For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாஸ்போர்ட் தொலைத்து அமெரிக்காவில் தத்தளித்த இந்தியரின் திருமணத்திற்கு உதவிய சுஷ்மா!

பாஸ்போர்ட் தொலைத்து அமெரிக்காவில் தத்தளித்த இந்தியரின் திருமணத்திற்கு உதவிய சுஷ்மா!

|

இந்திய வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் சுஷ்மா ஸ்வராஜ். இவர் சமூக தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயற்பட கூடிய அரசியல் தலைவராக காணப்பட்டு வருகிறார்.

இவரிடம் நேரில் சென்று மனு கொடுப்பதை காட்டிலும், ஏதேனும் அவசர உதவி என்றால், ட்விட்டருக்கு சென்று உதவி நாடலாம் எனும் அளவிற்கு, சுஷ்மா ஸ்வராஜ் தன்னிடம் ட்விட்டர் மூலமாக உதவி நாடிய பலருக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து அவர்கள் பயனடைய வழிவகைகள் ஏற்பாடு செய்துக் கொடுத்திருக்கிறார்.

இப்போது சமீபத்தில், தன் திருமணத்திற்கு சில நாட்களே இருக்கும் தருவாயில், அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர் ஒருவர் தனது பாஸ் போர்டை தொலைத்து தவித்து வருகிறார். அவருக்கு மனிதநேய அடிப்படையில் உதவ முன்வருவதாக சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவதா ரவி தேஜா!

தேவதா ரவி தேஜா!

தேவதா ரவி தேஜா என்பவர் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டு வசித்து வருகிறார். இவர் வாசிங்டன் டிசியில் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகவும், தனது திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் 13-15ம் தேதியில் நடக்கவிருப்பதாகவும். ஆகஸ்ட் பத்தாம் நாள் இங்கிருந்து பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். தக்கல் முறையில் தனக்கு துரிதமாக உதவி பாஸ்போர்ட் பெற உதவுங்கள். நீங்கள் தான் எனது ஒரே நம்பிக்கை என்று சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை டேக் செய்து ட்வீட் செய்திருக்கிறார்.

மனிதநேயம்!

மனிதநேயம்!

தேவதா ரவி தேஜாவின் ட்வீட்டினை கண்ட சுஷ்மா ஸ்வராஜ், " தேவதா ரவி தேஜா நீங்கள் ஒரு தவறான நேரத்தில் உங்களது பாஸ்போர்டினை தொலைத்துள்ளீர்கள். எதுவாக இருப்பினும், நீங்கள் உரிய நேரத்தில் திருமண தேதியில் இங்கே வந்தடைய நாங்கள் உதவுகிறோம்." என்று ரிப்ளை செய்திருக்கிறார்.

அம்பாசிடர்!

அம்பாசிடர்!

மேலும், அமெரிக்காவில் இந்திய அம்பாசடராக பணியாற்றி வரும் நவ்தேஜ் சர்னா என்பவரிடம், தேவதா ரவி தேஜாவிற்கு மனித நேயத்தின் அடிப்படையில் உதவும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். சுஷ்மா ஸ்வராஜின் இந்த உதவியால், அமெரிக்காவில் பாஸ்போர்ட் தொலைத்த அந்த நபர், தன் திருமணத்தை குறித்த தேதியில் அட்டன்ட் செய்யவிருக்கிறார்.

நன்றி!

நன்றி!

தனது ட்வீட்டினை கண்டு உடனே, பாஸ்போர்ட் கிடைக்க உதவிகளை முடக்கிவிட்ட சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு நன்றிகளை பதில் ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார் பாஸ்போர்ட் தொலைத்து அமெரிக்காவில் தத்தளித்து வரும் தேவதா ரவி தேஜா.

"நான் இந்த நன்றியை எப்போதும் மறக்க மாட்டேன். உங்களது இந்த எண்ணம் மிகவும் சிறந்தது. உதவிக்கு மிக்க நன்றி" என்று தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார் தேவதா ரவி தேஜா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sushma Swaraj Helps an Indian From US Who Lost His Passport Just Few Days Before His Marriage!

Indian External Affairs Minister Sushma Swaraj Helped so many people in various ways. He is very active in social media. So people now seeking help from her through twitter. Here, recently an Indian who lives in US lost his passport just few days before his marriage. Now, Sushma again came in front to help him in humanitarian basis.
Story first published: Tuesday, July 31, 2018, 17:05 [IST]
Desktop Bottom Promotion