For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் காலத்தில் இதை 8 மணி நேரத்துக்கும் அதிகமா பயன்படுத்துறீங்களா?

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய டேம்பூனை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து உண்மை சம்பவம்

|

மாதவிடாய் தொடர்பான விஷயங்களை இப்போது தான் மெல்ல வெளியப் பேச ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் இன்னமும் மாதவிடாய் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய சுத்தமான விஷயங்களைப் பற்றி முழுமையாக யாருக்கும் தெரியவில்லை. ஒரு பக்கம் மாதவிடாய் நேரத்தில் தீட்டு என்று சொல்லி தனிமைப்படுத்துவது என்றால் அந்த நேரத்தில் பயன்படுத்தக்கூடிய பேட், அதனை எப்படி அப்புறப்படுத்த வேண்டும், அதனை எத்தனை மணி நேரங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல தகவல்களை அரசல் புரசலாகத்தான் கேள்விப்படுகிறோம்.

மாதவிடாய் காலங்களில் பேட் பயன்படுத்துவது எவ்வளவு அத்தியாவசியமானதோ அதேயளவு அக்கறையை அவற்றை அப்புறப்படுத்துவதிலும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லைஎன்றால் என்னாகும் என்று கேட்பவர்களுக்காகத் தான் இந்த கட்டுரை.

வெளிநாடுகளில் பேடுக்கு பதிலாக மாதவிடாய் காலங்களில் டேம்பூன் பயன்படுத்துவார்கள். உதிரப்போக்கை இந்த டேம்பூன் உறிந்து கொள்ளும். இவற்றை குறிப்பிட்ட நேர இடைவெளியில் நாம் மாற்ற வேண்டும். அப்படி மாற்றாமல் விட்டதால் பெண்ணொருவர் தன் காலையே இழந்திருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரண வாயில் :

மரண வாயில் :

மாடலும் சமூகநல ஆர்வலருமான லவுரன் வாசர் கடந்த 2012 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்று வந்துவிட்டார் என்று சொல்லலாம். முதலில் அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் 29 வயதான லவுரனுக்கு மாரடைப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதன் பிறகு மாரடைப்பும் ஏற்பட்டதால் செயற்கை சுவாசக் கருவிகளுடன் சில நாட்கள் கழிந்தது.

இவை எல்லாம் முடிந்து வீட்டிற்கு திரும்பி நீண்ட நாட்கள் மகிழ்சியுடன் இருக்க முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு இவரது வலது கால் துண்டிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவை அத்தனையும் ஏற்படுவதற்கு காரணமாகவும் ஆரம்ப புள்ளியாகவும் இருந்தது என்ன தெரியுமா? தன்னுடைய மாதவிடாய் காலத்தில் நீண்ட நேரம் டேம்பூனை பயன்படுத்தியது தான்.

8 மணி நேரம் :

8 மணி நேரம் :

அதிகபட்சமாக ஒரு டேம்பூனை எட்டுமணி நேரங்கள் வரை பயன்படுத்தலாம் அதன் பிறகு அதனை மாற்றி புது டேம்பூன் வைத்துக் கொள்ள வேண்டும். அன்று லவுரன் எட்டு மணி நேரத்தையும் தாண்டி தான் வைத்திருந்த டேம்பூனை மாற்றவில்லை.இரண்டு நாட்கள் கழித்து அதன் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்திருக்கிறது.

முதலில் லவுரனு டிஎஸ்டி எனப்படக்கூடிய டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார்கள்.

டேம்பூன் :

டேம்பூன் :

இது டேம்பூனில் இருக்கிற சின்தடிக் ஃபைபரினால் உண்டாகக்கூடியது. டேம்பூன் நீண்ட நேரம் வைத்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த லவுரனுக்கு வலது கால் முற்றிலும் அகற்ற வேண்டிய நிலைமை இடது காலிலும் விரல்கள் எல்லாம் பாதிக்கப்பட்டது.

மருத்துவர்கள் இடது காலை காப்பாற்ற 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருக்கிறது அதனால் இரண்டு கால்களையும் அகற்றிவிடுவது தான் நல்லது என்றார்கள். ஆனால் லவுரன் ஒப்புக்கொள்ளவில்லை.

போராட்டம் :

போராட்டம் :

வலது காலை இழந்து இடது காலை காப்பாற்றிக் கொள்ள துவங்கிய போராட்டம் இன்று இந்த நோய் குறித்து விழிப்புணர்வையும் டேம்பூனில் அளவுக்கு அதிகமான ரசாயனம் ஏற்றும் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதிலும் மும்முரமாக இருக்கிறார் லவுரன்.

என்னென்ன இருக்கிறது :

என்னென்ன இருக்கிறது :

சந்தையில் கிடைக்கக்கூடிய டேம்பூனில் என்னென்ன இருக்கிறது தெரியுமா? அவற்றில் பஞ்சு மட்டும் இருப்பதில்லை அதையும் தாண்டி ப்ளாஸ்டிக் இருக்கிறது இதோடு சிந்தட்டிக் பொருட்களான பாலிப்ராபிலின், விஸ்கோஸ், பாலிதைலின் ஆகியவை இருக்கும்.

அன்று என்ன நடந்தது :

அன்று என்ன நடந்தது :

அக்டோபர் 3, 2012 ஆம் ஆண்டு. அப்போது லவுரனுக்கு 24 வயது. லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்துக் கொண்டிருந்தார். அன்றைக்கு லவுரனுக்கு மாதவிடாய் அன்றைய தினம் காலை தான், தன்னிடம் மாதவிடாய் அன்று பயன்படுத்தக்கூடிய டேம்பூன் ஸ்டாக் இல்லை என்பது தெரிய வருகிறது.

கடை தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து பத்தடி தொலைவில் தான் இருக்கிறது. ஆனால் எழுந்து கீழே செல்ல முடியவில்லை.

பார்ட்டி :

பார்ட்டி :

ஒரு பக்கம் எழுந்து சென்று டேம்பூன் வாங்க வேண்டும், மிகவும் சோர்வாக உணர்ந்தார் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய சாதரண சோர்வு தானே ஒய்வு எடுத்தால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று நினைத்து தூங்கினார். அன்று மாலை தான் லவுரனின் தோழியின் பிறந்த நாள் பார்ட்டி இருந்தது.

தூங்கி எழுந்தார் முன்பை விட பயங்கர சோர்வு கண்கள் எல்லாம் எரிச்சலாய் இருந்தது. தோழிக்கு போன் செய்து எனக்கு உடம்பு முடியவில்லை என்னால் பார்ட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.

அம்மாவிடமிருந்து... :

அம்மாவிடமிருந்து... :

மதியம் ஆகிவிட்டிருந்தது எழுந்து சென்று குளிக்கக்கூட உடலில் தெம்பு இல்லாததைப் போல சோர்வாக உணர்ந்தேன். இனியும் டேம்பூனை மாற்றாமல் இருக்க முடியாது என்று சொல்லி நானே கடைக்குச் சென்று டேம்பூனை வாங்கி வந்து மாற்றிக் கொண்டேன். ஆனால் சோர்வு கொஞ்சம் கூட குறையவில்லை. அந்நேரம் அம்மாவிடமிருந்து போன் வந்தது

போலீஸ் :

போலீஸ் :

நான் அரை மயக்கத்தில் இருந்தேன் போனை எடுக்க முடியவில்லை . தொடர்ந்து போன் செய்திருக்கிறார் நான் எடுக்கவில்லை என்றதும் அம்மா போலீஸுக்கு போன் செய்துவிட்டார். போலீஸ் வந்து கதவைத் தட்டுகிறது ஐந்து நிமிடத்திற்கும் மேலாக தட்டுகிறார்கள். நானும் தட்டுத்தடுமாறி எழுந்து போய் கதவைத் திறந்தேன்.

என்னையும் இறைந்து கிடக்கும் சாமான்களையும் பார்த்து விட்டு உங்களுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை என்று நினைக்கிறோம். நீங்கள் உடனடியாக உங்கள் அம்மாவிடம் பேசுங்கள். அவர் தான் எங்களை சென்று பார்த்துவரச் சொன்னார் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

 காலையில் பார்த்துக் கொள்ளலாம் :

காலையில் பார்த்துக் கொள்ளலாம் :

முகத்தை கழுவிக் கொண்டு உட்கார்ந்தேன் அம்மாவுக்கு போன் செய்தேன். என் முதல் வார்த்தையிலேயே என் நிலைமையை புரிந்து கொண்டுவிட்டார். உடனடியாக மருத்துவமனைக்குச் செல் என்று அறிவுரை கூறினார். ஆம்புலன்ஸை வரச் சொல்லவா என்று கேட்டார்.

இல்லை அம்மா இது மாதவிடாய் என்பதில் மிகவும் சோர்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன் காலையில் பார்த்துக் கொள்லலாம் என்று சொல்லிவிட்டேன்.

108 டிகிரி :

108 டிகிரி :

இரண்டு மணி நேரம் கழித்து அம்மா மீண்டும் போன் செய்திருக்கிறார் அப்போதும் நான் போன் எடுக்கவில்லை என்றதும் அம்மா மீண்டும் போலீஸ் உதவியை நாடியிருக்கிறார். அவர்களும் மறுமுறை சென்று பார்க்க ஒப்புக் கொண்டு என்னைத் தேடி வந்தார்கள். இப்போது நான் தரையில் விழுந்து கிடக்கிறேன்.

வாந்தி எடுத்திருந்தேன். போலீசார் வந்து என்னை தட்டி எழுப்புகிறார்கள் ஆனால் நான் எழுந்தரிக்கவேயில்லை காய்ச்சல் 108 டிகிரி கொதித்துக் கொண்டிருந்ததாம். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்.

மருத்துவர்கள் குழப்பம் :

மருத்துவர்கள் குழப்பம் :

24வயது பெண்ணுக்கு என்ன உடல் உபாதை இருந்துவிடப்போகிறது. அதுவும் இவ்வளவு தீவிரமான பிரச்சனையின் காரணம் என்ன என்று முதலில் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் காய்ச்சலை குறைக்க மருந்து கொடுத்தார்கள்.அவை எதுவும் வேலை செய்யவில்லை அப்போது தான் மருத்துவர்கள் நான் டேம்பூன் பயன்படுத்தியதை உறுதி செய்து அந்த டேம்பூனை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினார்கள்.

அதன் ரிசல்ட் வர மூன்று நாட்கள் ஆனது.

மூன்று நாட்களில் :

மூன்று நாட்களில் :

அந்த மூன்று நாட்களில் ஏகப்பட்ட குழப்பங்கள். நான் சில நாட்கள் கோமாவுக்கு சென்றுவிட்டேன். என் உள்ளுறுப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டே வந்தன. ரத்த அழுத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது.காய்ச்சலையும் கட்டுப்படுத்த முடியவில்லை அது அதிகரித்துக் கொண்டே போனது.மூன்று நாட்கள் கழித்து டேம்பூன் டெஸ்ட் செய்த லேபிலிருந்து ரிசல்ட் வந்தது. அதை வைத்து எனக்கு ஏற்பட்டிருப்பது டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் என்பதை கண்டுபிடித்தார்கள் மருத்துவர்கள்.

ஒரு வாரம் :

ஒரு வாரம் :

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து நான் கண் விழித்தேன். நான் எங்கேயிருக்கிறேன் எனக்கு என்ன நடந்தது எதுவும் தெரியவில்லை. உள்ளுறுப்புகளை காப்பாற்ற,ரத்த அழுத்தத்தை சீராக்க,மாரடைப்பிற்கு என ஏராளமான சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

அவற்றிலிருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு அடி என் கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பித்தது. வலது கால் முற்றிலும் அழுகிய நிலையில் இடது கால் விரல்கள் மட்டும் பாதிப்படைந்தன.

தோழி :

தோழி :

இவற்றையெல்லாம் கடந்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்னுடைய தோழி ஜெனிஃபர் ரோவெரோ என்னை விதவிதமாக புகைப்படமெடுத்தார். இதற்கு போட்டோ தெரபி என்று அவள் சொன்னாள் அதாவது படிப்படியாக என் முன்னேற்றங்களை புகைப்படமெடுத்து தருவாள் அது ஒரு வகையில் எனக்கு உந்துசக்தியாக இருக்கும் .

அப்போது தான் பெண்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

வெப்சைட் :

வெப்சைட் :

தோழி ஜெனிஃபர் மூலமாக யூ ஆர் லவுட் என்ற இணையதளப் பக்கம் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தேன். அதனை லிசா என்பவர் ஆரம்பித்திருக்கிறார்.

இவரது மகள் ஏமி. இதே டிஎஸ்எஸ் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அந்த இணையத்தில் தன் மகளைப் பற்றியும் மகளை பாதித்த நோய் குறித்தும் பகிர்ந்திருந்தார்.

அதோடு டேம்பூன் குறித்து ஆபத்துக்களையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதியிருந்தார்.

பல பெண்கள் :

பல பெண்கள் :

இதன்மூலமாக நானும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். நாங்கள் களத்தில் இறங்கி தேடிய போது தான் பலரும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்க முடிந்தது.

பதினைந்து வயதில்,பதினாறு வயதிலேயே சிறுமிகள் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு இதயம் மறும் கிட்னி தொடர்பான பிரச்சனைகள் அதிகமிருந்தன.

விளம்பரங்கள் :

விளம்பரங்கள் :

தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்து குரல் கொடுக்க ஆரம்பித்தோம். தயாரிப்பு நிறுவனங்களில் கேள்வி கேட்க ஆரம்பித்தோம்.

டிவியில் சில பொருட்கள் குறிப்பாக போதைப் பொருள்கள் குறித்தான விளம்பரம் காட்டப்படும் போது இது உடல்நலத்திற்கு தீங்கானது என்ற வாசகமோ அல்லது ஓர் குரலோ இடம்பெறும். ஆனால் இவ்வளவு தீங்கு நிறைந்த டேம்பூன் விளம்பரத்தின் போது சில டீன் ஏஜ் பெண்கள் பிகினி உடையில் சந்தோஷமாக குதித்து விளையாடுவது போலகாட்டுவாரக்ள். அதிலிருக்கும் கெமிக்கல்கள் குறித்து ஒரு விழிப்புணர்வு வாசகமும் இடம்பெறாது.

ஒன்றே ஒன்று மட்டும் :

ஒன்றே ஒன்று மட்டும் :

இடது காலை காப்பாற்றி விட வேண்டும் என்று தொடர்ந்து போராடிய போதும் லவுரனின் போராட்டம் 2018 ஜனவரியில் முடிவுக்கு வந்தது. ஆம், இடது காலையும் ஆப்ரேசன் செய்து எடுத்தார்கள். இது போல பிறரும் பாதிக்கப்படாமல் இருக்க தொடர்ந்து போராடுவேன் என்கிறார் லவுரென்.

இதற்காக ராபின் டேனில்சன் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த பெண்மணி 1998 ஆம் ஆண்டில் டிஎஸ்எஸ் பிரச்சனையினால் உயிரிழந்தவர் ஆவார்.

பத்து முறை :

பத்து முறை :

இந்த சட்டத்தின் படி பெண்களின் அத்தியாவசியாம இந்த பொருட்களில் என்னென்ன கலந்திருக்கிறது. இவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். இது பத்துக்கும் மேற்பட்ட முறை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக சட்டம் கொண்டு வரவும் விழிப்புணர்வும் ஏற்படுத்தவும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார் லாரென்.

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life women periods
English summary

Shocking Story About a Girl whose on her periods

Shocking Story About a Girl whose on her periods
Story first published: Wednesday, April 18, 2018, 18:10 [IST]
Desktop Bottom Promotion