இந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், நஷ்டம், சண்டை, வறுமை வரும் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky
இந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், நஷ்டம், சண்டை, வறுமை வரும் தெரியுமா? | Boldsky

இந்த உலகத்தில் நல்ல சக்திகள் இருப்பது போலவே, சில தீய சக்திகளும் இருக்கிறது என்பதை பலர் நம்ப மாட்டார்கள். நமது வீட்டில் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலமாக, அதிஷ்டம், அன்பு, சொத்துக்கள், உறவுகள், பலதரப்பட்ட நன்மைகள் போன்றவை கிடைக்கும். அதே சமயத்தில் உங்களது வீட்டில் ஒரு சில பொருட்களை வைத்துக் கொள்வதன் மூலமாக உங்களது வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி சூழ்ந்து காணப்படும்.

இது உங்களது வீட்டில் இருக்க கூடிய நேர்மறை எண்ணங்களை குறைக்கிறது. இதனால் நீங்கள் செய்யும் காரியங்களில் சில தடைகள், மன சங்கடம் போன்றவைகள் உண்டாகும். உங்களது வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் அந்த பொருட்கள் என்னவென்று கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்திவிடுவது நல்லது. இந்த பகுதியில் உங்களது வீட்டில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் பொருட்கள் என்னென்ன என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிடிக்காதவர்களின் பொருட்கள்

பிடிக்காதவர்களின் பொருட்கள்

நம்மை பிடிக்காதவர்கள் சில சமயங்களில் நமக்கு ஏதேனும் ஒரு அன்பளிப்பையோ அல்லது ஒரு பொருளையோ ஏதேனும் ஒரு சூழ்நிலையிலோ அல்லது கட்டாயப்படுத்தியோ கொடுப்பார்கள். இது போன்ற உங்களை பிடிக்காத நபர்கள் உங்களுக்கு ஏதேனும் ஒரு பொருளை அன்பளிப்பாக கொடுத்திருந்தால், அதனை உங்களது வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

அது எந்த பொருளாக இருந்தாலும் அதனை நீங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் அந்த பொருளை வேறு யாருக்காவது பரிசாகவோ அல்லது தானமாகவோ கொடுத்துவிடுங்கள்.

கத்திரிக்கோல்

கத்திரிக்கோல்

நாம் அதிகமாக செய்யும் தவறு என்னவென்றால், கத்திரிக்கோலை திறந்த நிலையிலேயே வைப்பது ஆகும். வாய் திறந்த நிலையில் இருக்கும் கத்திரிக்கோலானது உங்களது வீட்டில் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கச் செய்யும். எனவே எப்பொழுதும் உங்களது வேலை முடிந்ததும் கத்திரிக்கோலை மூடிய நிலையில் வைக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

போட்டோ பிரேம்கள்

போட்டோ பிரேம்கள்

நீங்கள் உங்களது புகைப்படங்களை வைத்திருக்கும் போட்டோ பிரேம்கள் நல்ல நிலையில் தான் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அதில் ஏதேனும் உடைசல்கள், வெடிப்புகள் இருந்தால் அதனை மாற்றிவிட்டு புதிய போட்டோ பிரேம்களை வைக்க வேண்டியது அவசியமாகும். இந்த டேமெஜ் ஆன பிரேம்கள் கூட எதிர்மறை சக்திகளை உண்டாக்கும்.

பழைய துணிகள்

பழைய துணிகள்

உங்களது வீட்டில் இருக்கும் பழைய துணிகள் மற்றும் கிழிந்த துணிகளும் உங்களது வீட்டில் இருந்தால் அவற்றை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். நீங்கள் பழைய துணிகள் எதற்காகவது உதவும் என்று வீட்டிலேயே வைத்திருப்பீர்கள். ஆனால் நீண்ட காலமாக அதனை எதற்காகவும் பயன்படுத்தாமல் வீட்டிலேயே வைத்திருப்பீர்கள். இவைகள் உங்களது அதிஷ்டத்தை குறைக்கும் என்பது தெரியுமா?

இதனை பலர் நம்புவார்கள். ஆனால் சிலர் இதனை நம்ப மாட்டார்கள். நீங்கள் உங்களது வீட்டில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தி, உங்களது வாழ்க்கையில் அதிஷ்டம் நிறைந்துள்ளதை உணரலாம்.

இறந்த மிருகங்கள்

இறந்த மிருகங்கள்

நீங்கள் புலியின் தோல், மானின் கொம்புகள் போன்றவை உங்களது ஹாலின் அழகை மேம்படுத்துவதாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அவ்வாறு கிடையாது, இறந்த எந்த ஒரு மிருகத்தின் உடலின் பகுதிகளையும் உங்களது வீட்டில் வைத்திருந்தால் உங்களது வீட்டை எதிர்மறை சக்திகள் சூழ்ந்து கொள்ளும். எனவே இவற்றை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

காய்ந்த பூக்கள்

காய்ந்த பூக்கள்

உங்களது வீட்டில் காய்ந்த பூக்களை வைத்திருக்க கூடாது. நீங்கள் பிளவர்வாஷில் வைத்திருக்கும் பூக்களை தினசரி மறக்காமல் மாற்ற வேண்டியது அவசியமாகும். வீட்டில் செயற்கையான பூக்களையும் வைத்திருக்க கூடாது. இதுவே நீங்கள் பிரஷ் ஆன பூக்களை உங்களது வீட்டில் வைத்திருந்தால் அது நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தும்.

கண்ணாடிகள்

கண்ணாடிகள்

உங்களது வீட்டில் இருக்கும் கண்ணாடிகளை எப்பொழுதும் துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதே சமயத்தில் வீட்டில் உடைந்த கண்ணாடிகள், மிகவும் பழைய நிலையில் உள்ள கண்ணாடிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனடியாக வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஏன்னெனில் இந்த உடைந்த மற்றும் அழுக்கான கண்ணாடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். கண்ணாடிகளை துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

முள் செடிகள்

முள் செடிகள்

உங்களது வீட்டினுள் சப்பாத்திக் கள்ளி போன்ற சின்ன சின்ன செடிகளை அழகிற்காக வைக்கின்றனர் இது உள்பட பிற முள் தண்டுடன் உள்ள செடிகளையும் வைத்திருக்க கூடாது. இவ்வாறு இந்த செடிகளை வைத்திருப்பதினால், பண கஷ்டம், தம்பதிகளுக்குள் சண்டைகள் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். எனவே அழகிற்காக வைக்கிறேன் என்ற பெயரில் உங்களது மகிழ்ச்சிகளை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இவற்றை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.

அயர்ன் பாக்ஸ்

அயர்ன் பாக்ஸ்

உங்களது படுக்கை அறையில் எப்பொழுதும் அயர்ன் பாக்ஸை வைக்க கூடாது இது தம்பதிகளுக்குள் உள்ள நெறுக்கத்தை குறைப்பதோடு, சண்டை சச்சரவுகள் வருவதற்கு வழிவகுக்கும். எனவே இந்த அயர்ன் பாக்ஸை மட்டும் படுக்கை அறையில் வைக்க கூடாது.

புதிதாக திருமணமானவரா?

புதிதாக திருமணமானவரா?

புதிதாக திருமணமானவர்கள் தங்களது படுக்கை அறையில் கண்ணாடியை வைக்க கூடாது. இது தம்பதிகளுக்கு இடையில் ஈகோவை வளர்க்கும். எனவே இவற்றை தவிர்க்கலாம்.

வால் போட்டோக்கள்

வால் போட்டோக்கள்

வால் போட்டுக்கள் உங்களது சுவர்களை அழகரிக்கும் தன்மை கொண்டவை. ஆனால், நீங்கள் உங்களது சுவரில் சோகமாக இருப்பது, இறப்பு போன்ற நெகட்டிவ் எனர்ஜியை தரும் புகைப்படங்களை மாட்டக் கூடாது.

பெயிண்ட் நிறம்

பெயிண்ட் நிறம்

உங்களது வீட்டு பெயிண்டின் நிறம் சிவப்பாக இருப்பது கூடாது. பிங்க், பச்சை, லைட் ப்ளூ போன்றவை இருக்கலாம்.

வாடிய செடிகள்

வாடிய செடிகள்

வாடிய செடிகளை உங்களது வீட்டில் வைத்திருக்க கூடாது.. இது எதிர்மறை ஆற்றலை உங்களது வீட்டில் வளர்க்கும். வீட்டில் பிரஷ் ஆன செடிகளை வளர்பதன் மூலம் உங்கள் வீட்டில் சந்தோஷம் பொங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync ஆன்மீகம்
English summary

These objects that spread negative energy around the house

These objects that spread negative energy around the house