For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனுதினமும் செக்ஸுவல் டார்ச்சர், கிம் அரசு மீது அந்நாட்டு பெண்கள் பகிரங்க புகார்!

|

வட கொரியாவின் அரசு அதிகாரிகள் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. அவர்களுக்கு தண்டனை குறித்து எந்த அச்சமும் இல்லை.

அவர்கள் இதற்காக தண்டனை பெறப் போவதும் இல்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையமான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (HRW - Human Rights Watch ) அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Sexual Abuse is Common in North Korea. Says, Human Rights Watch Report.

வட கொரியாவில் பெண்களுக்கு எதிராக அரசு அதிகாரிகள் ஈடுபடும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இது அந்நாட்டு பெண்களுக்கு தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி என்பது போல மாறிவிட்டது என்று மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
62 பெண்கள்!

62 பெண்கள்!

வட கொரியாவில் இருந்து தப்பித்து வேறு நாட்டுக்கு சென்ற 62 பெண்களிடம் மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் நடத்தியப் பேட்டியின் போது, அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள், செக்ஸுவல் வன்புணர்வு நிகழ்வுகள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து கூறி இருந்தனர்.

தண்டனை இல்லை!

தண்டனை இல்லை!

அந்த பெண்கள், ''பெண்களுக்கு எதிராக நிறைய வன்கொடுமை நடக்கிறது. இது பெரிதும் புகார்களாக பதிவாவதில்லை. பெரும்பாலும் இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஆகையால், அவர்களுக்கு எந்த வகையிலான தண்டனையும் கிடைக்கப்போவதில்லை என்பதால், தொடர்ந்து பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள்'' என்று கூறி இருக்கிறார்கள்.

அதிகார வர்க ஆண்கள்!

அதிகார வர்க ஆண்கள்!

'வட கொரியாவின் அதிகார வர்க்க ஆண்கள் எங்களை (பெண்களை) செக்ஸ் பொம்மைகளை போல பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் அவர்களிடம் கருணையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறோம்', என வட கொரியாவில் இருந்து தப்பித்து வந்த நாற்பது வயதுமிக்க பெண்மணி ஒருவர் கூறி இருக்கிறார்.

கண்ணீர்!

கண்ணீர்!

சில சமயங்களில் என்ன செய்வதென்ற வழி தெரியாமல் இரவுகளில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்போம். இந்த கொடுமைகள் குறித்த ஆவணங்கள், தகவல்கள், ஆதாரங்கள் திரட்டுவது மிகவும் கடினம் என்றும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

அனுதினமும்!

அனுதினமும்!

மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி சில பெண்கள், ''பெண்களுக்கு எதிரான செக்ஸுவல் டார்ச்சர் அன்றாட வாழ்வில் தினமும் நடக்கும் ஒரு காரியம் போல மாறிவிட்டது. இதை அசாதாரண விஷயாமாக எங்களால் காண இயலாது. சில பெண்கள், இது தங்கள் வாழ்வில் தினமும் நடக்கும் செயல்களில் ஒன்று என்பது போல கருதி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்'' கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு இல்லை!

விழிப்புணர்வு இல்லை!

இதற்கு முக்கிய காரணம் வட கொரியா நாட்டு பெண்கள் மத்தியில் செக்ஸுவல் எஜுகேஷன் குறித்த புரிதல் அல்லது விழிப்புணர்வு மிகவும் குறைவு. மேலும், அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்க. இத்தகைய தவறுகளில் ஈடுபடுவது அவர்களை மனதளவில் பெருமளவு பாதித்துள்ளது.

இந்த தவறுகளை செய்யும் சில அதிகாரிகள் பெரும் பதவியிலும், சிறைச்சாலை அதிகாரிகளாகவும், காவலர்கள் மற்றும் இராணுவத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவலர்...

காவலர்...

மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்திடம் பேட்டி அளித்த ஒரு பெண் கூறுகையில், ''ஒருமுறை நாட்டைவிட்டு தப்பிக்கும் போது நான் காவல் அதிகாரி ஒருவரிடம் மாட்டிக் கொண்டேன். அவர் என்னை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, என்னருகே மிகவும் நெருக்கமாக அமர்ந்துக் கொண்டு, என் கால்களுக்கு நடுவே தொட்டு பேச ஆரம்பித்தார்.

அவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். என் வாழ்க்கை அப்போது அவர் கைகளில் இருந்தது. அவர் விரும்புவதற்கு நான் இணங்கி நடந்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருந்தது.

வேண்டுகோள்!

வேண்டுகோள்!

இந்த பேட்டிக்கு பிறகு மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம், வர கொரிய நாட்டு மக்களிடம், நீங்கள் உங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தைரியமாக குரல் எழுப்ப வேண்டும். இதை குற்றமாக கருதி புகார்கள் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

ஐ.நா அறிக்கை!

ஐ.நா அறிக்கை!

2014ம் ஆண்டு ஐ.நா வெளியிட்ட தகவல் அறிக்கையில், வட கொரியாவில் மனித உரிமை மீறல் பெருமளவு நடந்து வருவதாக வடகொரிய அரசு மீது புகார் சுமத்தப்பட்டது.

அந்த புகாரில் கட்டாயப்படுத்தி கற்பழிப்பது, கருக்கலைப்பு செய்வது, பாலியல் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தன.

முக்கியமாக சிறைகளில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய கொடுமைகள் அதிகமாக நடப்பதாக கூறிப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sexual Abuse is Common in North Korea. Says, Human Rights Watch Report.

In Recent Report, HRW (Human Rights Watch) Reveals That Sexual Abuse in North Korea is Very Common. North Korean Officials Commits Sexual Abuse Against Women with Near Total Impunity.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more