இந்த 6 கதவில் ஒன்றை செலக்ட் செய்யுங்க! உங்க ஆழ் மனது ஆசை என்னனு நாங்க சொல்லறோம்!

Written By:
Subscribe to Boldsky

நாம் ஒன்றை தேர்ந்தெடுக்கும் முறையை வைத்து கூட நமது மனம் எத்தகையது? நம் மனதிற்கு பிடித்தது என்ன என்பதை பற்றி எல்லாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும்.. ஒவ்வொரு விஷயங்கள் பிடிக்கும்.. இதனை வைத்து உங்களது வாழ்க்கை எப்படிப்பட்டது.. உங்களது மனம் எத்தகையது என்பது போன்ற உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது... நீங்கள் இந்த கதவுகளின் படங்களை பார்க்கும் போது உங்களது மனதை கவர்ந்த கதவு எது என்பதை மட்டும் தேர்வு செய்தால் போதுமானது..

This Picture Test Will Reveal Your Deepest Desire

நீங்கள் தேர்வு செய்யும் கதவானது உங்களது ஆழ்மனதில் என்ன உள்ளது..? நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்களுக்கு விளக்காமாக கூறும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதில் ஒரு கதவை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான்.. இதில் ஒரு கதவை தேர்ந்தெடுப்பதன் மூலமாக உங்களது வாழ்க்கையில் உண்மையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள இது உதவும்.. நீங்கள் ஒரு கதவு எண்ணை தேர்ந்தெடுத்து உங்களது மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண்ணிற்கான விளக்கத்தை தொடந்து காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கதவு எண் 1:

கதவு எண் 1:

நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 1 என்றால், நீங்கள் சுதந்திரமான ஒரு பாதையை தேடுகிறீர்கள் என்று அர்த்தமாகும்.. உங்களுக்கு சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.. நீங்கள் சொந்தமாக முடிவு எடுத்து வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்..

சுய சிந்தனை

சுய சிந்தனை

நீங்கள் சுய சிந்தனையாளராக இருப்பீர்கள்.. நீங்கள் மற்றவர்களுடன் ஆன மோதல்களை விரும்ப மாட்டீர்கள்.. உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் நேசித்து வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். வாழ்க்கையை இரசித்து வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர் நீங்கள்...!

கதவு எண் 2:

கதவு எண் 2:

நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 2 என்றால், நீங்கள் உங்களது வாழ்க்கையில் உங்களுக்கென ஒரு தனி வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ள கூடியவர்கள். அந்த பாதையில் நீங்கள் நன்றாகவும் பயணம் செய்து கொண்டிருப்பீர்கள்.. உங்களுக்கு தனியாக இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். நீங்கள் வாழ்க்கையில் தனியாக பயணிக்க விரும்புவீர்கள்.. தனியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள்.. நீங்கள் யோசிப்பது கூட தனிமையை பற்றி தான்.. தனியாக இருக்க வேண்டும் என்றே விரும்புவீர்கள்..

புதுமை

புதுமை

உங்களது வாழ்க்கை பாதையில் நீங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்.. நீங்கள் வேறு யாருடைய குணம் கலக்கப்படாத இரு தனி நபராக இருப்பீர்கள். சுய சிந்தனை கொண்டவர்கள்.. புதுமையாக யோசிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பீர்கள். தத்துவங்களை பேச கூடியவர்களாகவும் இருப்பீர்கள். மேலும் உள் முக சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பீர்கள்..

கதவு எண் 3:

கதவு எண் 3:

நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 3 என்றால், நீங்கள் இந்த உலகத்தில் வாழ்வதை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.. இந்த உலகை மிகவும் விரும்பும் ஒரு நபராக நீங்கள் இருப்பீர்கள்.. இந்த உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உங்களது மனதில் இருக்கும். உங்களது வாழ்க்கை முழுக்க பயணமாகவே தான் இருக்கும்.. உங்களது பயணங்களுக்கு ஒரு முடிவே கிடையாது என்று கூறலாம்.

உற்சாக விரும்பிகள்

உற்சாக விரும்பிகள்

நீங்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பீர்கள். நண்பர்களை வீட்டிற்கு அழைப்பது உங்களுக்கு பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும். உங்களை சுற்றியுள்ள அனைவரும் எப்போது சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பதையே விரும்புவார்கள்..! உற்சாகத்தை விரும்பும் நபர் நீங்கள்...!

கதவு எண் 4 :

கதவு எண் 4 :

நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 4 என்றால், உங்களுக்கு உற்சாகமான வாழ்க்கை பாதை என்றால் மிகவும் பிடிக்கும்.. உங்களுக்கு குழப்பம் மற்றும் கணிக்க முடியாத சூழ்நிலைகள் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். உங்களுக்கு இதுவரை தெரியாத நபர்களிடம் கூட நட்பாக பேசக் கூடிய மனம் கொண்டவர்கள்.. புதிய விஷயங்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். விதிமுறைகளை எல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் நடக்க கூடியவர்களாகவும் இருப்பீர்கள்.. கட்டுப்பாடு விதிப்பது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது..

சுய சிந்தனை

சுய சிந்தனை

உங்களுக்கு சுயமாக செயல்படுவது தான் மிகவும் பிடிக்கும்.. நீங்கள் த்ரில் ஆன அனுபவங்களை மிகவும் விரும்புவீர்கள்.. உங்களுக்கு த்ரீல் ஆன ரைடுகளிலும், மிகவும் பயமாக உள்ள ரைடுகளிலும் அம்யூஸ்மெண்ட் பார்க்குகளில் செல்வது என்றால் மிகவும் பிடிக்கும்.

கதவு எண் 5 :

கதவு எண் 5 :

நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 5 என்றால், நீங்கள் மிகவும் அமைதியான பாதைகளை விரும்புவராக இருப்பீர்கள்.. அமைதியான சூழலை விரும்பும் ஒரு நபராக இருப்பீர்கள்.. நீங்கள் உங்களை குறைந்த அளவே கவனித்துக் கொள்ள கூடியவராக இருப்பீர்கள். பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.. உங்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும்.

பாராட்டுகளை பெறுவீர்கள்

பாராட்டுகளை பெறுவீர்கள்

நீங்கள் சில சமயங்களில் மிகவும் எளிமையான விஷயங்களை தான் தேர்ந்தெடுப்பீர்கள். உங்களது முழுமையான முயற்சியையும் செலுத்தி ஈடுபட வேண்டிய கடுமையான வேலைகளை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.. நீங்கள் பலரின் பாராட்டுகளை பெரும் ஒரு நபராகவும் இருப்பீர்கள்..

கதவு எண் 6 :

கதவு எண் 6 :

நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 6 என்றால், நீங்கள் அமைதியான வாழ்க்கை பாதையை அனுபவிக்க நினைக்கும் ஒரு நபராக இருப்பீர்கள். நீங்கள் பல மணி நேரங்களை தனிமையிலேயே அனுபவிக்க நினைப்பீர்கள்.. ஆனால் நாம் தனிமையில் தான் இருக்கிறோம் என்பதை உணராத ஒரு நபராகவும் இருப்பீர்கள்.. மனதில் உள்ளதை வெளிப்படையாக வெளியில் சொல்ல கூடிய ஒரு நபராகவும் நீங்கள் இருப்பீர்கள்.

ஆசைகள்

ஆசைகள்

உங்களுக்கு பல ஆசைகள் இருக்கும்.. உங்களை சுற்றி இருப்பனவற்றில் உங்களது மனதை கவர்ந்த பொருட்களை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே போல அந்த பொருட்களை அடைந்து விடுவீர்கள்.. நீங்கள் உண்மையான உறவுகளை அதிகமாக மதித்து நடக்க கூடியவர்களாக இருப்பீர்கள்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync
English summary

This Picture Test Will Reveal Your Deepest Desire

This Picture Test Will Reveal Your Deepest Desire
Story first published: Thursday, January 18, 2018, 13:07 [IST]
Subscribe Newsletter