For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நர்ஸ்கள் தங்கள் அனுபவத்தில் கண்ட அதிர்ச்சியான விஷயங்கள் குறித்து கூறிய வாக்குமூலங்கள்!

எங்கள் வேலையும் அவ்வளவு எளிதானது அல்ல, நர்ஸ்கள் கூறிய அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலங்கள்!

By Staff
|

இந்த உலகில் இருக்கும் புனிதமான வேலை எது என்று கேட்டாள்... இரண்டு தான்... ஒன்று துப்புரவு... மற்றொன்று மருத்துவம். இவர்கள் எதை கண்டும் முகம் சுளிக்க மாட்டார்கள்.

தாங்கள் எதிர்கொள்ளும் நபர்கள் எப்படி நடந்துக் கொண்டாலும் முகத்தை சாந்தமாக வைத்துக் கொள்வார்கள். எத்தனை சங்கடங்கள் இருந்தாலும் அடுத்த நாள் அதை காட்டிக் கொள்ளாமல் தங்கள் வேலைக்கு புறப்பட்டு விடுவார்கள்.

Secret Confessions: Shocking Secrets Revealed By Nurses From Their Job Experience

நர்ஸ் வேலை பார்ப்பவர்கள் நிஜமாகவே கடவுளுக்கு நிகரானவர்கள். நமது சினிமாக்களில் தான் அவர்களை கவர்ச்சி பொருளாக காண்பித்து கொச்சைப் படுத்துகிறார்கள்.

தங்கள் வேலை முறை, வாழ்க்கை முறை, கடந்து வந்த மோசமான, நெகிழ்ச்சியான அனுபவங்கள் குறித்து நர்ஸ்கள் கூறியுள்ள இரகசிய வாக்கு மூலங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாய்!

நாய்!

நான் நர்ஸாக பணியாற்றி வருகிறேன். ஒரு முறை மிகவும் அபாயமான சிக்கலில் இருந்த நோயாளியை நான் பரமாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவருக்கு குடும்பம் என்று கூறிக் கொள்ள யாரும் இல்லை. அவருக்கு இருந்த ஒரே சொந்தம், அவர் வளர்த்து வந்த நாய் மட்டும் தான். அதை எண்ணி அவர் வருந்தி வந்தார்.

சரி! உங்கள் நாயை நான் அழைத்து வருகிறேன் என்று சத்தியம் செய்து வேலை முடித்துவிட்டு கிளம்பினேன். மறுநாள் நான் அவரது நாயை அழைத்துக் கொண்டு வேலைக்கு வந்த போது அவர் மரணம் அடைந்திருந்தார். இதுநாள் வரை அந்த நாயை நான் தான் பராமரித்து வருகிறேன்.

அழுகை!

அழுகை!

நான் பிரசவ பிரிவில் நர்சாக வேலை செய்து வருகிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் போதும், நான் வலிமையாக இருப்பது போல காண்பித்துக் கொள்வேன். அப்போது தான் அவர்களை தைரியப்படுத்த முடியும்.

ஆனால், நான் பிரசவம் பார்க்கும் போது யாருக்கேனும் குழந்தை இறந்து பிறந்தாளோ, பிறந்த பிறகு இறந்தாலோ... என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. என் காருக்குள் உட்கார்ந்து அடக்க முடியாத அளவிற்கு அழுவேன். அந்த அழுகை மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும்.

 3 மணி நேரம்...

3 மணி நேரம்...

எனக்கு அன்று திருமண நாள்... அன்று தான் எங்கள் பந்தத்தின் கடைசி நாளும் கூட. நான் திருமணம் செய்துக் கொண்ட பெண் நீண்ட காலமாக இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர். நாங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்ட அடுத்த மூன்று மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.

குறைந்தபட்சம் வலியுடன் மட்டும் இறக்காமல், கொஞ்சம் மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் இறந்தார். சில சமயங்களில் நர்ஸ் வேலை பார்பவர்களது வேலையானது மருந்து கொடுப்பதை தாண்டி, அவர்களது நோயாளிகளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டியதாக தான் இருக்கிறது. இது தான் முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

கற்பழித்தவன்!

கற்பழித்தவன்!

நான் தீவிர சிகிச்சை பிரிவில் நர்ஸாக பணியாற்றி வருகிறேன். ஒரு இரவில் அவசர சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவனை என்னால் அவர் யார் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

ஆனால், அவனது உடலில் இருந்து கடித்த தழும்பும், கீறிய காய தழும்புகள் கண்டு... அவன் என்னை முன்னர் கற்பழித்தவன் என்பதை அறிந்துக் கொண்டேன். அன்றைய இரவு வரை போலீஸாரிடம் சிக்காமல் தப்பித்து வந்திருந்தான். அன்று அவன் சிக்கியது என்னிடம் மட்டுமல்ல...

முரண்!

முரண்!

பொதுவாகவே நர்ஸ் வேலை என்பது பெண்கள் பார்ப்பது, மெக்கானிக் வேலை என்பது ஆண்கள் பார்ப்பது என்ற எண்ணம் உலகளவில் காணப்படுகிறது. ஆனால், எங்கள் வாழ்வில் இது கொஞ்சம் முரணாக அமைந்தது. ஆம்! நான் ஒரு நர்ஸாக பணியாற்றி வருகிறேன். எனது மனைவி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். எங்களை புதியதாக பார்ப்பவர்களுக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.

கடவுள் நம்பிக்கை!

கடவுள் நம்பிக்கை!

நான் நீண்ட காலமாக நர்ஸ் வேலை செய்து வருகிறேன். எனக்கு அறிவியல் மற்றும் மருத்துவத்தில் இருக்கும் நம்பிக்கை கடவுள் மீதில்லை. நான் ஒரு போதும் கடவுளை வணங்கியது இல்லை.

ஆனால், எப்போதெல்லாம் நான் பராமரித்து, சேவை செய்து வரும் நோயாளிகள் இறக்கும் தருவாய் நெருங்குகிறார்களோ, அப்போதெல்லாம், அவர்கள் கையை பிடித்துக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன்.

மாற்றம்!

மாற்றம்!

நான் பிரசவ பிரிவில் நர்ஸாக வேலை செய்து வருகிறேன். ஒரு தருணத்தில்... ஒரு சிங்கிள் மதருக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆனால், அவர் இறந்துவிட்டார். அதே சமயத்தில், வேறொரு தம்பதிக்கு பிறந்த குழந்தை சில மறுத்து கோளாறுகளால் பிறந்த சில நேரத்தில் இறந்துவிட்டது. நான், உடனே அந்த குழந்தைகளை மாற்றி வைத்துவிட்டேன்.

அந்த வார்த்தை...

அந்த வார்த்தை...

அன்று நான் பராமரித்து வந்த வயதான மூதாட்டி ஒருவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆக அறையை காலி செய்துக் கொண்டிருந்தார். நான் அப்போது தான் அவரது மருத்துவ கோப்புகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தேன்.

அப்போது அந்த மூதாட்டி, தனது பேத்தியிடம்.. இவள் மிகவும் அன்பாக நடந்துக் கொள்கிறாள்., இவளை போன்ற நர்ஸ்கள் தான் நிறையே தேவை என்று கூறிக் கொண்டிருந்தார்.

அந்த வார்த்தைகள் தான் எத்தனை சிரமங்கள் வந்தாலும் என்னை இந்த நர்ஸ் வேலையில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. நான் ஒரு நர்ஸ் என்பது நான் பெருமிதம் கொள்கிறேன்.

செக்ஸி!

செக்ஸி!

நர்ஸ் என்றாலே அழகாக இருப்பார்கள், செக்ஸியாக இருப்பார்கள் என்ற பிம்பம் சமூகத்தில் இருக்கிறது. இதை முற்றிலும் மாற்ற வேண்டும். நாங்கள் செக்சியானவர்கள் அல்ல, நாங்கள் அழகாக கருதுவது எங்கள் வேலையை தான். இந்த உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் நிர்வாண உடல்களை காண்பவர்கள் நாங்கள் தான்.

அதில், குழந்தைகள், விபத்தில் அடிப்பட்டு வருபவர்கள், இறந்தவர்கள், பிரசவிக்கும் பெண்கள் என நிறைய பேர் இருக்கிறார்கள். இது எங்களுக்கு செக்ஸ் எண்ணத்தை தூண்டுவதில்லை. ஆனால், எங்களை மட்டும் எப்படி மற்றவர்களுக்கு செக்ஸியாக காண முடிகிறது?

வேலை தான் முக்கியம்!

வேலை தான் முக்கியம்!

நர்ஸ் என்றாலே இப்படி தான் இருக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் நமது சமூகத்தில் இருக்கிறது. நாங்கள் எங்களை அழகுப்படுத்திக் கொண்டால்... நீ பார்க்கும் வேலைக்கு இது அவசியமா என்பார்கள். நாங்கள் மற்றவர்களை போல மாடர்னாக இருக்க முடியாது. டாட்டூ குத்திக் கொண்டால் அது அநாகரீகமான செயலாகி விடும்.

நான் எப்படி தோற்றம் அளிக்கிறேன் என்பதை காட்டிலும், நான் எப்படி வேலை செய்கிறேன் என்பது தான் அவசியம் என்று நான் கருதுகிறேன். எல்லாருக்கும் இருப்பது போல சின்ன, சின்ன ஆசைகள், விருப்பங்கள் எங்களுக்குள்ளும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confessions: Shocking Secrets Revealed By Nurses From Their Job Experience

Secret Confessions: Shocking Secrets Revealed By Nurses From Their Job Experience
Desktop Bottom Promotion