Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கருச்சிதைவுக்கு ஆளான பத்து நடிகைகள்!
கருச்சிதைவுக்கு ஆளான பத்து நடிகைகள்!
Recommended Video

குழந்தை என்பது நிஜமாகவே பெரிய வரம் தான். அதுவும் இந்த காலத்தில் இதை யாராலும் மறுக்கவே முடியாது. பெண்கள் மத்தியில் கருவளம் மற்றும் கருப்பை பிரச்சனைகள். ஆண்கள் மத்தியில் ஆண்மை குறைபாடு பிரச்சனைகள் அதிகரித்து வரும் காலமாக இருக்கிறது நடப்பு தசாப்தம்.
கருத்தரிப்பு மூலமாக தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள் என சான்றோர் பெருமக்கள் கூறுகிறார்கள். பத்து மாதங்கள் வலிமிகுந்தது என்றாலும், மிகவும் அழகான காலமும் கூட. இந்த அழகான காலத்தில் வாழ்நாளில் மறக்க முடியாத சோகத்தையும் சிலர் எதிர்கொண்டிருக்கிறார். அதுதான் கருச்சிதைவு.
பெண்ணாக பிறந்த யார் ஒருவரும் எதிர்கொள்ள கூடாத தருணம் இது. ஆனாலும் எதிர்பாராத விதமாக சிலருக்கு கருச்சிதைவு உண்டாகிறது. அப்படியாக தான் நீங்கள் மிக பிரபலமாக அறிந்த இந்த 10 பெண்களுக்கும் கருச்சிதைவு உண்டானது...

கிரண் ராவ் கான்!
அமீர்கனைன் மனைவி கிரண் ராவ் கான் 2009ல் கருவுற்று இருந்தார். இவர்கள் தங்களது முதல் குழந்தைக்காக மிக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக கிரண் ராவிற்கு கருச்சிதைவு ஆனது. இதை தனது பிளாகில் எழுதி இருந்தார் அமீர்கான்.
2011ல் ஐ.வி.எப் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்து கிரண் ராவ் கான் மீண்டும் கருவுற்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.

நடாஷா ஃபர்தீன் கான்!
2012ல் ஃபர்தீன் தனது ட்விட்டர் மூலமாக கூடிய விரைவில் தங்களுக்கு இரட்டையர்கள் பிறக்கவிருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார். ஆனால், அவர் கூறியதில் இருந்து மிக விரைவிலேயே தங்கள் குழந்தைகளை நாங்கள் பிறப்பதற்கு முன்னரே இழந்துவிட்டோம் என்று வருத்தத்துடன் ஃபர்தீன் கானுக்கு கருச்சிதைவு ஆனதை பகிர்ந்திருந்தார்.
பிறகு ஒரு வருடம் கழித்து 2013 டிசம்பர் மாதம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஃபர்தீன் கான்.

ஷில்பா ஷெட்டி குந்த்ரா!
ராஜ் குந்த்ரா எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. முதல் முறை கருத்தரித்த ஷில்பா ஷெட்டிக்கு கருச்சிதைவு உண்டானது. இது இந்த தம்பதியை மனதளவில் மிகவும் பாதிப்புள்ளாக்கியது.
கருத்தரித்த முதல் மூன்று மாதத்திலேயே கருச்சிதைவான காரணத்தால், இரண்டாம் முறை கருத்தரித்த போது இரண்டாவது மூன்று மாத சுழற்சி வரை இவர் கருத்தரிப்பு குறித்து வெளியே கூறவே இல்லை. 2012 மே மாதம் 21ம் நாள் இந்த தம்பதிக்கு மகன் பிறந்தார்.

கஜோல்!
ஸ்டார் காதலுக்கு உதாரணமாக விளங்கும் கஜோல் - அஜய் தேவ்கான் தம்பதியும் இந்த சோக நிகழ்வை கடந்து வந்துள்ளனர். திருமணமான புதிதில் 2001ம் ஆண்டு கஜோல் கருவுற்றார். ஆனால், எதிர்பாராத நேரத்தில் சிசுவின் நிலை மாறியதால் அறுவை சிகிச்சை செய்யும் போது கருச்சிதைவு உண்டானது.
பிறகு ஒரு வருடம் கழித்து தனது முதல் மகளை பெற்றெடுத்தார் கஜோல்.

டிம்பி, ராகுல் மகாஜன்!
மாடல் அழகியான டிம்பி மகாஜனுக்கும், ராகுல் மகாஜனுக்கும் 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2011ம் டிம்பிக்கு முதல் மூன்று மாதல் சுழற்சியின் போது கருச்சிதைவு உண்டானது. பிறகு சிறிது காலம் வெளியே வராமல் தனிமையில் வருந்திக் கொண்டிருந்தனர் இந்த ஜோடி. பிறகு சிறிது காலம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

பியோனஸ் நோல்ஸ், ஜே ஜீ!
பியோனஸ் நோல்ஸ் மற்றும் ஜே ஜீ ப்ளூ இவி எனும் அழகான பெண் குழந்தையை 2012ம் ஆண்டு பெற்றெடுத்தவர்கள். ஆனால், இதற்கு முன்னர் பியோனஸ்க்கு கருச்சிதைவு உண்டானது. தனது அந்த வலிமிகுந்த காலத்தை தனது ஹெவன் என்ற பாடலில் எழுதியிருந்தார் பியோனஸ்.

கர்ட்னி காக்ஸ்!
FRIENDS மூலம் பிரபலம் அடைந்த ஸ்டார் கர்ட்னி காக்ஸ். ஆரம்பத்தில் இவருக்கு கருச்சிதைவு உண்டானது. இதன் காரனத்தால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகினார் கர்ட்னி காக்ஸ். இதன் பின்னர் ஐ.வி.எப் எனப்படும் செயற்கை முறை மூலமாக 2004ல் மீண்டும் கருவிற்று குழந்தை பெற்றார் கர்ட்னி காக்ஸ்.

க்வினெத் பேல்ட்ரோ!
ஒரு முறை தனது பேட்டி ஒன்றில் க்வினெத் பேல்ட்ரோ தனக்கு ஏற்பட்ட கருச்சிதைவு குறித்து பேசியிருந்தார். அதில், எதிர்பாராத விதமாக தனது மூன்றாவது குழந்தையை கருவுற்ற போது கருச்சிதைவு ஏற்பட்டது என்று கூறியிருந்தார் க்வினெத் பேல்ட்ரோ. அது எனது வாழ்வில் நடந்த பயங்கரமான சம்பவமாக கருதுவதாகவும், இன்றும் என் வாழ்க்கையில் நான் பயப்படும் விஷயமாக அது மாறிப்போனது என்றும் க்வினெத் பேல்ட்ரோ கூறியிருந்தார்.

நிக்கோல் கிட்மேன்!
நிக்கோல் கிட்மேன் மற்றும் இவரது முன்னாள் கணவர் க்ரூஸ் என்பவருக்கும் பிறக்கவிருந்த முதல் குழந்தை கருச்சிதைவுக்கு ஆளானது. பிறகு ஒரு வருடம் கழித்து இந்த ஜோடி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.
ஆனால், க்ரூஸ்-ஐ பிரிந்த பிறகு, தனது இரண்டாவது கணவர் மூலமாக கருத்தரித்த போதிலும் கூட நிக்கோல் கிட்மேன்-க்கு கருச்சிதைவு உண்டானது. இவரது இட்நாகு குழந்தைகளும் வாடகை தாய் மூலமாக பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரூக் ஷீல்ட்ஸ்!
நடிகையும், மாடல் அழகியுமான ப்ரூக் ஷீல்ட்ஸ் 2001ல் முதல் முறை கருவுற்ற போது கருசிதைவுக்கு ஆளானார். பிறகு இவர் ஐ.வி.எப் எனப்படும் செயற்கை முறையில் மீண்டும் கருவுற்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன் பின்னர் இவர் இயற்கையாக கருவுற்று தனது இரண்டாவது குழந்தையை எந்த ஒரு சிரமும் இன்றி பெற்றெடுத்தார்.



Click it and Unblock the Notifications