For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களை கடைபிடிக்க நிர்பந்திக்கும் கொடூர நடைமுறை!

பெண்களுக்கு இயற்கையாக நிகழக்கூடிய மாதவிடாயின் போது நேபாளத்தில் இருக்கக்கூடிய பெண்கள் என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறார்கள்.

|

ஒவ்வொரு மக்களுக்கும் தங்களுக்கு என்ற ஒர் கலாச்சாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கும். ஆண்களை விட பெண்களைச் சுற்றியே நிறைய கலாச்சார கட்டுப்பாடுகள் நிறைந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இந்து மக்களுக்கு மத்தியில் பெண்களுக்கு இயற்கையாக நிகழக்கூடிய மாதவிடாய் பெரிய தீட்டாக பார்க்கப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி,மன மாற்றம், எரிச்சல்,அதீத கோபம் ஆகியவை ஏற்படும். அவை எல்லாவற்றையும் தாண்டி சகஜமாக பெண்கள் இன்று வெளியில் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்றளவும் மாதவிடாய் காரணமாய் வைத்து கடைபிடிக்கிற ஒர் அவலத்தைப் பற்றிய கதை தான் இது. வேதங்களும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் தீட்டு, அவள் அசுத்தமானவள் என்றெல்லாம் சொல்வதால் மக்கள் மிகத் தீவிரமாக அதை நம்பத் துவங்கிவிட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேபாள் :

நேபாள் :

நேபளத்தின் மேற்கு பகுதியில் வாழக்கூடிய மக்கள் மத்தியில் ஒர் வழக்கம் இருக்கிறது. அப்பகுதியில் வாழும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால்,மாதவிடாய் இருக்கிற நாட்கள் முழுவதும் சிறிய குடிசையில் தங்க வைக்கப்படுகிறார்கள். மாதவிடாய் மட்டுமல்ல, குழந்தை பிறந்து பிறகு நிகழும் உதிரப் போக்கின் போதும் அதே நிலைமைதான்.

அந்த சிறிய குடிசை எந்த அடிப்படை வசதிகளும் இல்லாது குப்பை மேடாக காட்சியளிக்கிறது. ஒருவர் கால் விரித்து படுக்கும் அளவிற்குத் தான் அந்த இடத்தின் அகலமே இருக்கிறது.

Image Courtesy

சூழல் :

சூழல் :

2018 ஜனவரி முதல் வாரத்தில் மாதவிடாய் ஏற்பட்டு சிறிய குடிசையில் படுத்திருந்த சிறுமி மரணமடைந்து கிடந்தார். அதுவும் இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் தெரிந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்தது அச்சாம் மாவட்டத்தின் டுர்முக்காட் என்ற கிராம பகுதி.

ஆரம்ப கட்ட விசாரணையில், மரணமடைந்தவர் 23 வயதேயான கௌரி பயாக் என்று தெரியவந்திருக்கிறது.

Image Courtesy

மரணம் :

மரணம் :

உட்கார்ந்தால் தலை முட்டும் அளவிற்குத் தான் அந்த குடிசையின் கூரை இருக்கிறது. அந்த குடிசையில் காற்று புக வேண்டும் என்று சொன்னால் வாசல் மட்டுமே வழி உள்ளே எந்த ஜன்னலும் இருக்காது.

இறந்த போன கௌரி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தான் இறந்து போயிருக்கிறார். அந்த சிறிய குடிசையின் சுவர் முழுவதும் மாட்டுச் சாணத்தால் மொழுகியிருக்கிறார்கள். அதன் தீவிர நாற்றத்தாலும் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுண்டு.

கடந்த பத்து வருடங்களில் மட்டும், இந்த குடிசையில் தங்களின் மாதவிடாய் காலத்தில் இருந்த பெண்களில் ஒன்பது பேர் வரை இறந்து போயிருக்கிறார்கள்.

இது பதிவு செய்யப்பட்ட மரணங்கள், எத்தனையோ மரணங்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை என்பது தான் உண்மை.

Image Courtesy

தடை :

தடை :

தங்களுடைய மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு பல தடைகளை விதிக்கிறார்கள். ரெகுலராக அவர்கள் எடுக்கும் உணவினை சாப்பிடக்கூடாது, குழாய் தண்ணீரிலோ, கிணற்றிலோ தண்ணீர் பிடிக்கக்கூடாது.

அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் தண்ணீர் வைக்கப்படும். சில இடங்களில் இவர்கள் மட்டுமே பயன்படுத்த குழாய் இருக்கிறது.

கோவில் இருக்கும் தெரு வழியாக கூட மாதவிடாய் ஏற்பட்டிருக்கக்கூடிய பெண்கள் செல்லக்கூடாது.

Image Courtesy

நோய்கள் :

நோய்கள் :

இங்கே இந்த பிரச்சனை மட்டுமல்லது, கடுமையான உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகிறது. பலருக்கும் இந்த நேரத்தில் வயிற்றுப்போக்கு, மூச்சுப் பிரச்சனை ஆகியவை ஏற்படுகிறது. சில நேரங்கள் விஷப்பூச்சிகள், பாம்பு ஆகியவை தாக்கியும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

அந்த மக்களே ஒவ்வொரு பெண்கள் எவ்வளவு காலம் வரை அந்த குடிசையில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறார்கள். மாதவிடாய் வருகிறதோ அல்லது முடிந்து விட்டதோ அந்த குறிப்பிட்ட நாட்கள் அந்த குடிசைக்குள் தான் இருக்க வேண்டும்.

திருமணமாகத பெண்கள் என்றால் ஆறு நாட்கள் வரை உள்ளே இருக்க வேண்டும், திருமணமாகி இரண்டு குழந்தைகள் அதிலும் ஆண் குழந்தைகள் அல்லது ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் என்றால் ஐந்து நாட்கள்,இரண்டுமே பெண் அல்லது ஒரேயொரு பெண் குழந்தை என்று சொன்னால் ஏழு நாட்கள் வரை அந்த குடிசைக்குள் இருக்க வேண்டும்.

Image Courtesy

மன்னிப்பு :

மன்னிப்பு :

மாதவிடாய் காலத்தில் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும், அதனால் குடும்பத்திற்கு பெரும் தீங்கு ஏற்படும் என்றெல்லாம் சொல்லி வைத்திருப்பதால் பெண்கள் கடுமையாக இதனை கடைபிடிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

அப்படி தவறுதலாக கடைபிடிக்க முடியவில்லை என்றாலும், கடவுளிடம் மன்னிப்பு கேட்கும் சடங்கு முறை ஒன்றும் நடத்தப்படுகிறது.

யதார்த்தமாக, இயற்கையாக நடக்கிற சில அசம்பாவிதங்கள் கூட மாதவிடாயின் போது சரியாக நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்று இவர்கள் மீது தான் திருப்பப்படுகிறது.

Image Courtesy

 அனுபவம் :

அனுபவம் :

தன்னுடைய பன்னிரெண்டு வயதிலிருந்து அந்த கொடூரத்தை அனுபவித்து வரும் பெண் ஒருவர் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவற்றில் அவர் கூறிய ஒவ்வொன்றும் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அந்த குடிசையில் விரித்துப் படுக்க ஒரேயொரு பாய் மட்டும் தான் கொடுப்பார்கள். பெட்ஷீட் எதுவும் இருக்காது. கொசு கடி, குளிர் எல்லாவற்றையும் தாண்டி அங்கே கிடப்போம். பிற நாட்களில் ஒன்றும் தெரியாது. ஆனால் குளிர் காலங்களில் எல்லாம்.

அப்படியே குளிரில் நடுங்கியே இறந்து விடுவேன் என்று பயந்திருக்கிறேன்.

Image Courtesy

இருக்கும் பக்கம் :

இருக்கும் பக்கம் :

பன்னிரெண்டு வயதான போது எனக்கு முதன் முதலாக மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது பதிமூன்று நாட்கள் வரை ச்சாவ் கோத் எனப்படுகிற அந்த குடிசை வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். எங்கள் வீடு அமைந்திருக்கும் திசை பக்கம் கூட நான் திரும்பக்கூடாது என்றார்கள். என் குடும்ப உறுப்பினர்கள் யாரிடத்திலும் நான் பேசக்கூடாது குறிப்பாக ஆண்களிடத்தில் பேசவே கூடாது.

எனக்கு பப்பாளிப் பழம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் மாதவிடாய் காலத்தில் பப்பாளிப் பழம் சாப்பிடக்கூடாது. அது புனிதமான பழம். அதை நீ தொட்டால் பப்பாளி மரம் அழுகி விடும். அடுத்து நல்ல விளைச்சலை கொடுக்காது என்றார்கள்.

Image Courtesy

பால் :

பால் :

இதேபோலத் தான் பால். மாதவிடாய் காலங்களில் நாங்கள் பால் குடிக்கக்கூடாது. பசுமாடு லட்சுமி மாதா. லட்சுமி மாதா கொடுக்கிற வரம் தான் பால் மாதவிடாயின் போது பால் குடித்தால் அது லட்சுமியை அவமதிப்பதற்கு சமம்.

அதன் பிறகு லட்சுமியின் அருள் நமக்கு கிடைக்காது என்பார்கள். அதே போல மாதவிடாய் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கவும் தடை. தண்ணீர் பிடிக்கக்கூடாது, உணவு சமைக்கக்கூடாது இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

மாதவிடாய் முடிந்த பிறகு தலைக்குளித்து புதுத்துணி அணிந்து கொள்ள வேண்டும். சிறிதளவு மாட்டின் சிறுநீரை குடிக்கச் சொல்வார்கள். இப்படி குடிப்பதினால் நாம் சுத்தமாவோம் என்று சொல்லப்படுகிறது.

 21 ஆம் நூற்றாண்டு :

21 ஆம் நூற்றாண்டு :

பள்ளியில் பாடத்திட்டங்களில் மாதவிடாய் என்றால் என்ன? அது எப்படி நிகழ்கிறது என்பது குறித்தெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு, இயற்கையாக நிகழக்கூடியவற்றிற்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்.

இது எதுவும் அந்தப் பெண்ணின் தவறு கிடையாதே, இயற்கையாய் நிகழக்கூடிய ஓர் விஷயம் அதற்கு ஏன் அந்தப் பெண்களை இவ்வளவு சிரமப்படுத்த வேண்டும். எல்லாம் தெரிந்த பிறகும் இதை நாம் அனுமதிக்ககூடாது.

இந்த நூற்றாண்டிலும் கூட பெண்கள் அத்தகைய சிரமங்களை சந்திப்பது கொடுமை என்று நினைத்த மக்களை இதிலிருந்து மீட்க வேண்டும் என்று உறுதியெடுத்தேன்.

Image Courtesy

சட்டம் :

சட்டம் :

தீவிர பிரச்சாரம், போராட்டத்தின் பலனாக நேபாள பாராளுமன்றத்தில் இந்த நடைமுறை கிரிமினல் குற்றம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி, ஒரு பெண் தன்னுடைய மாதவிடாய் காலத்தில் குறிப்பிட்ட குடிசையில் தங்க வைக்கப்படுவது குற்றம், அங்க தங்கச் சொல்லி நிர்பந்திப்பதும் குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

மேலோட்டமாகத்தான் இது இருக்கிறது. இன்னமும் கிராமங்களில் எல்லாம் இந்த நடைமுறை இருக்கிறது. மக்கள் மனதில் மாதவிடாய் என்றால் அசுத்தம் என்ற வேரூன்றியிருக்ககூடிய எண்ணத்தை முதலில் கலைக்க வேண்டும் இயற்றப்படுகிற சட்டங்களால் மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வர முடியாது.

Image Courtesy

அரசியல் :

அரசியல் :

பல காலங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒர் பழக்கத்தை கைவிடுவது குறித்து அந்த மக்களுக்கு இருக்கக்கூடிய அச்சத்தை போக்க வேண்டியது தான் முதன்மையான கடமை. பெண்கள், சமூக நல ஆர்வலர்கள் மட்டுமின்றி அரசாங்கமும் இதற்கு முனைப்பு காட்ட வேண்டும்.

எங்கே இந்த விஷயத்தை ஆதரித்தால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடுமோ, அதனால் தன்னுடைய அரசியல் வாழ்க்கை பாழடைந்து விடுமோ என்று பயந்தே மக்கள் மத்தியில் இது குறித்து பேசவே தயக்கம் காட்டுகின்றன அங்கிருக்கும் அரசியல் கட்சிகள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life women
English summary

Shocking Tradition in Nepal Followed by women

Shocking Tradition in Nepal Followed by women
Story first published: Tuesday, June 5, 2018, 15:11 [IST]
Desktop Bottom Promotion