For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல்வர் பதவிக்காக குட்டி ராதிகாவை கர்ப்பமாக்கிய எச்.டி. குமாராசாமி #SecretMarriage

முதல்வர் பதவிக்காக குட்டி ராதிகாவை கர்ப்பமாக்கிய எச்.டி. குமாராசாமி!

By Staff
|

முன்னாள் இந்திய பிரதமர் தேவ கௌடாவின் மகன் தான் ஹரதனஹல்லி தேவகௌடா குமாராசாமி என்றழைக்கப்படும் எச்.டி. குமாரசாமி. தந்தை முன்னாள் இந்திய பிரதமராக இருந்தாலுமே கூட ஆரம்பக் காலக்கட்டத்தில் குமாரசாமிக்கு அரசியல் மீது பெரிதாக ஆர்வம் ஏதும் இல்லை. சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் தான் குமாரசாமிக்கு ஈர்ப்பு இருந்தது. இவர் பல கன்னட வெற்றிப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயது முதலே கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் தீவிர ரசிகர் குமாரசாமி. ராஜ்குமார் படங்களில் அணிவது போன்ற உடைகளை தனக்கென பிரத்தியேகமாக வடிவமைத்து உடுத்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு குமாரசாமி ஒரு தீவிர ராஜ்குமார் ரசிகராக இருந்து வந்தார்.

குமாரசாமிக்கும் அவரது முதல் மனைவி அனிதாவிற்கும் பிறந்த நிகில் கௌடா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கன்னட திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிப்பு!

படிப்பு!

குமாரசாமி பிறந்தது ஹசான் எனும் மாவட்டத்தில். பெங்களூரில் தான் இவர் படித்து வந்தார். விஜயா கல்லூரியில் பி.யு.சி முடித்த பிறகு ஜெயாநகர் நேஷனல் கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்தார்.

1986ல் அனிதா என்பவரை முதலாவதாக திருமணம் செய்துக் கொண்டார் குமாரசாமி. இவர் மூலமாக இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் தான் கன்னட திரைப்பட இளம் நடிகர் நிகில் கௌடா.

அரசியல்!

அரசியல்!

அரசியல் குடும்பத்தில் பிறந்துவிட்டு எத்தனை காலம் தான் ஒதுங்கியே இருக்க முடியும். 1996 ம் ஆண்டு ராமநகரா மாவட்டத்தின் கனகபுரா தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். பிறகு 1998ல் நடந்த மறு தேர்தலின் போது சந்திரசேகர் மூர்த்து என்பவரிடம் தோற்றார்.

குமாரசாமியின் அரசியல் வரலாற்றில் இது ஒரு மோசமான தோல்வியாக கருதப்படுகிறது. டெபாசிட் இழந்து தோல்வி கண்டார் குமாரசாமி.

2004!

2004!

2004ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை உண்டானது.

அப்போது குமாரசாமி காங்கிரஸ் உடன் கூட்டு வைத்து ஆட்சியை உருவாக்கினார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் தரம் சிங் ஒருமனதாக முதல்வராக பதவி ஏற்றார். ஆனால், இரண்டே ஆண்டுகளில் குமாரசாமி வசம் இருந்து 42 சட்டமன்ற உறுப்பினர்கள் குழப்பம் உண்டாக்கி ஆட்சியை கலைத்தனர். 2006 ம் ஆண்டு குமாரசாமி முதல்வர் பதவி ஏற்றார்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் தேர்தல் வர அதில் எடியூரப்பா முதல்வரானார்.

குட்டி ராதிகாவுடன் பழக்கம்!

குட்டி ராதிகாவுடன் பழக்கம்!

2008ம் ஆண்டில் இருந்து தான் குட்டி ராதிகாவிற்கும், குமாரசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குட்டி ராதிகாவிற்கு ஏற்கனவே 14 வயதில் ரத்தன் குமார் என்பவருடன் 2000ம் ஆண்டு திருமணமாகி இருந்தது.

ஆனால், அது ஒரு கட்டாயத் திருமணமாகும். திருமணமான இரண்டே ஆண்டுகளில் ரத்தன் குமார் மாரடைப்பில் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிகரமான நாயகி!

வெற்றிகரமான நாயகி!

2003ல் இருந்து 2007ம் ஆண்டு வர கன்னட திரை உலகில் ஒரு வெற்றிகரமான நாயகியாக வலம்வந்து கொண்டிருந்தார் குட்டி ராதிகா. இவர் நடித்த படங்கள் வெற்றிப் பெற்றன. இந்த காலக்கட்டத்தில் தான் குட்டி ராதிகாவிற்கும் - குமாரசாமிக்கும் இடையே தொடர்பு உண்டானது.

குமாரசாமியிடம் ஒரு ஜோதிடர் உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாக கூறியதாகவும். அதற்காகவே இவர் குட்டி ராதிகாவுடன் இரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

முதல் முறை குட்டி ராதிகா கருவுற்று, ஸ்கேனிங்கில் அது பெண் குழந்தை என தெரியவந்து கரு கலைப்பு செய்ததாகவும். பிறகு, மீண்டும் கருவுற்று அதுவும் மகள் என அறிய வந்ததாகவும், இம்முறை குட்டி ராதிகா கரு கலைக்க தயாராக இல்லை என்பதாலும் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் குமாரசாமி என்று செய்திகள் வெளியாகின.

ஆரம்பத்தில் மறுப்பு...

ஆரம்பத்தில் மறுப்பு...

ஆரம்பத்தில் குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவிற்கும் இருந்த உறவு மறுக்கப்பட்டு வந்தது. குட்டி ராதிகாவும் திடீரென நான்கு ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். வெளியே தலைக் காட்டவில்லை. குட்டி ராதிகா எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது.

திடீர் வருகை...

திடீர் வருகை...

2011ம் ஆண்டு லண்டனில் இருந்து தனது மகளுடன் இந்தியா வந்தார் குட்டி ராதிகா. தன் மகள் பெயர் ஷமிகா குமாரசாமி என்றும். தன் மகளின் தந்தை முன்னாள் முதல்வர் குமாரசாமி தான் என்றும் பகிரங்கமாக பேட்டி அளித்தார். குமாரசாமியும் இதை ஒப்புக் கொண்டார்.

2006 ம் ஆண்டே இவர்கள் இருவரும் இரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக அறியப்படுகிறது. அதன்படி பார்த்தால் தனது மகள் வயதில் இருந்த ஒரு பெண்ணுடன் குமாராசாமி உறவில் இருந்து இரகசிய திருமணம் செய்துக் கொண்டது அறிய வருகிறது.

வழக்கு!

வழக்கு!

இந்திய திருமண சட்டத்தின் படி, ஒருவர் ஒருவரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். முதல் மனைவி / கணவர் இறந்து பிறகோ, விவாகரத்து ஆன பிறகோ தான் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

ஆனால், குமாரசாமி முதல் மனைவி அனிதா உயிருடன் இருக்கும் போதே குட்டி ராதிகாவை இரகசிய திருமணம் செய்துள்ளார். இது சட்ட விரோதமான செயலாகும். இதனால்.. அப்போது அவர் வகித்த மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Secret Life of Former Karnataka Chief Minister HD Kumarasamy and Actress Kutty Radhika!

The Secret Life of Former Karnataka Chief Minister HD Kumarasamy and Actress Kutty Radhika!
Story first published: Thursday, May 17, 2018, 10:45 [IST]
Desktop Bottom Promotion