For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படியான ஆண்களை தான் லவ்வ விரும்புகிறார்களாம் இந்திய பெண்கள்... இதுல நீங்க எப்படி?

இப்படியான ஆண்களை தான் லவ்வ விரும்புகிறார்களாம் இந்திய பெண்கள்... இதுல நீங்க எப்படி?

By Staff
|

ஒவ்வொரு வருடமும் கடந்த ஆண்டிற்கான ஈர்ப்பான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் 2017ம் ஆண்டிற்கான மிகவும் ஈர்ப்பான இந்திய ஆண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது டைம்ஸ் நிறுவனம். எப்போதும் போல இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் சிலர் ரேங்கில் கீழேயும், மேலயும் இடமாறி சென்றுள்ளனர். சில புதுவரவுகளும் உள்ளன.

இந்த வருடம் இந்த பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி ரன்வீர் முதலிடத்தையும், 20 இடங்கள் முன்னேறி பாகுபலி பிரபாஸ் இரண்டாம் இடத்தையும், ஒரு இடம் பின்தங்கி விராட் மூன்றாம் இடத்தையும் பிடித்தள்ளனர்.

இதோ! 2017ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 ஈர்ப்பான ஆண்கள்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 ரன்வீர் சிங்!

#1 ரன்வீர் சிங்!

பத்மாவத் படத்தில் நிஜமாகவே ஒரு சூப்பர் வில்லன் வேடம் ஏற்று கலக்கி இருந்தார் ரன்வீர் சிங். தீபிகாவை காதலித்து வருகிறார். விராட் - அனுஷ்கா திருமணத்திற்கு பிறகு பாலிவுட் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் திருமணம் இவர்களுடையது தான். இவரது ரொமான்ஸ், குறும்புத்தனம், உடற்கட்டு, பலவித தோற்றம் போன்றவை பெண்களிடம் ஈர்ப்பு பெற்றுள்ளது.

#2 பிரபாஸ்!

#2 பிரபாஸ்!

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இவரது மார்கெட் மட்டுமல்ல, இவரை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கும் பெண்களின் கூட்டமும் பெரிதாகி உள்ளது. பாகுபலி மூலம் பிரபாஸ் இந்திய அளவில் பெரிய ஸ்டாராக உயர்ந்துள்ளார். இப்போதைக்கு இவர் சிங்கிள் தான். ஆனால், அடிக்கடி மீடியாக்களில் அனுஷ்காவுடன் காதல் என்று இவர் பெயர் அடிப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த சேதியும் வரவில்லை. இவரிடம் பெண்கள் பிடித்ததாக கூறியிருப்பது, இவரது பார்வை, புன்னகை மற்றும் பாகுபலி தோற்றம்.

#3 விராத் கோலி!

#3 விராத் கோலி!

இந்திய அணியின் அனைத்து ஃபார்மெட்களிலும் விராத் தான் கேப்டனாக தலைமை தாங்கி வருகிறார்கள். கடந்த ஆண்டு காலண்டரில் அதிக ரன்கள் ஸ்கோர் செய்த வீரர் என்ற சாதனையும் செய்துள்ளார். தனது நீண்ட நாள் காதலி அனுஷ்கா ஷர்மாவை விராட் மனமுடித்துவிட்டார். இவரிடம் பெண்கள் விரும்புவதாக கூறுவது மைதானத்தில் இவரது ஆக்ரோஷம். இது அனைத்து ஆண்களிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். திருமணம் ஆனாலும் கூட இவர் மீதான ஈர்ப்பு பெண்கள் மத்தியில் குறையவில்லை.

#4 ஹ்ரிதிக் ரோஷன்!

#4 ஹ்ரிதிக் ரோஷன்!

இந்த டாப் டென் பட்டியலில் இவர் நுழைந்த போது, இவருடன் போட்டியாக இருந்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். ஆனால், பல வருடமாக தொடர்ந்து இந்திய பெண்கள் விரும்பும் ஆண்கள் பட்டியலில் டாப் டென் இடத்தை பிடித்து வருகிறார் ஹ்ரிதிக் ரோஷன்.

விவாகரத்து ஆயிருந்தாலும் கூட, தனது முன்னாள் மனைவியை அடிக்கடி சந்தித்து வருகிறார் ஹ்ரிதிக். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக அறியப்படுகிறது. கிரேக்க கடவுள் போன்ற இவரது உடல் தோற்றம், பர்சனாலிட்டி போன்றவரை பெண்கள் ஈர்ப்புடையதாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

#5 சித்தார்த் மல்ஹோத்ரா!

#5 சித்தார்த் மல்ஹோத்ரா!

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது. ஆலியா பட்டை காதலித்து வந்தார். ஆனால், இப்போது இவர்கள் பிரிந்துவிட்டனர். தற்போது ஜாக்லின் பெர்னாண்டஸ் எனும் நடிகையுடன் இவர் டேட்டிங் உறவில் இருப்பதாக கிசுகிசு பரவி வருகிறது. ஆன்-ஸ்க்ரீனில் சித்தார்த்தின் ஜென்டில்மேன் தோற்றம் தங்களுக்கு பிடித்திருக்கிறது என்று பெண்கள் கூறியுள்ளனர்.

#6 மகேஷ் பாபு!

#6 மகேஷ் பாபு!

இந்தியில் ஹ்ரிதிக் என்றால், தெலுங்கில் மகேஷ் பாபு. இவர்கள் இருவருக்கும் வயது அதிகரிப்பதாக தெரிவதே இல்லை. வருடங்கள் அதிகமாக, அதிகமாக இருவரிடமும் இளமை கூடிக் கொண்டே போகிறது. இவருக்கும் நர்மதாவிற்கும் திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சிரித்த முகம், ஹேண்ட்சம் லுக் போன்றவை இவர் மீது அதிக ஈர்ப்பு கொள்ள வைக்கிறது என்று பெண்கள் கூறுகிறார்கள்.

#7 ராணா!

#7 ராணா!

பாகுபலியின் வில்லன் ராணா. சிறந்த வில்லன் என்றாலும், தனது நடிப்பால் ராணா பெண்கள் மனதையும் வென்றிருக்கிறார். இந்திய சினிமாவில் தனக்கான தனி இடத்தை பாகுபலி மூலம் பெற்றிருக்கிறார் ராணா. இவரது உடற்கட்டு, உயர்ந்த உருவம், ஹல்க் போன்ற உடல்வாகு பிடித்திருப்பதாக பெண்கள் கூறியுள்ளனர்.

#8 ஜித்தேஷ் சிங் தியோ!

#8 ஜித்தேஷ் சிங் தியோ!

லக்னோவை பூர்வீகமாக கொண்டவர் ஜித்தேஷ் சிங் தியோ. இவர் மிஸ்டர் இந்தியா வோர்ல்ட் 2017 டைட்டில் வென்றிருக்கிறார். இவர் ஓர் சிவில் என்ஜினியரும் ஆவார். மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட அணியிலும் இடம் பிடித்துள்ளார். இது போக மாவட்ட அளவிலான நீச்சல் வீரராகவும் இருந்திருக்கிறார் ஜித்தேஷ். நடிக்க வேண்டும் என்பது ஜித்தேஷின் பெரும் கனவு. ஏற்கனவே சில குறும்படங்களை நடித்து முடித்துவிட்டார் ஜித்தேஷ். இப்போதைக்கு சிங்கிள். இவரது கண்கள் மிகவும் அழகாக இருப்பதாக பெண்கள் கூறுகிறார்கள்.

#9 துல்கர் சல்மான்!

#9 துல்கர் சல்மான்!

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? மம்முட்டியான் மகனாக பிறந்துவிட்டு ஆணழகன் பட்டியலில் இடம் பிடிக்காவிட்டால் எப்படி. மலையாளத்தில் முதன்மை நடிகர் இடத்தை பிடித்துள்ளார். பாலிவுட்டிலும் தடம் பதித்துவிட்டார். இவருக்கு திருமணமாகி மகள் உள்ளார். புன்னகை, ஆண்மைக்கான லுக் போன்றவை ஈர்ப்பை ஏற்படுத்துவதாக பெண்கள் கூறியுள்ளனர்.

#10 பிரதமேஷ் மௌலிங்கர்!

#10 பிரதமேஷ் மௌலிங்கர்!

பிரதமேஷ் ஒரு மாடல் மற்றும் தொழில் செய்து வருகிறார். நம்பினால் நம்புங்கள்.. நான் சிங்கிள் தான் என்று கூறுகிறார் இந்த ஹாட் மாடல். வெட்டி வைத்த சிலை போல உடற்கட்டு, கிளாசான லுக் போன்றவை பெண்கள் ஈர்ப்புக் கொள்ள வைப்பதாக கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unbearably Attractive Indian Men Every Girl Would Wish to Date

Unbearably Attractive Indian Men Every Girl Would Wish to Date
Story first published: Saturday, May 5, 2018, 15:16 [IST]
Desktop Bottom Promotion