For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொது இடத்தில் சந்கோஜத்திற்கு ஆளான பிரபல நடிகர், நடிகைகள்!

By Staff
|

அனைவருக்கும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், பிரபலங்களின் வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானது அல்ல. நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சில விஷயங்கள் அவர்கள் வாழ்வில் நடந்தால் அது உலக அளவில் பெரும் செய்தியாகி விடும். அது விவாகரத்தாக இருந்தாலும் சரி, தெரியாமல் வாய்தவறி கூறும் வார்த்தைகளாக இருந்தாலும்.

Image Source: Youtube

இதுப்போக ஜிப் போட மறப்பது, மேக்கப் அரைகுறையாக செய்வது, வாந்தி எடுப்பது போன்றவரை எல்லாம் சாதாரண விஷயங்கள். ஆனால், இதுவே பிரபலங்கள் பொது இடத்தில் இப்படியான விஷயத்தில் சிக்கினால் அது பெரிய விஷயமாகி விடும். அதற்கு இவர்கள் தான் சாட்சியங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிறிஸ்டினா ஆகீலேரா

கிறிஸ்டினா ஆகீலேரா

இவர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பாடலாசிரியர் மற்றும் பாடகர். இவர் நடிப்பு துறையிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் கிறிஸ்டினா ஆகீலேரா பாடிக் கொண்டிருந்த போது அவரது காலில் நீர் போன்ற திரவம் வழிந்தோடுவது போல் புகைப்படங்களில் பதிவாகி இருந்தது. இதை, அவர் பாடிக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழித்துவிட்டார் என்று கூறி ஊடகங்களில் செய்திகள் பரவின.

ஆனால், ஒரு சில நாட்கள் கழித்து, அது சிறுநீரோ அல்லது அந்த மூன்று நாள் பிரச்சனையோ இல்லை. அவர் பயன்படுத்தியிருந்த ஸ்ப்ரே மற்றும் வியர்வை வெளிப்பட்டதன் மூலம் ஸ்கின் டேன் ஆனது. அதுவே படங்களில் பதிவாகி இருந்தது. இதை பலரும் தவறாக எடுத்துக் கொண்டனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

பெர்கி

பெர்கி

இவரும் அமெரிக்காவை சேர்ந்த பாடலாசிரியர் மற்றும் பாடகி ஆவார். ஹிப் ஹாப் இசையில் இவரது பாடல்கள் நல்ல வரவேற்பும் பெரும் வெற்றிகளும் கண்டுள்ளன. இவர் நடிகையாகவும் இருந்து வருகிறார். ஓர் இசை நிகழ்ச்சி மேடையில் உணர்ச்சிப்பெருக்கில் பாடிக் கொண்டிருந்த போது, தான் சிறுநீர் கழிந்ததை அவர் கவனிக்கவே இல்லை. இது அவரது ஆடை ஈரமானதை வைத்தே ரசிகர்கள் அறிந்தனர்.

டாம் க்ரூஸ்!

டாம் க்ரூஸ்!

இவருடன் 80களில் நடித்தவர்கள் எல்லாம் பாட்டி போல ஆகிவிட்டார்கள். ஆனால், இன்னும் டாம் க்ரூஸ் அப்படியே இளமையாக தோற்றமளிக்கிறார். ஒரு முறை பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட டாம் உணர்ச்சி கட்டுப்படுத்த முடியாமல் கொஞ்சம் வைலண்டாக நடந்துக் கொண்டார். அப்போது அவர் தன்னுடன் அமர்ந்திருந்த நடிகையும் பொருட்படுத்தாமல் இருக்கை மீது குதித்து உணர்ச்சிவசப்பட்டார்.

ராபர்ட் பாட்டின்சன்

ராபர்ட் பாட்டின்சன்

ஆங்கிலேயே நடிகர், தயாரிப்பாளர், மாடல் மற்றும் இசை கலைஞர் என்று பல அவதாரங்கள் எடுத்தவர் ராபர்ட் பாட்டின்சன். விழா ஒன்றில் கலந்துக் கொண்ட போது ராபர்ட் பாட்டின்சன் தனது ஜீன்ஸ் பேண்ட் ஜிப் அணிய மறந்துவிட்டார். இது புகைப்படங்களில் சிக்கவே, மிகவும் வைரலாக பரவின. நம்மில் ஒருவர் ஜிப் போட மறந்து மாட்டினாலே நாள் முழுக்க கேலி செய்து ஒருவழி செய்துவிடுவார்கள். பிரபலங்கள் மாட்டினால் சும்மா விடுவார்களா?

தாரா ரைட்!

தாரா ரைட்!

தாரா ரைட் ஒரு அமெரிக்க நடிகை ஆவார். இவர் அமெரிக்கன் பை பாகம் ஒன்று , இரண்டு மற்றும் ரீ-யூனியன் படங்களில் நடித்தவர் ஆவார். பி டிட்டி எனும் பார்ட்டியில் கலந்துக் கொண்ட போது, தனது மேலாடை விலகி, மார்பகங்கள் தெரிவதை கூட அறியாமல் சிரித்தபடி உட்கார்ந்திருந்தார் தாரா ரைட்.

ஏஞ்சலினா ஜூலி!

ஏஞ்சலினா ஜூலி!

அமெரிக்காவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். இப்போது சமூக நற்பணி வேலைகளில் ஈடுபட்டு வரும் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கிறார். ஒருமுறை விழா ஒன்றில் கலந்துக் கொள்ள அந்த ஏஞ்சலினா ஜூலி அரைகுறை மேக்கப்புடன் தோன்றி சந்கோஜதிற்கு ஆளானார்.

கோலே கர்தாஷியன்!

கோலே கர்தாஷியன்!

அமெரிக்கன் டெலிவிஷன் பர்சனாலிட்டி, மாடல், தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் என்று பன்முகம் கொண்டவர் கோலே கர்தாஷியன். கடந்த 2007ம் ஆண்டில் இருந்து இவர் கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். ஒருமுறை வெளியே சென்ற போது, பலத்த காற்றடித்த போது இவரது ஆடை காற்றில் பறக்க, தெரியக் கூடாத பாகங்கள் தெரிந்து, அப்புகைப்படம் வைரலாகி கோலே கர்தாஷியனை சங்கோஜப்பட வைத்தது.

ஜஸ்டின் பைபர்!

ஜஸ்டின் பைபர்!

அமெரிக்காவின் முன்னணி பாப் பாடகர் ஜஸ்டின் பைபர். அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் கேலிக்குள்ளாவதை வழக்கமாக கொண்டிருப்பவர் இவர். ஒருமுறை மேடையில் பாடிக் கொண்டிருந்த போது, திடீரென எதிர்பாராத விதமாக வாந்தி வர... அதை கட்டுப்படுத்த முடியாமல், மேடையிலேயே வாந்தி எடுத்துவிட்டார் ஜஸ்டின்.

பிரிட்னி ஸ்பியர்ஸ்!

பிரிட்னி ஸ்பியர்ஸ்!

உலகின் முன்னணி பாப் பாடகியாக இருந்தவர். பிறகு தனது இல்லற பிரச்சனைகள் மற்றும் போதை பழக்காத்தால் சில காலம் மன அழுத்தம் அதிகரித்து காணப்பட்டார். அந்த காலாத்தில் அதிகம் சர்ச்சையில் சிக்கினார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

ஒருமுறை தனது முடியை இவரே மொட்டை அடித்துக் கொண்டது மட்டுமின்றி, அந்த படங்களை வெளியிடவும் செய்தார். அதில், பாதி மொட்டை அடித்த தலையுடன் வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

50 சென்ட்!

50 சென்ட்!

இவர் ஒரு பாப் இசை கலைஞர். பிரபலங்கள் சில முறை விளையாட்டு போட்டிகளில் நிதி திரட்ட பங்கேற்ப்பது உண்டு. சிலர் பொழுதுபோக்காக கூட ரசிகர்களை ஈர்க்க விளையாடுவார்கள். அப்படி தான் ஒருமுறை சூர்யா கிரிக்கெட் விளையாட போய் முதல் பந்தில் டக்-அவுட் ஆகி கேலிக்குள்ளானார். இதே போல் தான் 50 சென்ட் ஒருமுறை பேஸ்பால் விளையாட சென்று மொக்கை வாங்கி சந்கோஜதிற்கு ஆளானார்.

All Image Source: bacalao

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Most Embarrassing Moments from Celebrities Lives

Remember that one time when you were a small kid in class and peed your pants or puked in the middle of math class? Now, whenever you think about it, you turn all red and just want to disappear completely. But don’t fret, these things happen to the best of us, even celebrities.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more