தேன். அப்போது தான் முதன் முறையாக இந்தியாவில் பெண்கள் உடல் சார்ந்து எப்படியான எண்ணங்கள், விருப்பம், வெறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்துக் கொண்டேன். அவர்கள் உடல் சார்ந்த தங்களது பல அசௌகரியங்களை என்னுடன் பகிர்ந்துக் கொண்டார்கள்., என கேல்கர் மேலும் தெரவித்துள்ளார்.

Image Source: Anushka Kelkar

போல்ட் ஸ்டேட்மென்ட்!

போல்ட் ஸ்டேட்மென்ட்!

பருக்கள், பிரசவ தழும்பு, சுருக்கம், காயங்கள், கருவளையம் என இதெல்லாம் பெண் உடலில் இருக்கவே கூடாது... அப்படி இருந்தால் அவள் அழகான பெண் இல்லை என்ற கோட்பாடு இந்தியாவில் வரையறுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அனுஷ்கா கேல்கரின் பிராஜக்ட் மூலமாக இந்திய பெண்கள் தங்கள் உடலின் காயங்கள், துன்புறுத்தல் அடையாளங்கள், பருக்கள், பாதுகாப்பின்மை, உடல்பருமனால் ஏற்பட்ட ஸ்ட்ரெச் குறிகள் குறித்தெல்லாம் பேசியுள்ளனர்.

Image Source: Anushka Kelkar

அசிங்கம்?

அசிங்கம்?

தங்களை சுற்றி இருக்கும் பெண்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு, சமூகம் கூறும் அழகிற்கான குறிகள் தங்களிடம் இல்லை என்ற எண்ணம் கொண்டு... தாங்கள் புகைப்படங்களில் தோன்ற தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் பல பெண்கள் மத்தியில் இருப்பது அனுஷ்காவின் இந்த பிராஜக்ட் மூலம் அறியவந்துள்ளது. இந்திய பெண்கள் மத்தியில் இருக்கும் இந்த மனப்பான்மையை தான் நான் மாற்ற விரும்பினேன் என்று அனுஷ்கா கேல்கர் கூறியுள்ளார்.

Image Source: Anushka Kelkar

உதவி!

உதவி!

அனுஷ்கா கேல்கரின் இந்த பிராஜக்டில் பங்கெடுத்துக் கொண்ட பெண்களின் ரியாக்ஷன்கள் தான் இவரை இந்த டாக்குமென்ட்ரி உருவாக்க துணையாக இருந்துள்ளது. முதல் முறையாக சிலரை அவர்கள் அவமானமாக கருதும் சருமத்தோடு புகைப்படம் எடுத்து காண்பித்த போது, அவர்கள் அதை கண்டு பிறகு... மிக தைரியமாக போஸ் கொடுக்க ஆரம்பித்தனர் என்று அனுஷ்கா கேல்கர் கூறியுள்ளார். ஆரம்பத்தில் பொதுவெளியில் பகிர தயங்கினாலும். பிறகு அவர்கள் அதை விரும்ப துவங்கினார்கள் என கேல்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

Image Source: Anushka Kelkar

மனதில் உறுதி வேண்டும்...

மனதில் உறுதி வேண்டும்...

இது தான் வெற்றி, தோல்வி, இது தான் நல்லது, கெட்டது என்பதற்கு இன்று வரை நமது சமூகத்தில் தெளிவான, தீர்க்கமான கோட்பாடுகள் இல்லை. அவரவர் அவரவருக்கு பொருந்தும் வகையில் பட்டி டிங்கரிங் பார்த்து பேசி, பரப்பி வருகிறார்கள். இதில் அழகுக்கு யார் கோட்பாடுகள் வரையறுத்தது?

சாலம் பாப்பையா அழகா? இல்லையா? அப்துல் கலாம் அழகா? இல்லையா? பிடி உஷா, மல்லேஸ்வரி, கல்பனா சாவ்லா, சாய்னா, பிவி சிந்து, டாக்டர் அனிதா? இப்படி நாம் ஒரு பெரும் பட்டியலே போடலாம்... இவர்கள் எல்லாம் நம் கண்களில் எப்படி அழகாக தெரிந்தனர். அவர்கள் ஜொலிக்கும் சருமம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பளிச்சிடும் மேக்கப் செய்திருக்கவில்லை, அவர்கள் பளபளப்பான ஆடைகள் உடுத்தவில்லை, ஹேர் டிரெஸ்ஸிங், லிப்ஸ்டிக் எதுவும் தேர்வு செய்யவில்லை. ஆனால், இவர்களை காட்டிலும் பெரும் அழகான மக்களை நாம் கைக்காட்ட முடியுமா?

மனதில் உறுதி கொள்ளுங்கள். தங்கள் பொருட்களை விற்க மார்கெட்டிங் செய்யும் கோமாளிகளின் பேச்சுக்கு செவி சாய்க்காமல்... நெஞ்சை நிமிர்த்தி நீங்கள் ஒரு அழகி என்பதை உணர துவங்குங்கள்.

Image Source: Anushka Kelkar

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Should We Feel Ashame on Our Own Bodies? See, What Indian Women Shares!

These Indian Women Decided To Love Their Bodies And Their Brown Skin Despite Body Standards.
Desktop Bottom Promotion